செய்திகள் :

'60 வயதோ, 16 வயதோ' - போதைப் பொருள் விழிப்புணர்வுக்கு விக்ரமின் காணொளியை பயன்படுத்திய கேரளா போலீஸ் !

post image

நடிகர் விக்ரம், அவருடைய 60-வது பிறந்தநாள் அன்று, சமூக வலைதளப் பக்கத்தில் காணொளி ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்தக் காணொளியைப் துருவ் விக்ரம்தான் படம்பிடித்திருந்தார்.

பிறகு, அந்தக் காணொளியும் சமூக வலைதளப் பக்கங்களில் வைரலானது. அந்தக் காணொளியைக் கேரளா போலீஸார் அவர்களுடைய அதிகாரப்பூர்வப் பக்கத்தில் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான ஒரு விழிப்புணர்வு வீடியோவுக்கு பயன்படுத்தியிருக்கிறார்கள்.

அதில், 'டெய்ஸ் ஐரே' உள்ளிட்ட சில மலையாளப் படங்களில் நடித்த நடிகர் ஜிபின் கோபிநாத் நடித்துள்ளார். நிஜ வாழ்க்கையிலும் இவர் காவல் அதிகாரியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வீடியோவைப் பார்த்த நடிகர் விக்ரம், அதனைத் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். "நாங்கள் எப்போதும் உங்களைக் கவனித்துக் கொண்டே இருக்கிறோம்" (We keep an eye on you always) என்ற கேப்ஷனுடன் அந்த வீடியோவைக் கேரளா போலீஸார் பகிர்ந்துள்ளனர்.

Jubin Gopinath
Jubin Gopinath

அத்துடன், "16 வயது அல்லது 60 வயது என்பது பிரச்னையில்லை; போதைப்பொருள் உடல்நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும்" எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்கள்.

மேலும், ரசிகர்கள் பலர் இந்தக் காணொளியை வெவ்வேறு வடிவங்களில் ரீ கிரியேட் செய்து வருகிறார்கள்.

GV Prakash: "கோடிக்கணக்கில் பணம் தந்தாலும் மதுபான விளம்பரங்களில் நடிக்க மாட்டேன்" - ஜி.வி. பிரகாஷ்

ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கும் 'கர' திரைப்படம் வருகிற ஏப்ரல் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதுமட்டுமல்ல, ஜி.வி. நடித்திருக்கும் திரைப்படம், இசையமைக்கும் படங்கள் என அடுத்தடுத்து அதிரடி லைன... மேலும் பார்க்க

Youth: "உன்னால் முடியும், தொடர்ந்து முயற்சி செய்" - ரிஷப் ஷெட்டியைச் சந்தித்த கென் கருணாஸ்

கென் கருணாஸ் இயக்கி, நடித்திருந்த 'யூத்' திரைப்படம் மக்களிடையே வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அனிஷ்மா, மீனாட்சி தினேஷ், சின்னத் தமிழா என இளம் பட்டாளமே இந்தப் படத்தில் நடித்திருந்தனர்... மேலும் பார்க்க

நடிகர்கள் சங்கம் தொடர்ந்து இதே போக்கை கடைபிடிக்குமானால்.. - எச்சரிக்கும் தயாரிப்பாளர் சங்கம்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சங்கத் தலைவர் தமிழ்க்குமரன் மற்றும் தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, எஸ்.ஏ.சந்திரசேகர... மேலும் பார்க்க

Hansika Motwani: "அவற்றுக்கு விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை" - ஹன்சிகா ஓபன் டாக்

நடிகை ஹன்சிகா மோத்வானி மற்றும் தொழிலதிபர் சோஹைல் கதுரியா கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பரில் திருமணம் செய்துகொண்டனர். பிறகு, இந்தத் தம்பதி கடந்த மார்ச் மாதம் விவாகரத்து பெற்றனர். கருத்து வேறுபாடுகள் காரணமா... மேலும் பார்க்க

''அஜித், ஷாலினிக்கு தெரியாமல் எடுத்த ஒரு காட்சியை படத்தில் வைத்திருக்கிறேன்; கண்டுபிடிங்க" - சரண்

சரண் இயக்கத்தில் அஜித்குமார், ஷாலினி, ரகுவரன், நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’அமர்க்களம்’. நேற்று (ஏப்ரல் 24) அஜித்குமார், ஷாலினி திருமண நாளை முன்னிட்டு 4K தொழில... மேலும் பார்க்க

நடிகர் அஜித் ரசிகர் மன்றத்தை கலைத்தது ஏன்?- வெளிப்படையாக சொன்ன அமர்க்களம் இயக்குநர்

சரண் இயக்கத்தில் அஜித்குமார், ஷாலினி, ரகுவரன், நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’அமர்க்களம்’. நேற்று (ஏப்ரல் 24) அஜித்குமார், ஷாலினி திருமண நாளை முன்னிட்டு 4K தொழில... மேலும் பார்க்க