செய்திகள் :

”கொளத்தூர் மக்கள் நன்றி மறந்தவர்கள்; திருச்சி கிழக்கில்..!” - அனிதா ராதாகிருஷ்ணன்

post image

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து 7வது முறையாக தி.மு.க வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.  இதையடுத்து தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு நன்றி அறிவிக்கும் கூட்டம் நடந்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக  திருச்செந்தூரில் நடந்த கூட்டத்தில் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன்,  ”எங்கள் கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி 27 தொகுதிகளில் போட்டியிட்டு ஐந்து தொகுதிகள் மட்டுமே வெற்றி பெற்றது.

அனிதா ராதாகிருஷ்ணன்

தமிழ்நாட்டு மக்கள் இனி உங்கள் முகத்தில் கரியை பூசுவார்களே தவிர இனி ஒரு காலமும்  காங்கிரஸால் வெற்றி பெற முடியாது. தி.மு.க-வை வீழ்த்தி விடலாம் என்று கனவு காண்கிறீர்களா? கனவு காணாதீர்கள். பாராளுமன்ற தேர்தலின் போது காங்கிரஸ் கட்சியில் பிரதமர் வேட்பாளர் என்று யார் வந்தாலும் அவர்களை ஓட ஓட விரட்டி அடிப்போம்.

இன்னும் நான்கு மாதம்தான் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி நிலைக்கும். அதுவரை தி.மு.க.,தான் இந்த ஆட்சியை தாங்கிக் கொண்டிருக்கும். நான்கு அல்லது ஆறு மாதத்தில் மீண்டும் ஸ்டாலின்தான் முதல்வராக வருவார். தமிழகத்திற்குள் மீண்டும் லாட்டரியை கொண்டுவர, அமைச்சர் ஆதவ் அர்ஜூனா முயற்சிக்கிறார். தமிழகத்தில் லாட்டரி  நுழைய நாங்கள் இடம் கொடுக்க மாட்டோம். அவருக்கு துணிச்சல் இருந்தால் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறட்டும் பார்க்கலாம்.

கலந்து கொண்டவர்கள்

திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம். அவரை ஒரு லட்சம் வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெறச் செய்வோம். கொளத்தூர் தொகுதியை, சிங்கப்பூர் போல ஸ்டாலின் மாற்றி வைத்திருந்தார். ஆனால், அந்த தொகுதி மக்கள் நன்றி மறந்தவர்கள். அவருக்கு ஓட்டு போடவில்லை” என்றார்.  

TVK: ’அதிகாரிகளை வீட்டிற்கு வரவழைத்து ஆய்வுக் கூட்டம் நடத்தினாரா?’ - சர்ச்சையில் MLA கனிமொழி சந்தோஷ்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக த.வெ.க-வைச் சேர்ந்த கனிமொழி சந்தோஷ் பதவி வகித்து வருகிறார்.இந்த நிலையில் கனிமொழி சந்தோஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், ”கவுண்டம்பாளையம் ... மேலும் பார்க்க

`தமிழகத்தை ஆட்சி செய்யும் தகுதியை தவெக இழந்துவிட்டது!’ - தவெகவை சாடும் அதிமுக

புதுச்சேரி அதிமுகவின் மாநிலச் செயலாளர் அன்பழகன் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ``நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் வெற்றிபெற்ற எம்.எல்.ஏ-க்களில் சிலர், தங்கள் சுயநலத்திற்... மேலும் பார்க்க

’பெயருக்கு முன்னால் `டாக்டர்' என போடுவது ஏன்?’ – கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ. விளக்கம்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் துடியலூர் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் காய்கறி சந்தையில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியள... மேலும் பார்க்க

’விசுவாசம் குறித்து அனிதா ராதாகிருஷ்ணன் பேசுவது அரசியல் முரண்பாட்டின் உச்சம்!’ –காங்கிரஸ் பதிலடி

காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கணபதி சிவகுமார் வெளியிடுள்ள அறிக்கையில், “அமைச்சர் பதவியும் அதிகாரமும் பறிபோன பின்னர், அரசியல் விரக்தியிலும் அகங்காரத்திலும் சிலர் தங்களது நாவைக் கட்டுப்படுத்... மேலும் பார்க்க

மீண்டும் பெட்ரோல், டீசல் விலை 90 பைசா ஏற்றம்; சென்னையில் எவ்வளவு? 3 நாள்களில் இரண்டு முறை ஏற்றம்!

ஈரான் போர் தொடங்கி 2 மாதங்கள் 21 நாள்கள் ஆகின்றன. அமெரிக்கா, ஈரான் தாக்குதல் தற்காலிகமாக தான் நிறுத்தப்பட்டுள்ளதே தவிர, முழுமையாக முடிவுக்கு வரவில்லை. ஹார்முஸ் ஜலசந்தியை இன்னும் மூடியே வைத்திருக்கிறது... மேலும் பார்க்க