சாய் பல்லவியா? ருக்மினி வசந்த்யா? எம்.எஸ்.சுப்புலட்சுமி பயோபிக்கில் யார் நடிக்கல...
'எங்கும் ட்ரம்ப்; எதிலும் ட்ரம்ப்' அமெரிக்க டாலர், தங்க காசு, பாஸ்போர்ட் - அனைத்திலும் ட்ரம்ப்?
அமெரிக்கா முதல் உலக நாடுகள் வரை அனைத்து இடங்களிலும் நிறைந்திருக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நினைக்கிறார் போலும்.
வரி.. போர் என அவ்வப்போது உலக நாடுகளில் தாக்கம் ஏற்படுத்தும் ட்ரம்ப், உள்நாட்டிலும் அவ்வப்போது அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
அமெரிக்க டாலர்
வருகிற ஜூன் மாதம் முதல், அமெரிக்காவில் அச்சடிக்கப்படும் புதிய டாலர்களில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அமெரிக்க கருவூலச் செயலர் ஸ்காட் பெசன்ட் கையெழுத்து இடம் பெறப்போகிறது.
வழக்கமாக, கருவூலச் செயலாளர் மற்றும் கருவூல அதிகாரியின் கையெழுத்து மட்டுமே இடம்பெறும். ஆனால், அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக ஒரு அதிபரின் கையெழுத்து டாலரில் இடம்பெற உள்ளது.

நாணயம்
அமெரிக்காவின் கருவூலத் துறை இன்னொரு பரிந்துரையும் முன்வைத்துள்ளது. அமெரிக்கா இந்த ஆண்டு தனது 250-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடி வருகிறது.
இதையொட்டி ட்ரம்ப் உருவம் பொறித்த $1 நாணயத்தை வெளியிடுவது தான் அந்தப் பரிந்துரை.
2024-ம் ஆண்டு ட்ரம்பிற்கு நடந்த கொலை முயற்சியை நினைவுக்கூரும் விதமாக, ஒரு பக்கம் ட்ரம்பின் முகமும், இன்னொரு பக்கம், 'FIGHT FIGHT FIGHT' என்கிற வாக்கியமும் இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
தங்க நாணயம்
அமெரிக்காவின் 250-வது சுதந்திர ஆண்டிற்காக, ட்ரம்ப் முகம் பொறித்த 24 கேரட் தங்க நாணயமும் வெளியிடப்பட உள்ளது.
பாஸ்போர்ட்
இத்துடன் லிஸ்ட் முடிந்துவிடவில்லை... தற்போது அமெரிக்க பாஸ்போர்ட்டிலும் ட்ரம்ப் முகம் அச்சடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் டாமி பிகாட் ஃபாக்ஸ் நியூஸிற்கு கொடுத்துள்ள தகவலின் படி, 'அமெரிக்காவின் 250-வது சுதந்திர ஆண்டை முன்னிட்டு, ஸ்பெஷலாக வடிவமைக்கப்பட்ட குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அமெரிக்க பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட உள்ளன" என்று தெரிவித்துள்ளார்.
As the United States celebrates America's 250th anniversary in July, @StateDept is preparing to release a limited number of specially designed U.S. Passports to commemorate this historic occasion.https://t.co/uS3Sfp6U1A
— Tommy Pigott (@statedeptspox) April 28, 2026
அந்த ஸ்பெஷலாக வடிவமைக்கப்பட்ட பாஸ்போர்ட்டில் ஒரு பக்கம் ட்ரம்பின் உருவமும், இன்னொரு பக்கம், அமெரிக்காவை உருவாக்கிய தலைவர்களின் உருவமும் பொறிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இந்தப் பாஸ்போர்ட் வருகிற ஜூலை மாதம் முதல் வழங்கப்பட உள்ளது. அதன் எண்ணிக்கை இருக்கும் வரை, தொடர்ந்து வழங்கப்பட உள்ளதாம்.
















