மூன்றாவது குழந்தையும் முப்பதாயிரமும்! - மக்கள் தொகை மாற்றத்தின் எதார்த்தம்
'ருத்துராஜின் கேப்டன் பதவி பறிக்கப்படுகிறதா?' - ப்ளெம்மிங் என்ன சொல்கிறார்?
சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான போட்டி நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் நடந்திருந்தது. நேற்றைய போட்டியில் தோற்றதன் மூலம் சென்னை அணி ஏறக்குறைய ப்ளே ஆஃப்ஸ் வாய்ப்பை இழந்துவிட்டது. இந்நிலையில், போட்டிக்கு பிறகு பேசிய பயிற்சியாளர் ப்ளெம்மிங் தோனியின் ஓய்வு, ருத்துராஜின் கேப்டன்சி எதிர்காலம் என நிறைய விஷயங்கள் குறித்து பேசியிருந்தார்.

ப்ளெம்மிங் பேசியதாவது, ``இது ஒரு சவாலான சீசன். நாங்கள் இந்த சீசனை சிறப்பாக தொடங்கவில்லை. ஆனாலும் 6 போட்டிகளை வென்று கம்பேக் கொடுத்ததில் மகிழ்ச்சி. சில இளம் வீரர்கள் தங்களின் திறனை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கின்றனர். சில வீரர்கள் இடையில் காயமடைந்தது எங்களின் மொமண்டமை குலைத்தது.
தோனியின் ஓய்வு பற்றி நிறைய பேசிவிட்டோம். அணி நிர்வாகம்தான் அதில் முடிவெடுக்க வேண்டும். தோனி சென்னை அணியோடு இருப்பது ரொம்பவே முக்கியம். தோனி இந்த சீசனில் எந்த போட்டியிலும் ஆடவில்லையெனினும், இளம் வீரர்களால் சூழப்பட்ட இந்த அணியில் நிறைய தாக்கம் செலுத்தினார்.
ருத்துராஜ் சென்னை அணிக்காக இதை விட சிறப்பாக ஆடியிருக்கிறார். அவரால் இப்போது ஆடுவதை விட இன்னும் சிறப்பாக ஆட முடியும். அவரின் ஆட்டத்தில் என்ன பிரச்னை என்பதையும் அவரே கண்டறிவார் என நினைக்கிறேன். ஒரு கேப்டனாக ருத்துராஜை பார்க்கையில், அவர் கடந்த சீசனில் பாதி போட்டிகளில் ஆடவில்லை. அதனால் அவர் மீது தீர்ப்புகளை எழுதுவதில் நியாயமில்லை. ஒரு ஆகச்சிறந்த கேப்டனின் இடத்தை ஒரு புதிய கேப்டன் வந்து நிரப்புவது அத்தனை எளிதான விஷயமில்லை. ருத்துராஜ் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள கொஞ்சம் கால அவகாசம் தேவைதான். கற்றுக்கொள்ள வாய்ப்பிருக்கும் ஒவ்வொரு தருணத்திலும் அவர் கற்றுக்கொள்கிறார். இன்னும் கொஞ்ச காலத்தில் இந்த அணியின் திறமையான கேப்டனாக ருத்துராஜ் மாறி நிற்பார்" என்றார்.


















