செய்திகள் :

'பேட்டிங் பிட்ச்சில் பௌலர்கள் சாதித்தது எப்படி?' - விளக்கும் ரஜத் பட்டிதர்

post image

ஐபிஎல் 2026-ன் நேற்றைய (ஏப்ரல் 27)  ஆட்டத்தில், டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஒரு இமாலய வெற்றியைப் பதிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, ஆர்சிபி பந்துவீச்சாளர்களின் அனல் பறக்கும் பந்துவீச்சில் நிலை குலைந்து 16.3 ஓவர்களிலேயே 75 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

RCB
RCB

பின்னர் ஆடிய ஆர்சிபி அணி, வெறும் 6.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்து, மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது.

வெற்றி குறித்து ரஜத் படிதார் பேசியவை, "உண்மையைச் சொல்லப்போனால், இந்த வெற்றியின் முழுப் பெருமையும் புவனேஷ்வர் குமார் மற்றும் ஹேசில்வுட் ஆகியோரையே சேரும். அவர்கள் சரியான லெந்தில் பந்துவீசி ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்தியது எங்களுக்குப் பெரும் சாதகமாக அமைந்தது. குறிப்பாக, சுயாஷ் ஸ்டம்புகளை இலக்காகக் கொண்டு துல்லியமாகப் பந்துவீசிய விதம் பாராட்டுக்குரியது.

ஒவ்வொரு போட்டியிலும் எங்களின் வழக்கமான திட்டங்களைச் சரியாகப் பின்பற்றுவது மிகவும் அவசியமாகும்; அந்த வகையில் நாங்கள் ஒவ்வொரு போட்டியையும் ஒரு புதிய தொடக்கமாகவே கருதி அணுகுகிறோம். அணியில் உள்ள பல்வேறு வீரர்கள் வெவ்வேறு தருணங்களில் பொறுப்பேற்றுச் சிறப்பாகச் செயல்படுவது எங்களுக்குக் கூடுதல் பலம் அளிக்கிறது.

Bhuvi
Bhuvi

டி20 கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, பேட்டிங்கிற்குச் சாதகமான ஆடுகளங்களில் பந்துவீச்சாளர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. ஏனெனில், ஒரு தொடரை வெல்வதற்குப் பந்துவீச்சாளர்களால் மட்டுமே வலுவான அடித்தளத்தை அமைக்க முடியும். அந்த வகையில் இன்று எங்கள் பந்துவீச்சாளர்கள் காட்டிய நேர்த்தி வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது," என ரஜத் படிதார் தெரிவித்தார்.

DC vs RCB: "என்ன நடந்துச்சுன்னே புரியல..." - புலம்பும் டெல்லி கேப்டன் அக்சர் படேல்

ஐபில் தொடரில் நேற்று (ஏப்ரல்27) நடைபெற்ற பெங்களூரு vs டெல்லி அணிகளுக்கு இடையிலனா போட்டி ஒரு தலை போட்டியாக நடந்து முடிந்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி வெறும் 75 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அ... மேலும் பார்க்க

'49 யை தாண்டிட்டாங்களே ஆத்தா.!' - ஆர்.சி.பியின் வெற்றியும் சிறு நெருடலும்!

டெஸ்ட் களத்தின் எல்லாக் காட்சிகளையும் கண்களின் முன் விரிய வைத்து விட்டது ஆர்சிபி வெர்ஸஸ் டெல்லி கேப்பில்ஸ் போட்டி.இப்போட்டிக்கு முன்பாக ஆடிய நான்கு போட்டிகளில் டெல்லி வென்றது ஆர்சிபியை மட்டுமே என்றால்... மேலும் பார்க்க

8 ரன்களுக்கு 6 விக்கெட்; சீட்டுக்கட்டாய் வீழும் பேட்டர்கள்- சரியும் டெல்லி; மாஸ் காட்டும் ஆர்.சி.பி!

"ஈசாலா கப் நம்தே" கோஷம் பெங்களூரு சின்னசாமியில் மட்டுமல்ல, டெல்லி அருண் ஜெட்லி மைதானத்திலும் காது கிழிய ஒலிக்கிறது. 8 ரன்னுக்கு 6 பேர் அவுட் என்றால், அதை 'பேட்டிங் வரிசை' என்பதா அல்லது கால்பந்து ஸ்கோர... மேலும் பார்க்க

'பழைய கோச்; எடுபடாத ஸ்டைல்; க்ளிக் ஆகாத ஓப்பனிங் கூட்டணி!' - CSKவின் சொதப்பலுக்கான அந்த 3 காரணங்கள்!

சென்னை அணி நடப்பு சீசனிலும் மிக மோசமாக ஆடிக்கொண்டிருக்கிறது. இதுவரை ஆடியிருக்கும் 8 போட்டிகளில் 3 போட்டிகளை மட்டுமே வென்றிருக்கிறது. சென்னை அணி ஆடும் விதத்தை பார்க்கையில் 7 அல்லது 8 போட்டிகளை வென்று ப... மேலும் பார்க்க

சபாஸ்டியன் சாவே: மாரத்தான் வரலாற்றை மாற்றி எழுதிய நாயகன்! 42 கி.மீ-ஐ 1:59:30 நேரத்தில் கடந்து சாதனை!

மனித உடலின் தாங்கும் திறனுக்கு ஓர் எல்லை உண்டா? 42.195 கிலோமீட்டர் தூரம் கொண்ட மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில், இரண்டு மணி நேரத்திற்குள் பந்தய தூரத்தைக் கடக்க முடியுமா? என்ற நீண்ட காலக் கேள்விக்கு, 2026, ... மேலும் பார்க்க

CSK vs GT: "சென்னையில் சிஎஸ்கே-வை வீழ்த்துவது எளிதல்ல" - வெற்றிக்குப் பின் சுப்மன் கில் பெருமிதம்!

ஐபிஎல் 2026-ன் நேற்றைய (ஏப்ரல் 26) விறுவிறுப்பான ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி பெற்றது. 159 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணி, சாய் சுதர்சனின்... மேலும் பார்க்க