செய்திகள் :

Doctor Vikatan: லேசர் பொம்மைகள், லேசர் லைட் சூழலில் வேலை; பார்வையைப் பாதிக்கும் என்பது உண்மையா?

post image

Doctor Vikatan: இன்று பல குழந்தைகளும் லேசர் லைட் பொருத்திய பொம்மைகள் வைத்து விளையாடுவதைப் பார்க்கிறோம். லேசர் லைட் பொருத்தப்பட்ட சூழலில் வேலை பார்க்கிறவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.

லேசர் லைட்டானது கண்களைப் பாதிக்கும் என்றும், அது பார்வையையே பறிக்கலாம் என்றும் சமீபத்தில் ஒரு செய்தியில் படித்தேன். அது எந்த அளவுக்கு உண்மை?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய் ஷங்கர்.

கண் மருத்துவர் விஜய் ஷங்கர்
கண் மருத்துவர் விஜய் ஷங்கர்

பொதுவாக அதிக திறன் கொண்ட லேசர் விளக்குகள் (High-beam lasers) கண்களுக்கு நல்லதல்ல என்பது உண்மைதான். அந்த விளக்குகள், கண்களைத் தாக்கும்போது கடுமையான பார்வைக் கோளாறுகளை உண்டாக்கும்.

குறிப்பாக, கிளாஸ் 3 பி (Class 3B)  மற்றும் கிளாஸ் 4 (Class 4) வகை லேசர்கள், கண்களுக்கு மிகவும் ஆபத்தானவை. இவை நிரந்தர பார்வைக் குறைபாட்டை ஏற்படுத்தக்கூடும்.

லேசர் கதிர்வீச்சு கண்ணின் மையப்பகுதியான ஃபோவியாவை (Fovea) பாதிக்கும்போது பல பிரச்னைகள் ஏற்படலாம். அதாவது, ஃபோவியாவில் தீக்காயங்கள் (Foveal burns), கண்ணுக்குள் ரத்தக்கசிவு, கண்ணின் மையப்பகுதியான மேகுலாவில் ஓட்டை விழுதல் (Macular hole), மேகுலாவில் தழும்பு ஏற்படுதல் (Macular scar) போன்ற பிரச்னைகள் பாதிக்கலாம்.

பாதிக்கப்பட்ட நோயாளிகள் கண்ணுக்கு முன்னால் திடீரென ஒளி மின்னுவது போன்ற உணர்வை (Dazzling effect)  எதிர்கொள்வார்கள். சிலருக்கு இந்தப் பாதிப்பு தற்காலிகமாக இருந்துவிட்டு, சரியாகிவிடும், ஆனால், சிலருக்கு இதனால் கண்களில் நிரந்தர சேதம் ஏற்படலாம். 

விழித்திரை (Retina) பாதிக்கப்படலாம். அதன் விளைவாக கண்களில் ஏதோ மிதப்பது போன்ற உணர்வு (Floaters) தெரிவது அல்லது மையப்பார்வை முழுமையாக மறைவது போன்ற சிக்கல்களைச் சந்திப்பார்கள்.

இந்த அறிகுறிகளை உணர்ந்தால், பாதிப்பு ஏற்பட்டவுடன் உடனேயே கண் மருத்துவரை அணுகுவது அவசியம். மருத்துவர் முதல்கட்டமாக அடிப்படை சோதனைகளைச் செய்வார். தவிர, 
பார்வையின் அளவைக் கண்டறிய 'விஷுவல் ஃபீல்ட்ஸ் டெஸ்ட்' (Visual Fields Test),  ரத்த நாளங்களின் நிலையை அறிய, 'ஃபண்டஸ் ஃப்ளோரசீன் ஆஞ்சியோகிராபி'  (Fundus Fluorescein Angiography),  பாதிப்பின் தீவிரத்தைத் துல்லியமாகக் கணிப்பற்கு 'ஆப்டிகல் கோஹெரன்ஸ் டோமோகிராபி'  (Optical Coherence Tomography) போன்றவற்றையும் பரிந்துரைப்பார். 

வெல்டிங் வேலை செய்பவர்களும் அதிக பிரகாசமான ஒளிக்கு ஆளாவதால் அவர்களுக்கும் இந்த பாதிப்பு வர வாய்ப்புள்ளது.

பாதிப்பு குறைவாக இருக்கும் பட்சத்தில்,  லூப்ரிகன்ட் சொட்டு மருந்துகள் அல்லது அழற்சி எதிர்ப்பு மருந்துகளைப் பரிந்துரைப்பார். அதுவே,  ரத்தக்கசிவு இருந்தால், விட்ரெக்டமி (Vitrectomy) அறுவை சிகிச்சை மூலம் ரத்தம் அகற்றப்படும். மேகுலாவில் ஓட்டை இருந்தால், அந்தத் துளையை அடைக்க  விட்ரெக்டமி அறுவை சிகிச்சையுடன் காஸ் இன்ஜெக்ஷனும் (Gas injection) கொடுக்கப்படும். 

தற்போது குழந்தைகள்  லேசர் பாயின்டர்கள் (Laser pointers) வைத்து விளையாடுவது அதிகரித்து வருகிறது. அவை கண்களை நிச்சயம் பாதிக்கும். அதேபோல் வெல்டிங் வேலை செய்பவர்களும் அதிக பிரகாசமான ஒளிக்கு ஆளாவதால்  அவர்களுக்கும் இந்தப் பாதிப்பு வர வாய்ப்புள்ளது. எனவே, இவர்கள் கண்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும், தேவையற்ற பிரகாசமான ஒளிக்கதிர்களைத் தவிர்க்க வேண்டும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 

Doctor Vikatan: எண்ணெய்க் குளியல்... நல்லெண்ணெயை சூடுபடுத்தித்தான் உபயோகிக்க வேண்டுமா?

Doctor Vikatan: வழக்கத்தைவிட இந்த வருடம் வெயில் கொளுத்தி எடுக்கிறது. வெப்பத்தைத் தணிக்க என்ன செய்தாலும் சமாளிக்க முடியவில்லை. இந்நிலையில் எண்ணெய்க் குளியல் உதவுமா... குறிப்பாக, நல்லெண்ணெய் வைத்துக் கு... மேலும் பார்க்க

Doctor Vikatan: சித்த மருத்துவத்தில் பரிந்துரைக்கப்படும் திரிபலா சூரணம்; எல்லோரும் எடுக்கலாமா?

Doctor Vikatan: சித்த மருத்துவத்தில் பரிந்துரைக்கப்படுகிற மருந்துகளில் பிரபலமாகவும் பிரதானமாகவும் இருக்கிறது திரிபலா சூரணம். மலச்சிக்கல் முதல் வாய்ப் புண் வரை எல்லாப் பிரச்னைகளுக்கும்அதை எடுத்துக்கொள்... மேலும் பார்க்க

Doctor Vikatan: இரண்டு கால்களிலும் வெரிகோஸ் வெயின்ஸ் பிரச்னை... குணப்படுத்தவே முடியாதா?

Doctor Vikatan: எனக்கு இரண்டு கால்களிலும் வெரிகோஸ் வெயின்ஸ் எனப்படும் நரம்பு சுருட்டி இழுக்கும் பிரச்னை உள்ளது. இதைக் குணப்படுத்த வாய்ப்புண்டா... எப்படிப்பட்ட சிகிச்சைகள் உதவும்?பதில் சொல்கிறார், சென்... மேலும் பார்க்க

Doctor Vikatan: நடிகைகளின் ஃபிட்னெஸ் வீடியோக்கள்... தீவிர பயிற்சிகள் அவசியமா, ஆபத்தா?

Doctor Vikatan:நடிகைகளின் உடற்பயிற்சி வீடியோக்கள் எப்போதும் வைரலாகின்றன. அவர் தீவிரமான, கடுமையான உடற்பயிற்சிகளைச் செய்வது சிலருக்கு ஊக்கமளிப்பதாக இருந்தாலும்,'இது மிக அதிகம்' என்று சில உடற்பயிற்சி நிப... மேலும் பார்க்க

Doctor Vikatan: பிரபலங்களால் டிரெண்டாகும் 'மைக்ரோ பிளேடிங்'... புருவங்களை அடர்த்தியாக்குமா?

Doctor Vikatan: சமீபகாலமாக சோஷியல் மீடியாவில் பிரபலங்களும் டாக்டர்களும் மைக்ரோ பிளேடிங் என்ற டெக்னிக் பற்றி அதிகம் பேசுகிறார்கள். புருவங்களில் முடி வளர்ச்சி இல்லாதவர்களுக்கு அடர்த்தியான புருவங்களைக் க... மேலும் பார்க்க

Doctor Vikatan: பீரியட்ஸின் முதல் நாளில் அளவுக்கதிக ப்ளீடிங்... சாதாரணமானதா, பிரச்னையா?

Doctor Vikatan: என் வயது 38. இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். கடந்த ஒரு வருடமாக எனக்கு பீரியட்ஸின்போது முதல் நாளன்று ப்ளீடிங் மிக அதிகமாக இருக்கிறது. பெரிய நாப்கின்கள் நான்கு உபயோகிக்க வேண்டியிருக்கி... மேலும் பார்க்க