தீர்க்கமுடியாத பிரச்னைகளைத் தீர்த்து வைக்கும் மஹா பிரத்தியங்கிரா ஹோமம்... நீங்கள...
NRI Corner: பயந்து ஒதுங்கி நின்றால், எதிர்காலத் தேவைகளை எப்படி நிறைவேற்றிக் கொள்ள முடியும்?
'பிசினஸ் ஆரம்பிக்கலாமா? அய்யய்யோ, அது பெரிய ரிஸ்க் ஆச்சே!' எனப் பலரும் எளிதில் ஒதுங்கிவிடுவார்கள். வேலை செய்வதில் மிகத் திறமைசாலிகளான தமிழர்கள் உலகம் முழுக்க உள்ள மிகப் பெரிய நிறுவனங்களில் தலைமைப் பதவிகளில் உட்கார்ந்து, சொற்ப சம்பளத்தை வாங்கி, தான் வேலை பார்க்கும் நிறுவனத்தின் முதலாளியைப் பெரும் பணக்காரராக ஆக்கிக்கொண்டிருப்பவர்கள் தமிழர்கள்தான்.
இதற்காக தமிழர்களுக்கும் பிசினஸுக்கும் சம்பந்தமே இல்லை என்று சொல்லிவிட முடியாது. உலகப் புகழ்பெற்ற பல நிறுவனங்களை தமிழர்கள் வெற்றிகரமாக நடத்தி வரத்தான் செய்கிறார்கள். பெருவாரியான மக்கள் ரிஸ்க் எடுத்து பிசினஸ் தொடங்க முன்வருவதில்லை என்பதே உண்மை.

இந்த ரிஸ்க் எடுக்க மறுக்கும் மனோபாவம் பிசினஸைத் தொடங்குவதில் மட்டுமல்ல, முதலீட்டில் நன்றாக தெரிகிறது. எதிர்காலத்துக்குத் தேவையான பணத்தைச் சேர்க்க நினைத்தால், அவர்கள் முதலில் நாடுவது வங்கி பிக்சட் டெபாசிட்தான்.
6.5% வட்டி என்பது மிகப் பெரிய வருமானம். பிகசட் டெபாசிட்டில் ரிஸ்க் என்பது இல்லவே இல்லை என்பது வெளிநாடுகளில் வசிக்கும் பலரது எண்ணம்.
வெளிநாடுகளில் வசிக்கும் பல தமிழர்களுடன் பேசியதில் ஐந்தில் மூன்று பேர் தங்கள் பணத்தின் கணிசமான பகுதியை வங்கி பிக்சட் டெபாசிட்டில் வைத்திருக்கின்றனர். இந்த வங்கி பிக்சட் டெபாசிட்டில் கிடைக்கும் லாபத்துக்கு எந்த வரியும் கட்டத் தேவை இல்லை என்பது வேறு எந்த முதலீட்டையும் பார்க்க முடியாமல் வெளிநாட்டுத் தமிழர்களின் கண்களை மறைத்துவிடுகிறது.
வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களிடம் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு பற்றி பேசினால், 'அய்யய்யோ, அதில் பணம் போட்டால், நஷ்டம் வந்துவிடுமே! என் நண்பர் இப்படித்தான் 80% பணத்தை இழந்தார்' என்று சொல்வார்கள்.
உள்ளபடி பார்த்தால், மியூச்சுவல் ஃபண்டில் ஒருவர் சரியாக முதலீடு செய்திருந்தால், 80% வேண்டாம், 50% பணத்தைக்கூட இழப்பதற்கு வாய்ப்பில்லை. மியூச்சுவல் ஃபண்டில் தப்பும் தவறுமாக முதலீடு செய்துவிட்டு, பிற்பாடு பணம் போச்சு!
மியூச்சுவல் ஃபண்ட் முதலேடே மோசம் என்று ஒதுங்கி நிற்பது எப்படி சரியாகும்? வெறும் வங்கி பிக்சட் டெபாசிட் மூலம் எதிர்காலத் தேவைகளுக்கான பணம் அத்தனையும் சேர்த்துவிட முடியுமா?

முடியாது என்பதை ஒப்புக்கொண்டால், மியூச்சுவல் ஃபண்டில் எப்படி முதலீடு செய்வது, அதில் முதலீடு செய்யும்முன் என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும், அதில் உள்ள ரிஸ்க்குகள் என்ன, அந்த ரிஸ்க்குகளைக் கடந்துவரும் வழி என்ன, நீண்ட காலத்தில் இந்த முதலீட்டின் மூலம் 12% லாபம் சம்பாதிப்பது எப்படி என்பதை எல்லாம் எடுத்துச் சொல்ல 'லாபம்' நிறுவனம் தொலைபேசியில் நேருக்கு நேர் பேசும் ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தித் தரத் தயாராக உள்ளது.
வரும் சனிக்கிழமை காலை 10 மணி முதல் 12.30 மணி வரை கூகுள் மீட்டில் பேசலாம். இதற்கு NRI Calendly - https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-nri என்கிற லிங்க்கினை சொடுக்கி, தங்கள் பெயரையும் நேரத்தையும் பதிவு செய்துகொள்ளலாம்.
இது வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கு சிறப்பு ஏற்பாடு என்பதால், அவர்கள் மட்டுமே இந்தக் காலண்டி லிங்க்கில் தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்வது அவசியம்!
எந்த முதலீடு சரியானது, எந்த முதலீடு நம் எதிர்காலத் தேவைகளைக் குறை இல்லாமல் நிறைவேற்றித் தரும் என்பதை இனியாவது சரியாகப் புரிந்துகொண்டால்தான், நாம் பயம் இல்லாமல் இருக்க முடியும் அல்லவா?
லாபம் வாட்ஸ் அப் சேனல்
Whatsapp Groups
வெளிநாடு வாழ் தமிழர்களுக்கான 'லாபம்' வாட்ஸ் அப் குரூப்பில் இணைய விருப்பமா? பின்வரும் லிங்க்கினை கிளிக் செய்யுங்கள்... https://chat.whatsapp.com/DbJob5Df5Ze1eT3cwsYN9N
Labham Whatsapp Channel
'லாபம்' வாட்ஸ் அப் சேனலில் இணைய விருப்பமா? பின்வரும் லிங்க்கினை கிளிக் செய்யுங்கள்...
https://whatsapp.com/channel/0029VbAPqXkIt5rnQOIS4k3o
Labham Youtube Video: www.youtube.com/@labham_money
Labham Website: https://labham.money/tamil
















