செய்திகள் :

தூத்துக்குடி: காதல் விவகாரத்தில் இளைஞர் ஓட ஓட விரட்டிக் கொலை; பெண்ணின் தந்தை உள்ளிட்ட 3 பேர் கைது

post image

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருகேயுள்ள கரடிகுளத்தைச் சேர்ந்தவர் சஞ்சய். இவர், சென்னையில் சிலை செய்யும் சிற்பியாக வேலை பார்த்து வந்தார். மேலும், கூலித் தொழிலுக்கும் சென்று வந்துள்ளார்.

இவரும், பக்கத்து ஊரான கெச்சிலாபுரத்தைச் சேர்ந்த கனகலெட்சுமி என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதையறிந்த கனகலெட்சுமியின் தந்தை குமார், தனது மகளைக் கண்டித்துள்ளார். ஆனாலும், இருவரும் தொடர்ந்து செல்போனில் பேசி வந்துள்ளனர்.

கோவில்பட்டி சுப்பிரமணியபுரத்தில் உள்ள தனது தம்பி மாரிமுத்து என்பவரின் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். ஆனாலும், சஞ்சய் அடிக்கடி அந்தப் பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டு பேசி வந்ததாகக் கூறப்படுகிறது.

கொலை செய்யப்பட்ட சஞ்சய்
கொலை செய்யப்பட்ட சஞ்சய்

இந்நிலையில், விடுமுறைக்கு வந்திருந்த சஞ்சய், கடந்த 17-ம் தேதி இரவு தனது நண்பர்களுடன் சென்னை புறப்பட்டார். இதற்காக அவர்கள் கரடிகுளத்தில் இருந்து கோவில்பட்டி புறவழிச்சாலையில் உள்ள புதிய கூடுதல் பேருந்து நிலையத்துக்கு வந்து, பேருந்துக்காகக் காத்திருந்தனர்.

அப்போது சஞ்சய் செல்போனுக்கு தொடர்பு கொண்ட அவர் காதலித்து வந்த பெண், எனது தந்தையும், உறவினர்களும் உங்களைச் சந்தித்து பேச வருகின்றனர். அதனால் பேருந்து நிலையத்தில் காத்திருக்கவும், நானும் அவர்களுடன் வருகிறேன் எனக் கூறியதாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து, சிறிது நேரத்தில் கனகலெட்சுமியின் தந்தை குமார், அவரது சகோதரர் மாரிமுத்து, உறவினர் சங்கர நாராயணன் மற்றும் குமாரின் மகள் கனகலெட்சுமி, உறவினர் பெண் ஆகியோர் ஆட்டோவில் அங்கு வந்தனர். குமார், மாரிமுத்து, சங்கரநாராயணன்  உள்ளிட்ட 3 பேரும் சஞ்சயைத் தனியாக அழைத்துச் சென்று பேசியுள்ளனர்.

இதில், சிறிது நேரத்தில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த குமார் உள்ளிட்ட 3 பேரும் சஞ்சயை கத்தியால் தாக்கினர். அவர்களிடமிருந்து தப்பித்துச் செல்வதற்காக ஓடியுள்ளார். இருப்பினும் அவரை ஓட ஓட விரட்டி கத்தியால் குத்தியுள்ளனர்.

இச்சம்பவத்தைப் பார்த்த சஞ்சயின் நண்பர்களும், பேருந்திற்காகப் காத்திருந்த சக பயணிகளும் அலறியடித்து ஓடினர். இதில், காயமடைந்த சஞ்சய் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மேற்கு காவல் நிலையம்
மேற்கு காவல் நிலையம்

அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை சஞ்சய் உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து கோவில்பட்டி மேற்கு போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். இதில், குமார் உள்ளிட்டோர் சஞ்சயைத் தாக்கும் போது, எதிர்பாராதவிதமாக கத்தியால் தாக்கப்பட்டு காயமடைந்த மாரிமுத்துவைக் கைது செய்து, சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி குமார், சங்கரநாராயணன் ஆகியோரையும் கைது செய்தனர்.

மகாராஷ்டிரா: ஆண் குழந்தை இல்லாததால் மனைவி மீது சந்தேகம்; பிறப்புறுப்பில் ஆசிட் ஊற்றிய கணவர்

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகில் உள்ள உருளி கஞ்சன்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இடத்தில் வசிப்பவர் சுக்காராம். வெல்டராகப் பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவி திருமணம் மீறிய உறவில் இருப்பதாகச் சந்தேக... மேலும் பார்க்க

கெளதம் அதானி மீதான குற்ற வழக்குகள்; கைவிட்ட அமெரிக்க அரசு; தள்ளுபடி செய்த நீதிமன்றம்; காரணம் என்ன?

தொழிலதிபர் கெளதம் அதானி இந்தியாவில் சோலார் மின் திட்டங்களைப் பெற அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. லஞ்சம் கொடுத்ததை மறைத்து அமெரிக்க முதலீட்டாளர்களிடம் நிதி திரட்டியதாக அ... மேலும் பார்க்க

`அந்த வலையில் மாட்டிக்கொண்டேன்...'- நண்பர்களுக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு இளம்பெண் எடுத்த விபரீத முடிவு

உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவைச் சேர்ந்தவர் துவிஷா சர்மா. எம்.பி.ஏ பட்டதாரியான இவர், டெல்லியில் உள்ள ஒரு நிறுவனத்தில் பல ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். 2024-ல் ஒரு டேட்டிங் செயலி மூலம் போபாலைச் சேர... மேலும் பார்க்க

டிரைவருடனான பழக்கத்தை கைவிட மறுத்த அக்கா; வீட்டின் முன் கொடூரக் கொலை செய்த தம்பி - நடந்தது என்ன?

தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகேயுள்ள சென்னல்பட்டியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் முத்துமாலை. இவர், பாளையங்கோட்டையில் உள்ள ஒரு அரசுடைமை வங்கியில் மேலாளராகப் பணிபுருந்து வந்தார். இவரும் இவரது... மேலும் பார்க்க

திருச்சி: திருமணம் செய்ய மறுத்த கல்லூரி மாணவி; தலையில் கல்லால் கொடூரத் தாக்குதல் நடத்திய இளைஞர்

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண், திருச்சியில் தங்கி அங்குள்ள கல்லூரி ஒன்றில் எம்.பி.ஏ படித்துக் கொண்டே, பகுதிநேர வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கும், சிவகங்கை மாவட்டம், ... மேலும் பார்க்க

சனி பூஜைக்கு வந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி - மறுத்த பெண், உறவினரை கொன்ற மந்திரவாதி

மகாராஷ்டிரா மாநிலம் துலே அருகில் உள்ள நிஜாம்பூர் ஜெய்தானே என்ற பகுதியில் வசிப்பவர் யோகேஷ் கெய்ர்னார். இவர் பில்லி சூனியம் வைக்கக்கூடிவராக அறியப்படும் ஒரு மந்திரவாதி. இவர் சொந்தமாக ஒரு கோயில் நடத்தி வர... மேலும் பார்க்க