செய்திகள் :

சனி பூஜைக்கு வந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி - மறுத்த பெண், உறவினரை கொன்ற மந்திரவாதி

post image

மகாராஷ்டிரா மாநிலம் துலே அருகில் உள்ள நிஜாம்பூர் ஜெய்தானே என்ற பகுதியில் வசிப்பவர் யோகேஷ் கெய்ர்னார். இவர் பில்லி சூனியம் வைக்கக்கூடிவராக அறியப்படும் ஒரு மந்திரவாதி.

இவர் சொந்தமாக ஒரு கோயில் நடத்தி வருகிறார். அவரது கோயிலுக்கு பக்தர்கள் பூஜை மற்றும் பில்லி சூனியம் வைக்க வருவதுண்டு. நிதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் 33 வயது பெண் அமாவாசைக்கு சனிபூஜை செய்ய வேண்டும் என்று கூறி யோகேஷிடம் வந்தார்.

யோகேஷ் சனிபூஜையை நடத்தினார். அதன் பிறகு அப்பெண்ணை தான் வீட்டில் விட்டுவிடுவதாக கூறி இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்றார். ஆனால் வாகனத்தில் செல்லும்போது யாரும் இல்லாத இடத்தில் வானகத்தை நிறுத்திவிட்டு அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார்.

ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பெண் சண்டையிட்டதோடு கத்தி கூச்சலிட்டார். இதனால் பயந்து போன யோகேஷ் அப்பெண்ணின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு சென்றுவிட்டார்.

இதனிடையே, கோயிலுக்கு அப்பெண்ணை தேடி ஒருவர் வந்தார். கோயிலுக்கு மிகவும் தாமதமாக யோகேஷ் இடம் அப்பெண் குறித்து கேள்வி எழுப்பினார். இதனால் அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில் யோகேஷ் அந்த நபரையும் கட்டையால் அடித்து கொலை செய்தார்.

கொலை செய்யப்பட்ட பெண் சாலையோரம் கிடந்தார். அவர் அணிந்திருந்த தங்க ஆபரணங்கள் அப்படியே இருந்தது. தகவல் அறிந்து வந்த போலீஸார் அப்பெண்ணின் உடலை மீட்டு விசாரணை நடத்தியதில் கொலை செய்தவர் கோயிலுக்கு சென்று இருந்தது தெரிய வந்தது. உடனே கோயிலுக்கு வந்து யோகேஷிடம் விசாரித்தபோது கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அதோடு அப்பெண்ணுடன் வந்த நபர் குறித்து கேட்டதற்கு அவரையும் அடித்து கொன்றதாகவும், அவரை தனது தோட்டத்தில் புதைக்க ஏற்பாடு செய்து வந்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து யோகேஷ் கைது செய்யப்பட்டார்.

மும்பை: கணவன் துணையோடு காதலன் கொலை; டிரம்மில் அடைத்து சாக்கடையில் வீசிய பெண் சிக்கியது எப்படி?

டிரம் கொலைகள் பற்றி உத்தரப் பிரதேசத்தில் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் மும்பையில் தற்போது அது போன்ற ஒரு சம்பவம் நடந்து இருக்கிறது. மும்பை அருகில் உள்ள மும்ப்ரா என்ற இடத்தில் வசித்தவர் அர்பாஸ் அலிகா... மேலும் பார்க்க

வாடகைக்கு பதிலாக மனைவி, 13 வயது மகளைப் பாலியல் வன்கொடுமைக்கு அனுமதித்த தந்தை; குஜராத்தில் அதிர்ச்சி

குஜராத் மாநிலம் மொர்பி என்ற இடத்தில் வசித்து வந்தவர் நரேந்திரா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). 45 வயதாகும் நரேந்திரா தனது மனைவி, மகளுடன் வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்தார். வீட்டிற்கு மாதம் ரூ.2 ஆயிரம் கொடு... மேலும் பார்க்க

திருவாரூர்: தலைக்கேறிய கஞ்சா போதை; தாத்தா பாட்டியை கொன்று தீ வைத்த பேரன்!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகில் வடுவூர் காரக்கோட்டை புதுத்தெருவில் முத்து(73)-சந்திரா(70) தம்பதியினர் வசித்து வந்தனர்.இவர்களுக்கு கலியபெருமாள் என்ற மகனும், அய்யப்பன்(30) என்ற பேரனும் உள்ளனர்.க... மேலும் பார்க்க

நெல்லை: மதுபோதையில் தகராறு; நண்பரைக் கொன்றுவிட்டு தற்கொலை என நாடகமாடியவர் சிக்கியது எப்படி?

நெல்லை மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் பொதிகையடியைச் சேர்ந்தவர் வனராஜ். இவர், கடந்த 12-ம் தேதி பாபநாசம், லோயர் கேம்ப் வனப்பகுதியில் உள்ள கோயிலுக்குச் சென்றுவிட்டு வருவதாகக்கூறிச் சென்றவர் அதன் பின்னர் வீ... மேலும் பார்க்க

நீட் தேர்வு வினாத்தாள் கசிய காரணமான புனே பேராசிரியர் கைது; சிக்கியது எப்படி? வெளியான பகீர் பின்னணி

மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு இம்மாத தொடக்கத்தில் நடந்தது. ஆனால் இத்தேர்வுக்கு ஒரு மாதத்திற்கு முன்பே தேர்வுக்கான வினாத்தாள் மாணவர்களிடையே கசிந்தது. இது தேர்வு நடந்து முடிந்த பிறகுதான் வ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி: மாணவியை மிரட்டி அந்தரங்க வீடியோ; தந்தையிடம் பணம் கேட்டு மிரட்டிய பள்ளி மாணவர்கள் கைது

பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை மிரட்டி அந்தரங்க வீடியோ எடுத்து, அம்மாணவியின் தந்தையிடம் ரூ. 10 லட்சம் கேட்ட 3 பள்ளி மாணவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.... மேலும் பார்க்க