"சில தொகுதிகளில் விசிக தோழர்களிடம் ஒற்றுமை குறைவு" - திருமாவளவன் வருத்தம்
UPSC / TNPSC: தஞ்சாவூரில் இலவசப் பயிற்சி முகாம் - அனுமதி இலவசம்!
UPSC/TNPSC குரூப் -1, 2 தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து தூத்துக்குடியில் ஓர் இலவசப் பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கின்றன.
'நீங்களும் ஆகலாம் IAS' என்ற தலைப்பிலான இந்த இலவசப் பயிற்சி முகாம் வருகிற மே 17 ஆம் தேதி தஞ்சாவூரில் உள்ள பாரத் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரியில் நடக்க இருக்கிறது.

அதனுடன் ஒரு வருட இலவசப் பயிற்சிக்கான ஸ்காலர்ஷிப் தேர்வும் நடக்கிறது. இந்த நிகழ்வில் திருமதி பா.பிரியங்கா பங்கஜம் இ.ஆ.ப., தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர், திரு.E. சுந்தரவதனம் இ.கா.ப., தஞ்சாவூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் சிறப்புரை ஆற்றவிருக்கின்றனர். அதே சமயம் திரு.ஆதில் பெய்க் (சிவில் சர்வீஸஸ் தேர்வு பயிற்சியாளர் - King Makers IAS அகாடமி), King Makers IAS அகாடமியின் இயக்குநர் சத்யஶ்ரீ பூமிநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு மாணவர்களுக்கு ஊக்க உரையை ஆற்ற இருக்கிறார்கள்.
ஆனந்த விகடன், King Makers IAS அகடாமியுடன் இணைந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இது போன்ற இலவசப் பயிற்சி முகாமினைப் பல ஆண்டுகளாக நடத்தி வருவதன் மூலம், எண்ணற்ற போட்டித் தேர்வாளர்கள் பயனடைந்து வருகிறார்கள்.
இந்தப் பயிற்சி முகாமிற்கு முன்பதிவு செய்ய 044- 66802997 என்ற எண்ணிற்கு மிஸ்ட்கால் கொடுக்கவும். அப்படி இல்லையென்றால் இந்த முகாமில் கலந்துகொள்ள விரும்புகின்றவர்கள் மேற்கொண்ட விண்ணப்பத்தில் பதிவுசெய்து பயன்பெறலாம்.




















