செய்திகள் :

ஒரே க்ளிக்கில் கடன், அதே வேகத்தில் பறிபோகும் உயிர்… என்னதான் தீர்வு?

post image

கேரளாவைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டார். விசாரணையில், வெறும் ரூ.13,500 கடன்தான் அவர் உயிரைப் பறித்திருக்கிறது என்ற உண்மை வெளிவந்து அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

டிஜிட்டல் கடன் செயலியில் வாங்கிய கடனைத் திரும்ப செலுத்த முடியாத அந்த இளைஞருக்கு, கடன் கொடுத்த நிறுவனம் 96 முறை போன் கால் செய்ததோடு, அவர் படிக்கும் கல்லூரிக்கும் 26 முறை போன் செய்திருக்கிறது. இதனால் அவமானத்துக்கும் மன உளைச்சலுக்கும் ஆளான அவர், தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கந்துவட்டி காலத்திலிருந்தே கடனால் தற்கொலை செய்வது தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதைக் கட்டுப்படுத்தவே நாடு முழுவதும் வங்கிகளும் நிதி நிறுவனங்களும் உருவாக்கப்பட்டன. கடன் வழங்குவதிலும் கடனை வசூலிப்பதி லும் விதிகள் வகுக்கப்பட்டன. ஆனாலும், கடன் தற்கொலைகள் நின்றபாடில்லை.

கடனின் கோர முகம் இப்போது டிஜிட்டலிலும் மிரட்டிக்கொண்டிருக்கிறது. கடன் செயலிகள் என்ற பெயரில் யாரோ, எங்கிருந்தோ நடத்தும் ஃபின்டெக் நிறுவனங்கள், ஒரே க்ளிக்கில் எந்தவித ஆவணங்களும் இல்லாமல் உடனடிக் கடன் வழங்கும் வலையை விரித்து வருகின்றன. இன்றைய நுகர்வுக் கலாசாரத்தில் ஆசைகளும், போட்டி மனப்பான்மையும் அதிகமாக இருப்பதால், மக்கள் அந்த வலையில் எளிதில் விழுந்துவிடுகிறார்கள். குறிப்பாக, மாணவர்கள், இளைஞர்கள்.

இன்றைய இளைஞர்களுக்கு உடனடி பணத் தேவைகள் அதிகம். அவர்களது ஆடம்பரப் போக்கை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, கொள்ளை வட்டி, அபராதம் என வசூலித்துக் கொழிக்கின்றன பல நிறுவனங்கள். வாங்கிய கடனுக்கும் அதிகமான வட்டி என அவர்களைச் சுரண்டிய பின்னும், கடனைச் செலுத்தவில்லை என நிகழ்த்தப்படும் மிரட்டல்களும், கடன் வசூலிப்பு அணுகுமுறைகளும் எல்லை மீறுகின்றன. கடன் வாங்கியவர்களின் குடும்பம், நண்பர்கள், வசிப்பிடம், பணியிடம் வரை இவர்களின் அத்துமீறல்கள் நீள்கின்றன. இதனால், தொடர்ச்சியாகத் தற்கொலை மரணங்கள் செய்திகளாகின்றன.

இதற்குக் கடிவாளம் போட மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் எந்த நடவடிக்கை யும் இதுவரை எடுத்ததாகத் தெரியவில்லை. புதிது புதிதாக முளைக்கும் கடன் செயலிகள் எங்கிருந்து, யாரால் இயக்கப்படுகின்றன என்பதையெல்லாம் ஆராய வேண்டிய பொறுப்பு அவற்றுக்கு உள்ளது.

வருமான ஆதாரம் உள்ள, கடனைத் திரும்பச் செலுத்தும் திறனுள்ள நபர் களுக்கே கடன் செயலிகள் கடன்களை வழங்க வேண்டும். கடன் வசூலிப்பு விதிகள் வரைமுறைப்படுத்தப்பட வேண்டும். மீறினால் கடும் நடவடிக்கை, தண்டனை வழங்கப்பட வேண்டும். மக்களுக்கு கடன் வலை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். கடன் விவகாரங்கள் குறித்த புகார்களை விசாரிக்க தனி அமைப்பை உருவாக்க வேண்டும்.

இளைஞர்களைக் காக்கத் தவறினால், சமூகமாக நாம் பெரிய விலையைக் கொடுக்க வேண்டிவரும்.

- ஆசிரியர்

டாக்ஸ் பயத்தில் டாலரைத் தூங்க விடுகிறீர்களா? - US NRI-களுக்கான ₹5 கோடி சீக்ரெட்!

“H1B விசா எக்ஸ்டென்ஷன் வந்திருச்சா?” என்ற பக்-பக் டென்ஷனும், “இன்னும் ஒரு மூணு வருஷத்துல பணத்தைச் சேர்த்துட்டு இந்தியாவுக்கே நிரந்தரமா திரும்பிடலாம்” என்ற அந்தப் பொய்யான வாக்குறுதியும்தான் அமெரிக்க வா... மேலும் பார்க்க

உங்களின் ஒரு ஓட்டு... உங்கள் பணத்தின் தலையெழுத்து | Election and Economy

மனித மூளை எப்போதுமே சிறிய எண்களை உதாசீனப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பல கோடிப் பேர் வாக்களிக்கும் ஒரு தேசத்தில், "என் ஒற்றை வாக்கு என்ன மாயத்தைச் செய்துவிடப் போகிறது?" என்ற நினைப்பு நம்மி... மேலும் பார்க்க

பெண்களே, `ரெகுலர்' சேமிப்பை நிறுத்துங்கள்! - ₹1 கோடி சேர்க்கும் சீக்ரெட் இதோ!

தோழிகளே! எப்படி இருக்கீங்க? குடும்பத்துல எந்தச் செலவாக இருந்தாலும், கொடுத்த பணத்துல கச்சிதமா பட்ஜெட் போட்டு, மாசக் கடைசியில கொஞ்சப் பணத்தை மிச்சம் பிடிச்சு அஞ்சறைப் பெட்டியிலோ, பீரோவிலோ சேமித்து வைப்ப... மேலும் பார்க்க

பறிபோகும் வேலை, அச்சத்தில் இளைஞர்கள்... கேள்விக்குறியாகும் இந்தியாவின் எதிர்காலம்?!

சமீபத்தில் ஆரக்கிள் (Oracle) நிறுவனம் அனுப்பிய மின்னஞ்சல் ஒன்று ஆயிரக் கணக்கான இந்திய இளைஞர்களின் கனவைத் தகர்த்துள்ளது. இந்த நிறுவனம் உலகளவில் பணிநீக்கம் செய்துள்ள 30,000 ஊழியர்களில் 12,000 பேர் இந்தி... மேலும் பார்க்க

Ergodicity: காம்பவுண்டிங் எட்டாவது அதிசயம்... 'எர்கோடிசிட்டி' ஒன்பதாவது!

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூட்டு வட்டிதான் (Compounding) உலகத்தின் எட்டாவது அதிசயம் என்றார். உண்மைதான். ஆனால் அவர் தலால் ஸ்ட்ரீட்டில் ஆப்ஷன்ஸ் (F&O) ட்ரேடிங் செய்ததில்லை. சந்தையில் காம்பவுண்டிங்கை விட பய... மேலும் பார்க்க