செய்திகள் :

தவெக: ``அடுத்த எம்.ஜி.ஆர்; அதிமுக ஆதரவளித்து..." - ஆளுநருக்கு வேண்டுகோள் விடுக்கும் தம்பி ராமையா

post image

தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள அரசியல் சூழலில், தமிழகப் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், தவெக தலைவர் விஜயை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனங்களைப் பதிவு செய்திருக்கின்றனர். இந்த நிலையில், நடிகரும், இயக்குநருமான தம்பி ராமையா கதை, வசனத்தில் அவரது மகன் உமாபதி திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் படம் தங்க நட்சத்திரம் 2026 (TN 2026). நட்டி நட்ராஜ் ஹீரோவாக நடிக்க அவருடன் எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா, இளவரசு உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர்.

Natty - TN 2026
Natty - TN 2026

இந்தப் படத்தில் குறிப்பிட்ட நடிகரின் ரெபரென்ஸ் இருந்தது சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இதற்கிடையில், நடிகர் தம்பி ராமையா ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ``நடந்து முடிந்த தேர்தலில் தம்பி விஜய் அவர்கள் 40 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார். சுமார் 2 கோடி மக்கள் அவருக்கு வாக்களித்துள்ளனர். இது வெறும் வாக்காளர்களின் எண்ணிக்கை மட்டுமல்ல, ஓட்டுரிமை அற்ற லட்சக்கணக்கான மாணவ - மாணவிகள் மற்றும் குழந்தைகளின் நம்பிக்கையும் இதில் அடங்கியுள்ளது.

கடந்த சில நாட்களாக நிலவும் இழுபறி நிலையால் தமிழகத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் மாணவர்கள் பெரும் மனச் சஞ்சலத்திற்கு ஆளாகியுள்ளனர். "எப்போது வருவார்?", "எப்போது பதவி ஏற்பார்?" என்ற ஏக்கத்துடன் ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகள் காத்திருக்கின்றனர்.

எனவே, ஆளுநர் தம்பி விஜயை அழைத்து ஆட்சி அமைக்க அனுமதிக்க வேண்டும். அவர் கோரியுள்ள இரண்டு வார கால அவகாசத்தை வழங்க வேண்டும். சட்டமன்றத்தில் அவர் தனது பெரும்பான்மையை நிரூபித்தால் ஆட்சி தொடரட்டும்.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்

ஒருவேளை நிரூபிக்கத் தவறினால், சட்டப்படி ஆட்சியை கலைத்துவிட்டு அடுத்த தேர்தலைச் சந்திக்கலாம். ஆனால், தற்போது நிலவும் இனம் புரியாத குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க அவரை அழைக்க வேண்டும். விஜயை அடுத்த 'எம்.ஜி.ஆர்' ஆகப் பார்க்கும் மக்கள் விருப்பத்தை ஏற்று, அதிமுக அவருக்கு ஆதரவு அளித்து ஆட்சிப் பீடத்தில் அமர வைக்க வேண்டும். குழந்தைகளையும் சிறார்களையும் இந்த மன அழுத்தத்திலிருந்து காப்பாற்ற, ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

UPSC மாணவர்களுக்கு பாதிப்பா?: `அரசுத் திட்டங்களைச் சீர்குலைப்பவர்களுக்கு...' - TRB ராஜா

தமிழக அரசின் 'நான் முதல்வன்' உள்ளிட்ட பல்வேறு முன்னோடித் திட்டங்களில் பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் ஆலோசகர்கள் பணிநீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக எழுந்துள்ள தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்பட... மேலும் பார்க்க

'ஆளுநரின் வழி நிகழும் ஜனநாயகப் படுகொலை!' - குழியில் தள்ளப்படும் மக்களின் அதிகாரம்!

ஆளுநர் தன் பதவியின் அதிகாரத்தையும் வரையரையையும் ஜனநாயகத்துக்கு சவால்விடும் போக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் அரங்கேறியிருக்கிறது. தமிழகமும் அதற்கு விதிவிலக்கல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அ... மேலும் பார்க்க

ஆடுறா ராமா... ஆடுறா! - மீண்டும் அரங்கேறுகிறதா ஆளுநரை வைத்து `அரசியல்' ஆட்டம்? - Vikatan Cartoon

மீண்டும் ஆளுநர்... மீண்டும் அரசியல் சூதாட்டமா?!ஆடுறா ராமா... ஆடுறா!ஒட்டுமொத்த இந்தியாவுமே தமிழ்நாட்டின் அரசியல் நகர்வுகளை மிக உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலத்தின்... மேலும் பார்க்க

கட்சி அலுவலகத்தில் பெண் MLA-வை கட்டியணைக்க முயன்ற கேரள காங்கிரஸ் நிர்வாகி; அநாகரிக செயலால் சர்ச்சை!

திருவனந்தபுரத்தில் உள்ள கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டி (KPCC) அலுவலகத்தில் நடந்த சங்கடமான நிகழ்வு, தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. சமீபத்தில் கேரள மாநில சட்டமன்றத் தேர்தல்... மேலும் பார்க்க

தவெக: ``ஆளுநரின் நடவடிக்கை மாநில உரிமைகளுக்கு எதிரானது; இதைச் செய்யலாம்..!"- துரை வைகோ சொல்வது என்ன?

தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கத் தேவையான 118 தொகுதிகளில் தவெக வெற்றிபெறவில்லை. அதனால் தவெக தனித்து ஆட்சி அமைக்க முடியவில்லை. இதனால், காங்கிரஸ் தன் முழு ஆதரவையும் தெரிவித்திருக்கிறது. இதற்கிடையில் தவெக தலை... மேலும் பார்க்க

`மதவாத சக்திகளுக்கு இடமளிக்கக் கூடாது; நிலையான ஆட்சி என்பதே...' - திமுக எம்.எல்.ஏ-க்கள் தீர்மானம்!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக மாபெரும் வெற்றியைப் பதிவுசெய்திருக்கும் நிலையில், திமுக தோல்வியைத் தழுவியது. இதற்கிடையில், 108 இடங்களில் வென்ற தவெக, மீதமிருக்கும் இடங்களுக்கு திமுக கூட்டணிக் ... மேலும் பார்க்க