செய்திகள் :

சித்த மருந்துகளை எடுத்துகொள்ளும் போது ஏன் இறைச்சி சாப்பிடக் கூடாது? இதற்கும் விதிவிலக்கு உண்டு!

post image

'சித்தா மருந்து எடுக்கும் போது, இறைச்சி சாப்பிடலாமா டாக்டர்?' - சித்த மருத்துவர்களிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளில் இதுவும் ஒன்று.

சித்த மருத்துவத்தில் மருந்து மட்டும் முக்கியமல்ல... பத்தியமும் அதே அளவு முக்கியம். சரியான பத்தியம் இல்லாமல் மருந்து எடுத்தால், மருந்தின் வீரியம் குறையலாம் என்பதே சித்த மருத்துவ நிபுணர்கள் கூறும் பொதுக் கருத்து.

அது ஏன்.. அது உண்மையா என்பதை விளக்குகிறார் சித்த மருத்துவர் சங்கீதா...

ஏன் இறைச்சியை தவிர்க்கவேண்டும் ?

சித்த மருந்துகளை உட்கொள்ளும் காலத்தில் சில உணவுகளைத் தவிர்க்கவும், சிலவற்றை மட்டுமே எடுத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்படுவது வழக்கம்.

சித்த மருத்துவர் சங்கீதா
சித்த மருத்துவர் சங்கீதா

காரணம், சில உணவுப் பொருட்கள் மருந்தின் செயல்திறனை குறைக்கக்கூடும், மேலும் ஒவ்வாத விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும்.

சித்த மருந்துகள் பெரும்பாலும் உடலில் வெப்பத்தை அதிகரிக்கும் தன்மை கொண்டதாக கருதப்படுகின்றன. மருந்துகளுடன் இறைச்சி சேர்க்கும் போது அவற்றில் புரதச்சத்து அதிகம் இருப்பதால், அவற்றை மிகுதியாக உட்கொண்டால் சிறுநீரகம் செயல்பாட்டில் அழுத்தம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

மருந்துகள் உடலில் இருந்து வெளியேறுவதும் சிறுநீரக செயல்பாட்டுடன் தொடர்புடையதே.

மேலும் மூளை மற்றும் இதய இரத்தகுழாய்களில் அடைப்புகளை உண்டாக்கி அவற்றையும் பாதிக்கக்கூடும்.

எந்த இறைச்சியை தவிர்க்க வேண்டும்?

சித்த மருந்து எடுத்துக்கொள்ளும் காலத்தில் பொதுவாக கீழ்க்கண்ட இறைச்சி வகைகள் தவிர்க்கப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது:

கோழிக்கறி

கடல் நண்டு

செம்மறி ஆட்டிறைச்சி

மாட்டிறைச்சி

ஊர்ப்பன்றி

சிலவகை மீன் வகைகள் (இறால், கருவாவல், உழுவை, வாளை, கெளுத்தி மீன், நெய் தோலி)

இவை உடலில் வெப்பம், அழற்சி மற்றும் ஒவ்வாமை உண்டாக்கும் என்பதால், பத்திய காலத்தில் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

இறைச்சி
இறைச்சி

'இந்த' இறைச்சிகளைச் சாப்பிடலாம்!

பத்திய காலத்தில் எளிதில் ஜீரணமாகக்கூடிய, அதிக புரதம் மற்றும் குறைந்த கொழுப்பு கொண்ட ஒவ்வாமை ஏற்படுத்தாத இறைச்சி வகைகளை அளவாக எடுத்துக்கொள்ளலாம். அவை...

வெள்ளாட்டுக்கறி (மெலிந்த பகுதி)

கருங்கோழி

காணாங்கோழி

காடை

கௌதாரி

சிறிய வகை மீன்கள் (நெத்திலி, சுதும்பு, வெள்ளைவாவல், பேராரால், சன்னக்கூனி, விரால், அயிரை மீன்)

இவற்றை கறியாக அல்லாமல் சூப் வடிவில் எடுத்துக்கொண்டால் எளிதில் ஜீரணமாகும்.

எந்த நோய்களுக்கு இறைச்சி தவிர்க்க வேண்டும்?

எல்லா நோய்களுக்கும் இறைச்சி முற்றிலும் தடை இல்லை. நோயின் தன்மையைப் பொறுத்தே பத்தியம் மாறும்.

சரும நோய்கள் (Skin diseases), பெரும்பாலான சுரங்கள், அழற்சி அதிகம் உள்ள நோய்கள், கல்லீரல் நோய்கள், சிறுநீரக நோய்கள், புற்று நோய்கள், சிலவகை மூட்டு நோய்கள் (gout) இறைச்சி சாப்பிட்டால் நோயின் தீவிரம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

Doctor Vikatan: தூக்கத்தில் பேசுவது என்பது மனநோய் பாதிப்பின் அறிகுறியா?

Doctor Vikatan: என் உறவினரின் குழந்தைக்கு 10 வயதாகிறது. தினமும் தூக்கத்தில் பேசும் வழக்கம் இருக்கிறது. இது பிற்காலத்திலும் தொடருமா... தூக்கத்தில் பேசுவது என்பது மனநோய் பாதிப்பின் அறிகுறியாக இருக்குமா?... மேலும் பார்க்க

Doctor Vikatan: குழந்தைகளுக்கு தினமும் உருளைக்கிழங்கு கொடுக்கலாமா?

Doctor Vikatan: எனக்கு 10 மற்றும் 12 வயதில் இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இருவருக்குமே தினமும் எந்த உணவாக இருந்தாலும் கூடவே உருளைக்கிழங்கு இருக்க வேண்டும். இல்லாவிட்டால் சாப்பிட மாட்டார்கள். 'தினம... மேலும் பார்க்க

Doctor Vikatan: குறைந்த ரத்த அழுத்தம் (Low BP) இருந்தால்,உப்பு அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டுமா?

Doctor Vikatan: எனக்குப் பல வருடங்களாக குறைந்த ரத்த அழுத்த பாதிப்பு உள்ளது. சில சமயங்களில் அது ரொம்பவும் தீவிரமாகி, தலைச்சுற்றல் ஏற்படும். அப்போது சட்டென உப்பு அதிகமான உணவுகளைச் சாப்பிடுவேன். லோ பிபி ... மேலும் பார்க்க

Doctor Vikatan: அடிபட்ட இடத்தில் ரத்தம் கட்டும்போது அப்படியே விடலாமா, சிகிச்சை எடுக்க வேண்டுமா?

Doctor Vikatan: எங்கேயாவது இடித்துக்கொண்டாலோ, அடிபட்டாலோ அந்த இடத்தில் வீக்கம் ஏற்படுகிறது... சில நேரம் அங்கே ரத்தம் கட்டிக் கொள்கிறது. இதற்கு என்ன செய்ய வேண்டும்... அப்படியே விடலாமா... சிகிச்சை தேவைய... மேலும் பார்க்க

"எனக்கு Prostate-ல் புற்றுநோய்; போர் உச்சத்தில் சொல்ல வேண்டாம் என்று.!"- உடல்நிலை குறித்து நெதன்யாகு

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தன்னுடைய உடல்நிலை குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் இன்று குறிப்பிட்டுள்ளார். அந்தப் பதிவில் தனக்கு புரோஸ்டேட் புற்றுநோய் இருந்தது குறித்து தெரிவித்துள்ளார். நெதன்யாகு தனது எக்ஸ... மேலும் பார்க்க

Doctor Vikatan: லேசர் பொம்மைகள், லேசர் லைட் சூழலில் வேலை; பார்வையைப் பாதிக்கும் என்பது உண்மையா?

Doctor Vikatan: இன்று பல குழந்தைகளும் லேசர் லைட் பொருத்திய பொம்மைகள் வைத்து விளையாடுவதைப் பார்க்கிறோம். லேசர் லைட் பொருத்தப்பட்ட சூழலில் வேலை பார்க்கிறவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். லேசர் லைட்டா... மேலும் பார்க்க