செய்திகள் :

'என்னா பங்கு இப்படி ஆயிடுச்சு?' - சன்ரைசர்ஸிடமும் அடிவாங்கிய மும்பை!

post image

புள்ளிப் பட்டியலில் பெரியளவில் மாற்றமில்லை, இருப்பினும் இந்த ஒரு போட்டியின் முடிவு சன்ரைசர்ஸை பிளே ஆஃப்புக்கு அருகாமையிலும் மும்பை இந்தியன்ஸை அதைவிட்டு தள்ளியும் வைத்துள்ளது.!

இரு வெற்றிகளை மட்டுமே நடப்பு சீசனில் ருசித்திருந்த மும்பைக்கு சன்ரைசர்ஸுடனான இந்தப் போட்டியில் வெற்றி பெறுவது மிக முக்கியமானதாக பார்க்கப்பட்டது. பிளே ஆஃப் கனவை அதுதான் உயிர்ப்போடு வைத்திருக்கும் என்பதால் இனிவரும் ஒவ்வொரு போட்டியிலும் வென்றாக வேண்டிய கட்டாயம் மும்பை இந்தியன்ஸுக்கு.

MI vs SRH
MI vs SRH

பொதுவாகவே பிளேயிங் லெவனில் பல்லாங்குழி ஆடுவது மும்பை இந்தியன்ஸின் பாணியில்லை. ஆனால் நடப்பு சீசனில் எட்டாவது போட்டிக்குள்ளேயே 22 வீரர்களை மும்பை தரப்பு பயன்படுத்தி விட்டது. இது சரியான திக்கில்தான் மும்பை இந்தியன்ஸ் பயணிக்கிறதா என்ற கேள்வியை திரும்பத்திரும்ப எழ வைத்தது. சன்ரைசர்ஸுக்கு எதிரான இப்போட்டியில்கூட ஹோல்சேல் மாற்றமாக நான்கு வீரர்களை அதிரடியாக நீக்கி, நான்கு வீரர்களைச் சேர்த்திருந்தனர்.

சரியான பிளேயிங் லெவன் அமையாதது தடுமாற்றம் என்றால் அதைவிடவும் மோசமாக மும்பை எக்ஸ்பிரஸே தடம் புரளும் மாற்றம் ஓப்பனர்களை ஐந்து முறை மாற்ற வேண்டிய சூழல். ரியான் ரிக்கில்டன் கேகேஆருக்கு எதிரான போட்டியில் 188 ஸ்ட்ரைக்ரேட்டில் 81 ரன்களைச் சேர்த்த போதும், அதன்பின் வந்த நான்கு போட்டிகளில் மூன்றில் 9 ,8 மற்றும் 2 என சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, வேறுவழியின்றி அதற்கடுத்த இரு போட்டிகளில் வெளியே அமர வைக்கப்பட்டார்.

ஆனாலும் ரோஹித் மற்றும் குயின்டன் டீ காக்கின் காயம் ரியானை உள்ளே கொண்டு வந்தது. கூடவே வில் ஜாக்ஸையும் சேர்த்து இரு வெளிநாட்டு ஓப்பனர்களுடன் மும்பை களம் கண்டது. வேறு எந்த மாற்றங்களாலும் நிகழாத பேரதிசயம், இந்த ஒரு மாற்றத்தால் மும்பைக்கு நடந்தேறி நல்லதொரு இலக்கை நிர்ணயிக்க காரணமானது.

பவர்பிளே ஓவர்களை மிக சிறப்பான முறையில் மும்பை ஓப்பனர்கள் நடப்பு சீசனில் இதற்கு முன் கையாளவில்லை. ஆனால் இப்போட்டியில் 78 ரன்கள் பவர்பிளேயில் எடுக்கப்பட்டிருந்தன அதுவும் விக்கெட் இழப்பின்றி. இவ்வளவுக்கும் பவர்பிளேவுக்குள் கம்மின்ஸ் மட்டுமே இரு ஓவர்களை வீசினார். மற்ற எல்லா பௌலர்களுக்கும் ஒரு ஓவர் மட்டுமே தரப்பட்டு எல்லா வகையிலும் சன்ரைசர்ஸ் இந்தக் கூட்டணியை உடைக்க முயற்சித்தது. ஆனால் ஏழு ஓவர்களிலேயே 93 ரன்களை இக்கூட்டணி சேர்த்து விட்டது.

MI
MI

முடிந்தால் பெரிய ஷாட்டுக்குப் போவோம், அப்படியில்லா விட்டாலும் விக்கெட்டுகளுக்கு இடையே ஓடி ரன்வந்து கொண்டே இருப்பதை உறுதி செய்வோம் என்ற அணுகுமுறையைக் கையாண்டனர். வில் ஜாக்ஸின் விக்கெட் வீழ்த்தப்பட்டு அடுத்தடுத்த பேட்ஸ்மேன்கள் மறுமுனையில் வந்த போதும் பெரும்பாலும் டாட் பால்கள் இல்லாதவாறு மும்பை பேட்ஸ்மேன்கள் கவனமாக ஆடினர்.

மறுமுனையில் ஹர்திக் பாண்டியா தவிர்த்து வேறு யாரும் பெரியளவிலான ரன்குவிப்பில் ஈடுபடவில்லை. ரியானுக்கு சப்போர்டிங் ரோலினை மட்டுமே செய்து கொண்டிருந்தனர். 44 பந்துகளில் ரியான் ரிக்கில்டனால் அடிக்கப்பட்ட இந்த சதம்தான் ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் வீரர் ஒருவரால் அடிக்கப்பட்ட அதிவேக சதம் என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பைக்கு உதிரியாகக் கிடைத்த ரன்களை விட தனித்தனியே சூர்யக்குமார் மற்றும் திலக்கின் பேட்டிலிருந்து வந்த ரன்கள் குறைவு. இருந்தபோதிலும் 243 ரன்களை மும்பை எட்டியதற்கு முக்கிய காரணம் ரியானின் இன்னிங்க்ஸ் மட்டுமே.

கம்மின்ஸ் மற்றும் இஷான் மலிங்கா தவிர்த்து மற்ற எல்லா சன்ரைசர்ஸ் பௌலர்களது பந்துகளுமே ரியானால் கடும் சேதாரத்தை சந்தித்து எக்கானமி 13-ஐ தாண்டி இருந்தது. அனுபவமில்லாதது சில நேரங்களில் பேக் ஃபயர் ஆகும் என்பதுவும் நிரூபணம் ஆனது. இருபது ஓவரும் தாக்குப்பிடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் 55 பந்துகளில் 123 ரன்களை ரியான் அடித்திருந்தார். போதுமான அளவு ஆதரவு மறுமுனையில் இருந்தும் கிடைத்திருந்தால் இன்னமும் 20 - 30 ரன்களை மும்பை எளிதாக எடுத்திருக்கலாம் சற்றேனும் சன்ரைசர்ஸினை அச்சுறுத்திப் பார்த்திருக்கலாம்.

SRH
SRH

சன்ரைசர்ஸின் ஃபார்முக்கும் ஓப்பனர்களின் பேட்டிங் ஆதிக்கத்திற்கும் இந்த இலக்கு போதுமானது தானா என்ற சந்தேகத்தோடு தான் முதல் பாதி முடிவுக்கு வந்தது. இரண்டாவது பாதியின் பவர்பிளேவின் முடிவின் போதே சந்தேகம் உறுதிப்படுத்தப்பட்டது. விக்கெட் விழாதது மட்டுமல்ல பிரச்சனை, பும்ரா மற்றும் போல்டின் பந்துகளால் கூட பெரியளவில் சன்ரைசர்ஸ் ஓப்பனர்களை அசைத்துப் பார்க்க முடியாமல் போனது. அடிக்கடி பந்து எல்லையைக் கடப்பதையும் பார்க்க முடிந்தது. இரு இடக்கை பேட்ஸ்மேன்களையும் குறிவைத்து அனுப்பப்பட்ட வில் ஜாக்ஸின் வித்தைகளும் இந்தக் கூட்டணியிடம் பலிக்கவில்லை. 19 ரன்களுடன் காஸ்ட்லி ஓவராக அதனை மாற்றினர். தரப்பட்ட ரன்களில் அரை சதம் கடந்திருக்கும் பும்ராவின் ஃபார்ம் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களை மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களுக்கும் வருத்தமளிப்பதாகவே இருக்கிறது.

ஹர்திக் பாண்டியா பவர்பிளே ஓவர்களை வீசுவதைத் தவிர்த்தால் நலம் என சில கருத்துக்கள் போட்டிக்கு முன்பு வலம் வந்தன. சரி செய்து பார்ப்போமே என பாண்டியாவும் 8-வது ஓவரில் தான் பந்து வீச வந்தார். ஆனால் ஏழு ஓவர்களிலேயே 115 ரன்களை விக்கெட்டுகளையே இழக்காமல் சன்ரைசர்ஸ் எட்டி விட்டது. என்னதான் டாப் 3-ஐயும் அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளாக மும்பை தரப்பு வீழ்த்தியிருந்தாலும் பந்துகளுக்கும் தேவைப்படும் ரன்களுக்குமான இடைவெளியை பெரியளவில் குறைத்து வெல்வதற்கான அடித்தளத்தை அபிஷேக் ஷர்மா - டிராவிஸ் ஹெட் கூட்டணி உண்டாக்கி விட்டது.

ஆரம்பத்தில் தேவையான கிக் ஸ்டார்டை ஓப்பனர்கள் கொடுத்தார்கள் என்றால் அதன்பிறகு இணைந்த கிளாசன் - நித்தீஷ் ரெட்டி கூட்டணி இறுதிக்கட்ட பணிகளை செவ்வனே செய்து முடித்து விட்டது. நடப்பு சீசனில் 400 ரன்களை இந்தப் போட்டியில் கிளாசன் கடந்திருக்கிறார்.

MI
MI

மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி ஓட்டுநர் இருக்கையில் திரும்ப அமர முயற்சித்த மும்பையை மறுபடியும் வண்டியை விட்டே இறங்க வைத்து விட்டது கிளாசனின் இன்னிங்க்ஸ். "ஓப்பனர்கள் மட்டுமே தான் ஆரஞ்ச் நிற தொப்பிக்கான ரேஸில் இருக்க வேண்டுமா?!", என்ற கேள்வியை தொடர்ச்சியாக இந்த சீசனின் ஒவ்வொரு போட்டியிலும் அவரது பேட் இடைநிறுத்தமின்றி கேட்டுக் கொண்டே இருக்கிறது. இறுதியாக ஷலீல் அரோராவின் கேமியோவும் எட்டு பந்துகள் மீதமிருக்கும் போதே இலக்கு எட்டப்படுவதை உறுதி செய்தது.

நடப்பு சீசனில் இதுவரை பத்து முறை 200+ ஸ்கோர்கள் சேஸ் செய்யப்பட்டிருக்கின்றன. ஒரே சீசனில் இத்தனை முறை இது நடந்தேறுவது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. கம்மின்ஸ் போட்டிக்குப் பிந்தைய பேட்டியில் குறிப்பிட்டதைப் போல 200-கள் மட்டுமல்ல 240+ ரன்கள் கூட இப்போது சேஸ் செய்யக் கூடியதாக மாறி விட்டது.

பௌலர்களின் பணிதான் இதன் வாயிலாக மேலும் மேலும் சவாலானதாக மாறி வருகிறது.!

IPL: டிரெஸ்ஸிங் ரூமில் தடை செய்யப்பட்ட E-Cigarette பயன்படுத்திய ரியான் பராக்? தீயாய் பரவும் வீடியோ

ஐபிஎல் தொடரில் நேற்று(ஏப்ரல்28) பஞ்சாப் vs ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி முலன்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியின் போது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் டிரெஸ்ஸிங் ரூமி... மேலும் பார்க்க

'உங்கள் லட்சியங்களுக்கு 100% நேர்மையாக இருங்கள்; எனக்கு 8 வயது இருக்கும்போதே.!'- கோலி அறிவுரை

நட்சத்திர வீரரான விராட் கோலி டெல்லியில் உள்ள பள்ளி ஒன்றில் இன்று (ஏப்ரல். 28) கிரிக்கெட் அகாடமியை திறந்து வைத்திருக்கிறார். திறப்பு விழாவில் கலந்துகொண்ட கோலி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார். ... மேலும் பார்க்க

DC vs RCB: "என்ன நடந்துச்சுன்னே புரியல..." - புலம்பும் டெல்லி கேப்டன் அக்சர் படேல்

ஐபில் தொடரில் நேற்று (ஏப்ரல்27) நடைபெற்ற பெங்களூரு vs டெல்லி அணிகளுக்கு இடையிலனா போட்டி ஒரு தலை போட்டியாக நடந்து முடிந்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி வெறும் 75 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அ... மேலும் பார்க்க

'பேட்டிங் பிட்ச்சில் பௌலர்கள் சாதித்தது எப்படி?' - விளக்கும் ரஜத் பட்டிதர்

ஐபிஎல் 2026-ன் நேற்றைய(ஏப்ரல் 27) ஆட்டத்தில், டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருஅணி ஒரு இமாலய வெற்றியைப் பதிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, ஆர்சிபி பந்துவீச்சா... மேலும் பார்க்க

'49 யை தாண்டிட்டாங்களே ஆத்தா.!' - ஆர்.சி.பியின் வெற்றியும் சிறு நெருடலும்!

டெஸ்ட் களத்தின் எல்லாக் காட்சிகளையும் கண்களின் முன் விரிய வைத்து விட்டது ஆர்சிபி வெர்ஸஸ் டெல்லி கேப்பில்ஸ் போட்டி.இப்போட்டிக்கு முன்பாக ஆடிய நான்கு போட்டிகளில் டெல்லி வென்றது ஆர்சிபியை மட்டுமே என்றால்... மேலும் பார்க்க

8 ரன்களுக்கு 6 விக்கெட்; சீட்டுக்கட்டாய் வீழும் பேட்டர்கள்- சரியும் டெல்லி; மாஸ் காட்டும் ஆர்.சி.பி!

"ஈசாலா கப் நம்தே" கோஷம் பெங்களூரு சின்னசாமியில் மட்டுமல்ல, டெல்லி அருண் ஜெட்லி மைதானத்திலும் காது கிழிய ஒலிக்கிறது. 8 ரன்னுக்கு 6 பேர் அவுட் என்றால், அதை 'பேட்டிங் வரிசை' என்பதா அல்லது கால்பந்து ஸ்கோர... மேலும் பார்க்க