செய்திகள் :

PM SHRI: "அழுத்தத்திற்கு அடிபணியமாட்டோம்" - பிஎம் ஸ்ரீ திட்டம் குறித்து அமைச்சர் ராஜ்மோகன்

post image

பிஎம் ஸ்ரீ திட்டத்தில் மத்திய அரசின் அழுத்தங்களுக்கு அடிபணிய மாட்டோம் எனp பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்திருக்கிறார்.

சென்னையில் இன்று (மே.19) செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், "தமிழக வெற்றிக் கழகத்தைப் பொறுத்தவரை பெண்ணுரிமை, மண்ணுரிமை இரண்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்

எல்லாத் துறையும் எங்கள் தலைவருக்குப் பிடித்த துறைதான். குறிப்பாக பல்வேறு சவால்களுக்கு மத்தியில் இந்தப் பள்ளி கல்வித்துறையைச் சிறப்பான திசையை நோக்கி வழிநடத்திக்கொண்டிருக்கிறோம்.

ஒடுக்கப்பட்டவர்களுக்கும் முதல் உரிமைக்கொடுக்கும் அரசாங்கமாக எங்கள் அரசாங்கமாக இருக்கும். தமிழ்நாட்டில் உள்ள எல்லாப் பள்ளிகளிலும் வசதிகளை மேம்படுத்துவதற்கான நிதிகளை ஒதுக்கீடு செய்து முதல்வரின் கவனத்திற்கு எடுத்து சென்றிருக்கிறோம். அதற்கான அறிவிப்பு விரைவில் வரும்.

பிஎம் ஸ்ரீ திட்டம்
பிஎம் ஸ்ரீ திட்டம்

இனிவரும் காலங்களில் மாணவர்களின் எண்ணிக்கையும், வருகையும் அதிகரிக்கும். இருமொழி கொள்கை என்பதுதான் எங்கள் கட்சியின் கொள்கை. அதில் மாற்று கருத்தே கிடையாது. கொள்கை சமரசம் என்று பேச்சுக்கே இங்கு இடமில்லை" என்றிருக்கிறார்.

தொடர்ந்து பிஎம் ஸ்ரீ திட்டம் குறித்த கேள்விக்கு, "அழுத்தத்திற்கு நாங்கள் அடிபணிய மாட்டோம்" என்று பேசியிருக்கிறார்.

மோடி பரிந்துரைத்த 'மீண்டும்' ஆன்லைன் க்ளாஸ்: கல்லூரி மாணவர்களுக்கு 'ஓகே'; ஆனா, பள்ளி மாணவர்களுக்கு?

இன்னும் கிட்டத்தட்ட 15 நாள்களில் பள்ளி, கல்லூரி ரீ-ஓபன் ஆகிறது. அந்நிய செலாவணி கையிருப்பு... இந்திய பொருளாதார நெருக்கடி ஆகியவற்றை கைகாட்டி இந்திய பிரதமர் மோடி பள்ளி, கல்லூரிகள் ஆன்லைன் க்ளாஸ் நடத்தலாம... மேலும் பார்க்க

வெளியானது +2 தேர்வு முடிவுகள்! அதிகம் தேர்ச்சி பெற்ற மாவட்டம் இதுதான் - முழு விவரம்

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் தொடங்கின. இதையடுத்து மார்ச் 2ஆம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் தொடங்கின. அதன்பிறகு மார்ச் 26ஆம் தேதி வரை நடத்தப்பட்டன. கடந்த மா... மேலும் பார்க்க