செய்திகள் :

8 ரன்களுக்கு 6 விக்கெட்; சீட்டுக்கட்டாய் வீழும் பேட்டர்கள்- சரியும் டெல்லி; மாஸ் காட்டும் ஆர்.சி.பி!

post image

"ஈசாலா கப் நம்தே" கோஷம் பெங்களூரு சின்னசாமியில் மட்டுமல்ல, டெல்லி அருண் ஜெட்லி மைதானத்திலும் காது கிழிய ஒலிக்கிறது. 8 ரன்னுக்கு 6 பேர் அவுட் என்றால், அதை 'பேட்டிங் வரிசை' என்பதா அல்லது கால்பந்து ஸ்கோர் போர்ட் என்பதா?

Hazelwood
Hazelwood

டாஸ் வென்ற கேப்டன் ரஜத் பட்டிதர் பந்துவீச்சை தேர்வு செய்தார். கடந்த போட்டியில் 260 அடித்த தெம்பில் களமிறங்கிய டெல்லிக்கு, முதல் ஓவரிலேயே புவனேஸ்வர் குமார் தன் 'ஸ்விங்' மந்திரத்தால் மரண பயத்தை காட்ட, சாகில் பரக் கிளீன் போல்டாகி வெளியேற, அங்கேயே தொடங்கியது டெல்லியின் சரிவு!

கடந்த போட்டியில் 152 ரன்கள் அடித்து சாதனை படைத்த கே. எல்.ராகுல் இந்த போட்டியில் ஜொலிப்பார் என எதிர்பார்க்க... அவரும் 1 ரன் எடுத்து நடையை கட்டினார்.

புவனேஸ்வர் மற்றும் ஹேசில்வுட் கூட்டணியின் வேகத்தில் டெல்லி பேட்ஸ்மேன்கள் வரிசையாக நிலைகுலைந்தனர்.

ஐபிஎல் வரலாற்றில் குறைந்தபட்ச ஸ்கோர் (49) என்ற 'ப்ளாக் மார்க்' தற்போது பெங்களூரு வசம் உள்ளது. அதை எப்படியாவது இன்று டெல்லி கணக்கிற்கு மாற்றிவிட்டு, அந்தச் சாபத்தை நீக்க வேண்டும் என ஆர்.சி.பி பந்துவீச்சாளர்கள் அனல் பறக்க விடுகிறார்கள்.

பவர் பிளே முடிவில் 11 ரன்களுக்கு 6 விக்கெட்! டெல்லி ரசிகர்கள் தலையில் துண்டை போட்டுக்கொள்ள, ஆர்.சி.பி ரசிகர்கள் 'மொமண்டம்' மழையில் நனைந்து கொண்டிருக்கிறார்கள். 49 ரன்களைத் தாண்டுவதே டெல்லிக்கு இப்போது இமயமலை ஏறுவது போலத்தான். ஆர்.சி.பி சார்பில் புவி 3 விக்கெட்டுகளையும் ஹேசல்வுட் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.

'பழைய கோச்; எடுபடாத ஸ்டைல்; க்ளிக் ஆகாத ஓப்பனிங் கூட்டணி!' - CSKவின் சொதப்பலுக்கான அந்த 3 காரணங்கள்!

சென்னை அணி நடப்பு சீசனிலும் மிக மோசமாக ஆடிக்கொண்டிருக்கிறது. இதுவரை ஆடியிருக்கும் 8 போட்டிகளில் 3 போட்டிகளை மட்டுமே வென்றிருக்கிறது. சென்னை அணி ஆடும் விதத்தை பார்க்கையில் 7 அல்லது 8 போட்டிகளை வென்று ப... மேலும் பார்க்க

சபாஸ்டியன் சாவே: மாரத்தான் வரலாற்றை மாற்றி எழுதிய நாயகன்! 42 கி.மீ-ஐ 1:59:30 நேரத்தில் கடந்து சாதனை!

மனித உடலின் தாங்கும் திறனுக்கு ஓர் எல்லை உண்டா? 42.195 கிலோமீட்டர் தூரம் கொண்ட மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில், இரண்டு மணி நேரத்திற்குள் பந்தய தூரத்தைக் கடக்க முடியுமா? என்ற நீண்ட காலக் கேள்விக்கு, 2026, ... மேலும் பார்க்க

CSK vs GT: "சென்னையில் சிஎஸ்கே-வை வீழ்த்துவது எளிதல்ல" - வெற்றிக்குப் பின் சுப்மன் கில் பெருமிதம்!

ஐபிஎல் 2026-ன் நேற்றைய (ஏப்ரல் 26) விறுவிறுப்பான ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி பெற்றது. 159 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணி, சாய் சுதர்சனின்... மேலும் பார்க்க

நல்ல முயற்சி ருத்து; ஆனால் மீண்டும் முயற்சிக்காதீர்கள்! - கடுப்பேற்றிய சி.எஸ்.கே; வெறியான ரசிகர்கள்!

மும்பைக்கு எதிராக அவ்வளவு சிறப்பாக வென்ற பிறகு சேப்பாக்கத்தில் சொந்த மண்ணில் சென்னை மிக மோசமாக தோற்றிருக்கிறது. வான்கடேவில் வென்ற பிறகு அதிர்ச்சியடைந்த ப்ளெம்மிங், 'உன்னாலே முடியாதென்று ஊரே சொல்லும் ந... மேலும் பார்க்க

'எவ்வளவு அடிச்சாலும் பத்தல; ஒண்ணுமே புரியலங்கய்யா!' - குழம்பிய ராஜஸ்தான்; அடிதடி சன்ரைசர்ஸ்!

"என்னதான் ஆச்சு நம்ம ஐபிஎல்லுக்கு?" - இதுதான் இப்போதிருக்கும் பழைய ஐபிஎல் ரசிகர்களின் ஒரே கேள்வியாக இருக்கிறது. ஒரு காலத்தில் 150 ரன்கள் எடுத்தாலே "கெத்தா" டிஃபெண்ட் செய்யலாம் என்று நினைத்த காலம் போய்... மேலும் பார்க்க

'எல்லாத்துக்கும் காரணம் பீல்டிங்தான்!' - தோல்வி குறித்து அக்சர் படேல்!

ஐபிஎல் 2026-ன் நேற்றைய (ஏப்ரல் 25) ஆட்டத்தில், சிக்ஸர் மழை பொழிந்த டெல்லி மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. 264 ரன்கள் என்ற இமாலய இலக்கை டெல்லி அணி நிர்ணயித்த போதிலும், பஞ்சாப் வீரர்... மேலும் பார்க்க