செய்திகள் :

`பிரசவ சிகிச்சை அலட்சியம்; நெஞ்சில் அமர்ந்துகொண்டு காலால் அழுத்தம் கொடுத்தனர்'- இளைஞர் குற்றச்சாட்டு

post image

மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் தீப்லதா என்ற பெண் பிரசவத்திற்காகச் சேர்க்கப்பட்டு இருந்தார். அவருக்கு பிரசவ வலி வந்த பிறகும் டாக்டர்கள் அவருக்குப் பிரசவம் பார்க்காமல் 9 மணி நேரம் காக்க வைத்ததாக, அப்பெண்ணின் கணவர் சுரேந்திரா குற்றம்சாட்டியுள்ளார். கர்ப்பத்தின்போது தீப்லதாவிற்கு எந்த விதப் பிரச்னையும் இல்லை.

ஆனால் பிரசவத்தின்போது குழந்தை இறந்து பிறந்தது. இதற்கு டாக்டர்களின் கவனக்குறைவுதான் காரணம் என்று சுரேந்திரா குற்றம்சாட்டி இருக்கிறார்.

குழந்தை

இது குறித்து தீப்லதாவின் கணவர் சுரேந்திரா அளித்த பேட்டியில், ''பிரசவ வலி ஏற்பட்ட பிறகும் என்னுடைய மனைவிக்குப் பிரசவம் பார்க்காமல், 9 மணி நேரம் காக்க வைத்தார்கள். பிரசவத்தின்போது அழுத்தம் கொடுப்பதற்காக என் மனைவியின் நெஞ்சில் ஒரு பெண் உதவியாளர் ஏறி அமர்ந்து கொண்டு காலால் அழுத்தம் கொடுத்தார். அவர்கள் அதிகப்படியான அழுத்தம் கொடுத்ததால்தான் குழந்தை இறக்க நேரிட்டது'' என்று குற்றம்சாட்டினார்.

ஆனால் அது போன்று நடக்க வாய்ப்பு இல்லை என்று மருத்துவமனையின் டாக்டர் திலிப் மாதவி தெரிவித்தார். மேலும், இது குறித்து விரிவாகப் பேச மறுத்துவிட்டார். உள்ளூர் கவுன்சிலர் வாசிம் கான் இது குறித்து கூறுகையில், ``மருத்துவமனை சிகிச்சை கொடுக்கும் விதம் குறித்து அடிக்கடி புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள அறிவுறுத்தப்படும்" என்று தெரிவித்தார்.

`திமுக வரக்கூடாது' - கலக்கத்தில் தவாக டு எதிர்ப்பு காட்டிய நிர்வாகி; அச்சத்தில் அமைச்சர்! | கழுகார்

கலக்கத்தில் த.வா.க"தி.மு.க ஆட்சிக்கு வரக்கூடாது!"தி.மு.க ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என, அ.தி.மு.க-வினரைவிட அதிகமாக வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர்தான் விரும்புகிறார்களாம். கடைசி நேரத்தில் ... மேலும் பார்க்க

’கட்சி போடுகிற பிச்சை' - துரை வைகோவின் வார்த்தையால் கூண்டோடு வெளியேறிய ஈரோடு நிர்வாகிகள்

ஈரோடு மாவட்டம் அவல் பூந்துறை பேரூராட்சியின் துணைத் தலைவரும் மதிமுகவின் மாநில இளைஞரணி துணைத் தலைவருமான லோ.சோமசுந்தரம் தனது கட்சிப் பொறுப்பை ராஜினாமா செய்திருக்கிறார்.’பதவி, பொறுப்பு என்பதெல்லாம் கட்சி ... மேலும் பார்க்க

திருச்செந்தூர் ட்ரெண்ட்: `கையில் வேலுடன் தரிசனம் செய்த தி.மு.க அமைச்சர்கள்!'

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து வருகின்றனர். தற்போது பள்ளி கோடை விடுமுறையை முன்னிட்டு, த... மேலும் பார்க்க

'எங்கும் ட்ரம்ப்; எதிலும் ட்ரம்ப்' அமெரிக்க டாலர், தங்க காசு, பாஸ்போர்ட் - அனைத்திலும் ட்ரம்ப்?

அமெரிக்கா முதல் உலக நாடுகள் வரை அனைத்து இடங்களிலும் நிறைந்திருக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நினைக்கிறார் போலும். வரி.. போர் என அவ்வப்போது உலக நாடுகளில் தாக்கம் ஏற்படுத்தும் ட்ரம்ப், உள்நா... மேலும் பார்க்க

`ஆளுக்கொரு திசையை காட்டும் கணிப்புகள்' - தமிழக Exit Poll முடிவுகளை எப்படி புரிந்து கொள்வது?

5 மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி பேசுபொருளாகியிருக்கின்றன. வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் உணர்த்துவது என்ன?அலசுவோம்..!Exit Poll... மேலும் பார்க்க