செய்திகள் :

"ஒரு வருடமாக எனது இடது தோள்பட்டையில் சில பிரச்னைகள் உள்ளன, ஆனாலும்.! - ஆட்டநாயகன் ஹென்றி கிளாசென்

post image

ஐபிஎல் தொடரின் நேற்றைய(ஏப்ரல் 29) ஆட்டத்தில் மும்பை அணியும், ஹைதராபாத் அணியும் மோதின.

இதில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத், மும்பையை வீழ்த்தி வெற்றி பெற்றது. அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ஹென்றி கிளாசென் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

விருது வென்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், " கடந்த ஒரு வருடமாக எனது இடது தோள்பட்டையில் சில பிரச்சனைகள் உள்ளன, அதனால் இப்போது கார்னர் திசையில் என்னால் பலமாக அடிக்க முடிவதில்லை.

ஹென்றி கிளாசென்
ஹென்றி கிளாசென்

இருப்பினும் இதற்கான பயிற்சிகளை எடுத்து வருகிறேன். அணிக்கு எனது பங்களிப்பை அளித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது.

இது எங்களுக்கு ஒரு சிறந்த வெற்றி, இந்த வெற்றியை எங்கள் சொந்த மண்ணில் மீண்டும் கொடுப்போம் என்று நம்புகிறேன். தொடக்க ஆட்டக்காரர்கள் ஓவருக்கு 15, 16 ரன்கள் எடுத்தால், அது எங்களின் வேலையை எளிதாக்கும்.

நான் களமிறங்கியபோது, 250 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடுகையில் ரன் ரேட் 10-க்கும் குறைவாகவே இருந்தது. அது தொடக்க ஆட்டக்காரர்கள் செய்த அற்புதமான வேலை" என்று பேசியிருக்கிறார்.

IPL : "5 ஆண்டுகளுக்கு முன்பிருந்த ஐபிஎல் வேறு, இப்போது இருக்கும் ஐபிஎல் வேறு"- SRH கேப்டன் கம்மின்ஸ்

ஐபிஎல் தொடரில் நேற்று (ஏப்ரல்29) நடைபெற்ற மும்பை vs ஹைதராபாத் போட்டியில் மும்பை நிர்ணயித்த 244 என்ற இலக்கை 8 பந்துகள் மீதம் இருக்கும் நிலையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளத... மேலும் பார்க்க

SRH Vs MI: 'எங்கள் ரசிகர்களுக்குக் கொண்டாடப் போதுமான வாய்ப்புகளை நாங்கள் தரவில்லை'- ஹர்திக் பாண்டியா

ஐபிஎல் 2026-ன்நேற்றைய (ஏப்ரல் 29) விறுவிறுப்பான ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்தமும்பை அணி, 20 ஓவர்களில் 244 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர... மேலும் பார்க்க

IPL 2026: "அவர் பந்துகளை அடிப்பதை எதிர்முனையில் இருந்து பார்ப்பது.."- சூர்யவன்ஷி குறித்து ஜெய்ஸ்வால்

ஐபிஎல் தொடரின் நேற்றைய (ஏப்ரல். 29) ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், பஞ்சாப் அணியும் மோதின. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் ஜெய்ஸ்வால... மேலும் பார்க்க

PBKS Vs RR: "நாங்கள் அதில்தான் கோட்டை விட்டுவிட்டோம்" - முதல் தோல்வி குறித்து ஸ்ரேயாஸ் ஐயர்

ஐபிஎல் தொடரின் நேற்றைய (ஏப்ரல். 29) ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், பஞ்சாப் அணியும் மோதின.இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் 7 போட்டிகள... மேலும் பார்க்க

IPL 2026: "உன்னால் முடியாது என்று என்னிடம் யாராவது சொன்னால்..." - விமர்சனங்கள் பற்றி ஸ்ரேயாஸ்

நடப்பு ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். களத்தில் அதிரடியான ஆட்டத்தையும் வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் Jio Hotstar-க்கு பேட்டி அளித்த... மேலும் பார்க்க

IPL 2026: ஜவ்வு மிட்டாய் போல இழுக்கும் போட்டிகள்; பிசிசிஐ-க்கு கவாஸ்கர் வைத்த கோரிக்கைகள் என்னென்ன?

போட்டிகளின் ஒழுங்குமுறை மற்றும் நேர கட்டுப்பாட்டை உறுதிப்படுத்த பிசிசிஐ கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான கவாஸ்கர் கோரிக்கை வைத்திருக்கிறார்.ஐபிஎல் 2026 சீசன் விறுவி... மேலும் பார்க்க