செய்திகள் :

UPSC மாணவர்களுக்கு பாதிப்பா?: `அரசுத் திட்டங்களைச் சீர்குலைப்பவர்களுக்கு...' - TRB ராஜா

post image

தமிழக அரசின் 'நான் முதல்வன்' உள்ளிட்ட பல்வேறு முன்னோடித் திட்டங்களில் பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் ஆலோசகர்கள் பணிநீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக எழுந்துள்ள தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இது குறித்து முன்னாள் தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ள நிலையில், சமூக வலைதளங்களிலும் இது குறித்த கவலைகள் வலுத்து வருகின்றன.

UPSC
UPSC

இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தன் எக்ஸ் பக்கத்தில், ``நான் முதல்வன், ஸ்டார்ட்அப் டிஎன் (Startup TN) மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை (SPI) ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக வரும் செய்திகள் வேதனையளிக்கின்றன. இது UPSC தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களின் எதிர்காலத்தையும், இளைஞர்களின் புத்தொழில் முயற்சிகளையும் பாதிக்கும். திராவிட மாடல் திட்டங்களைச் சீர்குலைக்க நினைத்தால் மௌனமாக இருக்க மாட்டோம்" என்று பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாகச் சமூக வலைதளங்களில் எழுப்பப்பட்டுள்ள கோரிக்கையில், 'நான் முதல்வன்' திட்டம் மட்டுமன்றி, தமிழக அரசின் பல்வேறு முக்கியத் துறைகளில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களும் தற்போது பீதியில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக:

  • ஸ்டார்ட்அப் டிஎன் (Start-up TN)

  • கைடன்ஸ் தமிழ்நாடு (Guidance TN)

  • மாநிலத் திட்டக் குழு (State Planning Commission)

  • நான் முதல்வன் துறைகள் (Naan Mudhalvan Verticals)

  • ஐடிஎன்டி ஹப் (ITnT Hub)

‘நான் முதல்வன்’ திட்டம்
  • டிஎன் வி சேஃப் (TN We Safe)

  • செய்தி மக்கள் தொடர்புத் துறை (TNDIPR)

  • சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை (SPI)

  • விழுதுகள் (Vizhuthugal)

  • தாட்கோ (Tahdco)

மற்றும் இதர ஆலோசகர்கள் (Consultants) எனப் பல தரப்பினரும் இந்த பணிநீக்க அச்சுறுத்தலால் கலக்கத்தில் உள்ளனர்.

முதனிலைத் தேர்வு மே 24 அன்று நடைபெற உள்ளதால், இந்தக் கடைசி 15 நாட்கள் மிகவும் முக்கியமானவை. கல்வி வழிகாட்டுதலுக்கு மட்டுமல்லாமல், இறுதிக்கட்டத்தில் தேர்வர்களின் நம்பிக்கையை வளர்க்கவும், நிலையான வழிகாட்டி ஆதரவு மிகவும் அவசியம். எனவே, அரசு அதிகாரிகளின் இத்தகைய நடவடிக்கைகள் தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களை முடக்கும் எனச் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தவெக: ``அடுத்த எம்.ஜி.ஆர்; அதிமுக ஆதரவளித்து..." - ஆளுநருக்கு வேண்டுகோள் விடுக்கும் தம்பி ராமையா

தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள அரசியல் சூழலில், தமிழகப் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், தவெக தலைவர் விஜயை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை எனக் கூறப்படுகிற... மேலும் பார்க்க

'ஆளுநரின் வழி நிகழும் ஜனநாயகப் படுகொலை!' - குழியில் தள்ளப்படும் மக்களின் அதிகாரம்!

ஆளுநர் தன் பதவியின் அதிகாரத்தையும் வரையரையையும் ஜனநாயகத்துக்கு சவால்விடும் போக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் அரங்கேறியிருக்கிறது. தமிழகமும் அதற்கு விதிவிலக்கல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அ... மேலும் பார்க்க

ஆடுறா ராமா... ஆடுறா! - மீண்டும் அரங்கேறுகிறதா ஆளுநரை வைத்து `அரசியல்' ஆட்டம்? - Vikatan Cartoon

மீண்டும் ஆளுநர்... மீண்டும் அரசியல் சூதாட்டமா?!ஆடுறா ராமா... ஆடுறா!ஒட்டுமொத்த இந்தியாவுமே தமிழ்நாட்டின் அரசியல் நகர்வுகளை மிக உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலத்தின்... மேலும் பார்க்க

கட்சி அலுவலகத்தில் பெண் MLA-வை கட்டியணைக்க முயன்ற கேரள காங்கிரஸ் நிர்வாகி; அநாகரிக செயலால் சர்ச்சை!

திருவனந்தபுரத்தில் உள்ள கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டி (KPCC) அலுவலகத்தில் நடந்த சங்கடமான நிகழ்வு, தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. சமீபத்தில் கேரள மாநில சட்டமன்றத் தேர்தல்... மேலும் பார்க்க

தவெக: ``ஆளுநரின் நடவடிக்கை மாநில உரிமைகளுக்கு எதிரானது; இதைச் செய்யலாம்..!"- துரை வைகோ சொல்வது என்ன?

தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கத் தேவையான 118 தொகுதிகளில் தவெக வெற்றிபெறவில்லை. அதனால் தவெக தனித்து ஆட்சி அமைக்க முடியவில்லை. இதனால், காங்கிரஸ் தன் முழு ஆதரவையும் தெரிவித்திருக்கிறது. இதற்கிடையில் தவெக தலை... மேலும் பார்க்க

`மதவாத சக்திகளுக்கு இடமளிக்கக் கூடாது; நிலையான ஆட்சி என்பதே...' - திமுக எம்.எல்.ஏ-க்கள் தீர்மானம்!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக மாபெரும் வெற்றியைப் பதிவுசெய்திருக்கும் நிலையில், திமுக தோல்வியைத் தழுவியது. இதற்கிடையில், 108 இடங்களில் வென்ற தவெக, மீதமிருக்கும் இடங்களுக்கு திமுக கூட்டணிக் ... மேலும் பார்க்க