செய்திகள் :

’கட்சி போடுகிற பிச்சை' - துரை வைகோவின் வார்த்தையால் கூண்டோடு வெளியேறிய ஈரோடு நிர்வாகிகள்

post image

ஈரோடு மாவட்டம் அவல் பூந்துறை பேரூராட்சியின் துணைத் தலைவரும் மதிமுகவின் மாநில இளைஞரணி துணைத் தலைவருமான லோ.சோமசுந்தரம் தனது கட்சிப் பொறுப்பை ராஜினாமா செய்திருக்கிறார்.

’பதவி, பொறுப்பு என்பதெல்லாம் கட்சி போடும் பிச்சை’ என துரை வைகோ கூறிய வார்த்தைகள் தன்னை ரொம்பவே காயப்படுத்தி விட்டதாகக் கூறி இந்த முடிவை எடுத்ததாக கூறுகிறார்.

என்ன நடந்தது என அவரையே கேட்டோம்.

துரை வைகோ, கணேசமூர்த்தி

‘’மறைந்த ஈரோடு கணேசமூர்த்தியின் நினைவு நாள் கடந்த மாதம் 28ம் தேதி வந்தது. தலைமையகத்துல அதையொட்டி ஒரு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தாங்க. எங்க சொந்த மாவட்டத்துக்காரர்ங்கிறதால ஈரோடு தெற்கு மாவட்டத்துல இருந்து நிர்வாகிகள் நிறையப் பேர் அதுல கலந்து கொண்டோம்.

நிகழ்ச்சி முடிஞ்சதும், தேர்தல், சீட் ஒதுக்கீடு குறித்த பேச்சு வந்தது. துரை வைகோகிட்ட எங்க மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் எங்க தெற்கு மாவட்டச் செயலாளரான கோபாலுக்கு மொடக்குறிச்சி தொகுதியில் விவசாயிகள் மத்தியில செல்வாக்கு இருக்குங்கிறதைச் சொல்லி அவருக்கு சீட் ஒதுக்க கோரிக்கை வச்சோம். வேறு சிலரும் கூட கேட்டாங்க.

சோமசுந்தரம்

கூட்டணியில குறைவான சீட் கிடைக்கிறதால எல்லாருக்கும் சீட் தர முடியாதுங்கிறதும் எங்களுக்கு தெரியும். ஆனாலும் கோரிக்கைதானேனு கேட்டோம்.

தலைமை இடத்துல இருக்கிறவங்க எப்படி நடந்துக்கிடணும்னு ஒரு நாகரிகம் இருக்கில்லையா?

சீட்டுக்கு வாய்ப்பு இல்லை, பிறகு பார்க்கலாம், இப்படி ஏதாவது சொன்னா சமாதானம் ஆகி போகத்தான் போறோம். ஆனா அவர் எடுத்த எடுப்பிலேயே, ’பதவி, பொறுப்பு எல்லாம் கட்சி கொடுத்தா வாங்கிக்கணும். இல்லாட்டி பேசாம கடந்து போகணும். பொறுப்புங்கிறது கட்சியா பார்த்துப் போடுகிற பிச்சை’னு கடினமான வார்த்தைகளைப் பயன்படுத்தினார்.

நாங்க ஒரு முப்பது பேர் அந்த இடத்துல இருந்தோம். அந்த ஒரு நிமிஷம் எங்களுக்கு என்னவோ போல் ஆகிடுச்சு.

ரொம்பவே காயப்பட்டுட்டோம் எல்லாரும். அதுக்கு மேல அந்த இடத்துல எந்தவொரு பேச்சும் பேசாம ஊருக்கு கிளம்பிட்டோம்.

ஊருக்குத் திரும்பினதும் மத்த நிர்வாகிகள் கிட்ட நடந்தைச் சொன்னதும் அவங்களுமே ரொம்பவே நொந்து போனாங்க.

இருந்தாலும் தேர்தல் சமயத்துல எந்தவொரு முடிவையும் எடுக்க வேண்டாம்னு வருத்தத்தை உள்ளுக்குள்ளேயே பூட்டி வச்சுட்டு கட்சி அறிவிச்ச செந்தில் நாதன் வெற்றிக்காக தேர்தல் வேலை செய்தோம். இத்தனைக்கும் செந்தில் நாதன் தொகுதிக்குப் புதியவர்தான். கோபால் உள்ளூர்க்காரர்ங்கிறதால அவருக்கு சீட் கேட்டோம்.

திருநெல்வேலி: அனல் பறந்த வைகோ பேச்சு.! தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் புகைப்படங்கள்.!
: வைகோ

துரை வைகோ பேசிய வார்த்தைகள் காயப்படுத்திகிட்டே இருந்ததால் தேர்தல் முடிஞ்சதுமே கோபால் உட்பட 75 நிர்வாகிகள் மொத்தமா கட்சிப் பொறுப்புகளை ராஜினாமா செய்துட்டோம்.

கட்சிப் பொறுப்புகளைத்தான் ராஜினாமா செய்திருக்கோம். கட்சியில இருந்து விலகலை. அடிப்படை உறுப்பினரா ஆயுள் இருக்கும் வரை மதிமுகவில் பயணிப்போம்.

பெரியாரை உயர்த்திப்பிடிக்கிற ஒரு கட்சி. சுயமரியாதை பத்தி அவ்வளவு பேசறோம். அங்க இருக்கிற நிர்வாகிகளுக்கு அதுவும் ஈரோட்டுக்காரங்களுக்கு சுயமரியாதைக்குப் பங்கம் வர்ற போது என்ன செய்யறது?

பொதுச் செயலாளருக்கும் முறைப்படி தெரிவிச்சுட்டு விலகிட்டோம்.

மதிமுக - திமுக தொகுதிப் பங்கீடு
மதிமுக - திமுக தொகுதிப் பங்கீடு

பிச்சை, சாட்டை எடுத்து அடிப்பேன் என்பன போன்ற வார்த்தைகளெல்லாம் கார்ப்பரேட் கம்பெனியை நினைவு படுத்தற மாதிரி இருக்கு. அதனால இனி நிர்வாகியா கட்சியில மனமுவந்து செயல்பட முடியுமா தெரியலை. அதனால சாதாரண தொண்டர்களா இருந்துட்டுப் போறதுனு முடிவு செய்திருக்கோம்’ என்கிறார் இவர்.

`திமுக வரக்கூடாது' - கலக்கத்தில் தவாக டு எதிர்ப்பு காட்டிய நிர்வாகி; அச்சத்தில் அமைச்சர்! | கழுகார்

கலக்கத்தில் த.வா.க"தி.மு.க ஆட்சிக்கு வரக்கூடாது!"தி.மு.க ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என, அ.தி.மு.க-வினரைவிட அதிகமாக வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர்தான் விரும்புகிறார்களாம். கடைசி நேரத்தில் ... மேலும் பார்க்க

திருச்செந்தூர் ட்ரெண்ட்: `கையில் வேலுடன் தரிசனம் செய்த தி.மு.க அமைச்சர்கள்!'

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து வருகின்றனர். தற்போது பள்ளி கோடை விடுமுறையை முன்னிட்டு, த... மேலும் பார்க்க

'எங்கும் ட்ரம்ப்; எதிலும் ட்ரம்ப்' அமெரிக்க டாலர், தங்க காசு, பாஸ்போர்ட் - அனைத்திலும் ட்ரம்ப்?

அமெரிக்கா முதல் உலக நாடுகள் வரை அனைத்து இடங்களிலும் நிறைந்திருக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நினைக்கிறார் போலும். வரி.. போர் என அவ்வப்போது உலக நாடுகளில் தாக்கம் ஏற்படுத்தும் ட்ரம்ப், உள்நா... மேலும் பார்க்க

`ஆளுக்கொரு திசையை காட்டும் கணிப்புகள்' - தமிழக Exit Poll முடிவுகளை எப்படி புரிந்து கொள்வது?

5 மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி பேசுபொருளாகியிருக்கின்றன. வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் உணர்த்துவது என்ன?அலசுவோம்..!Exit Poll... மேலும் பார்க்க

கேரளம்: "தொடர் ஆட்சி என்பது பாசிச மனநிலை"- பினராயி விஜயன் அரசை விமர்சித்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சஸ்பெண்ட்!

கேரள மாநில ராணுவ நலன் மற்றும் இளைஞர் விவகாரங்கள் துறையின் முதன்மைச் செயலாளராகப் பணியாற்றி வந்தவர் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி டாக்டர் பி.அசோக். இவர் கேரள வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தராகவும் இருந்துவருகிறார்... மேலும் பார்க்க