செய்திகள் :

சிறையில் இருந்தபடி, குடும்பத்தினரைக் கஞ்சா விற்பனையில் ஈடுபடுத்திய `குண்டாஸ்’ கைதி - மனைவியும் கைது

post image

வேலூர் மாவட்டம், குடியாத்தம் கள்ளூர் நேரு நகரைச் சேர்ந்தவர் சம்சுதீன். இவரின் மகன்கள் முபாரக் (வயது 30), அமீர் உசேன் (23). இவர்கள் இருவரும் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து விற்பனைச் செய்த வழக்கில் கடந்த ஆண்டு கைதுசெய்யப்பட்டனர். பிறகு, இருவர்மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது.

இந்த நிலையில், போதைப்பொருள் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மற்ற கைதிகளுடன் இருவரும் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டனர். இந்த நெட்வொர்க் மூலமாக வெளிமாநிலத்தில் இருந்து `மெத்தபெட்டமைன்’ போன்ற போதைப்பொருள்களை வரவழைத்து உள்ளூரைச் சேர்ந்த தங்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் கைமாற்றி குடியாத்தம் பகுதியில் விற்கத் தொடங்கினார்கள். சிறையிலிருந்தபடி அண்ணன், தம்பி இருவரும் போதைப்பொருள் விற்பனையில் தங்களின் குடும்பத்தினரையும் ஈடுபடுத்தியதை போலீஸார் கண்டுபிடித்தனர்.

குண்டாஸ் கைதி முபாரக் - மனைவி சம்ரீன்

இந்த நிலையில், குடியாத்தம் அடுத்துள்ள லட்சுமணாபுரம் மேம்பால பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், பைக்கில் வந்த இருவரை மடக்கினர். பைக்கில் பின்பக்கம் அமர்ந்திருந்த முபாரக்கின் தந்தை சம்சுதீன் தப்பி ஓடினார். பைக்கை ஓட்டிவந்த குடியாத்தம் ஷெரிப் நகர் நான்காவது தெருவைச் சேர்ந்த அர்மான் சிவா (30) என்பவர் சிக்கினார். அவரிடம் நான்கு கிலோ எடையிலான கஞ்சா இருந்தது. அவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், முபாரக்கின் மனைவி சம்ரீனுக்கும் தொடர்பிருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து, முபாரக்கின் வீட்டுக்குச் சென்ற போலீஸார், அங்கு பதுக்கிவைக்கப்பட்டிருந்த மேலும் நான்கு கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, சிறையிலுள்ள முபாரக் மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். மேலும், முபாரக்கின் மனைவி சம்ரீன் (25) மற்றும் உறவினர் அர்மான் சிவா ஆகிய இருவரையும் கைதுசெய்தனர். தப்பிஓடிய முபாரக்கின் தந்தை சம்சுதீனையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி: மதுபோதையில் தகராறு; இடம் மாறி படுத்திருந்த தொழிலாளர் கொலை செய்யப்பட்ட கொடூரம்

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரத்தைச் சேர்ந்தவர் குமார். சுகாதாரத்துறை ஊழியரான இவர், அய்யனடைப்பு பகுதியில் தனக்குச் சொந்தமான நிலத்தில் வீடு கட்டி வருகிறார். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மனோகரன... மேலும் பார்க்க

பென்னாகரத்தில் சட்ட விரோத மதுக்கடை; அடித்து நொறுக்கிய பெண்கள்; ஓட்டம் பிடித்த உரிமையாளர்

தங்கள் கிராமத்தில் இயங்கி வந்த சட்டவிரோத மது விற்பனைக்கடைகளை கிராமப் பெண்கள் ஒன்றுகூடி அடித்து உடைத்த சம்பவம் தருமபுரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மது வியாபாரி தப்பித்து ஓட்டம்தமிழகத்தில் ... மேலும் பார்க்க

சென்னை: தூங்கிக் கொண்டிருந்த இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை - வீட்டு உரிமையாளரின் மகன் கைது!

சென்னை, தி.நகர் காவல் மாவட்டத்தில் உள்ள வீட்டில் 27 வயதுடைய பெண் ஒருவர் அவரின் அக்காவுடன் வாடகைக்கு வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 25.04.2026-ம் தேதி இரவு, அ... மேலும் பார்க்க

பாவூர்சத்திரம்: போதையில் இளைஞர் அடித்து கொலை; `101'க்கு கால் செய்து நாடகம்- நண்பர் சிக்கியது எப்படி?

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே கல்லூத்து, பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மகன் பிரவீன் (வயது 26), இவரும் அதே ஊரில் வடக்குத் தெரு லிவிங்ஸ்டன் மகன் முகிலன் (எ) வசந்த் (20) இருவரும் சிறு... மேலும் பார்க்க

திருச்சி: பட்டப்பகலில் நகை மதிப்பீட்டாளரை கட்டிப்போட்டு ஒரு கிலோ நகை கொள்ளை! - 5 பேரை தேடும் போலீஸ்

மகாராஷ்டிராவைச் சேர்ந்த உதய் (வயது: 36) என்பவர் திருச்சியில் நகை மதிப்பிடும் பணியைச் செய்து வருகிறார். அவர், குடும்பத்தோடு பெரிய செட்டித் தெருவில் வசித்து வருகிறார். இந்நிலையில், அவரது குடும்பத்தினர் ... மேலும் பார்க்க

மகளிர் விடுதிக்குள் நுழைந்து மாணவியை வன்கொடுமை செய்த மளிகைக்கடைக்காரர் - ஒடிசாவில் அதிர்ச்சி

ஒடிசா மாநிலம் புபனேஷ்வரில் உள்ள கங்காபாடா என்ற இடத்தில் மளிகைக்கடை வைத்திருப்பவர் தீபக் பிரதான்(67). இவரது கடைக்கு அருகில் மகளிர் விடுதி ஒன்று இருக்கிறது. அடிக்கடி அவரது கடை வழியாக பெண்கள் மற்றும் மாண... மேலும் பார்க்க