செய்திகள் :

`ஈரானின் 5 நிபந்தனைகளும் அமெரிக்காவின் 5 பதில் நிபந்தனைகளும்.!' - என்னவாகும் போர் நிறுத்தம்?

post image

சீன பயணத்திற்குப் பிறகு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் 'ஈரான்' மீது ஃபோக்கஸ் செய்ய தொடங்கியுள்ளார்.

ட்ரம்பின் சீன பயணம் ஈரான் போரில் முக்கிய திருப்புமுனையைக் கொண்டு வரும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.

ஈரான் போர் நிறுத்தத்திற்கு ஈரானும், அமெரிக்காவும் 'நான்... நான்' என பரஸ்பரமாக ஐந்து நிபந்தனைகளை விதித்துள்ளது என்று மத்திய கிழக்கு செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் போர்
ஈரான் போர்

ஈரானின் 5 நிபந்தனைகள்:

1. ஈரான், லெபனான் மீதான அனைத்து தாக்குதல்களையும் அமெரிக்கா நிறுத்த வேண்டும்.

2. ஈரான் மீதான தடைகளை அமெரிக்கா நீக்க வேண்டும்.

3. முடக்கப்பட்டுள்ள ஈரான் நிதிகள் விடுவிக்கப்பட வேண்டும்.

4. போர் சம்பந்தமான பாதிப்புகளுக்கு நஷ்ட ஈடு வேண்டும்.

5. ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானுக்கு உள்ள இறையாண்மையை அங்கீகரிக்க வேண்டும்.

அமெரிக்காவின் 5 நிபந்தனைகள்:

1. முன்னால் விதிக்கப்பட்ட தடை மற்றும் கொள்கை முடிவுகளால் ஈரானுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு நஷ்ட ஈடு வழங்க முடியாது.

2. ஈரானிடம் இருக்கும் கிட்டத்தட்ட 400 கிலோ கிராம் யுரேனியத்தை அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும்.

3. ஈரானின் ஒரே ஒரு அணு ஆயுத நிலையம் மட்டுமே இயங்க வேண்டும்.

4. முடக்கப்பட்டுள்ள ஈரானின் சொத்துகளில் 25 சதவிகிதத்தைக் கூட விடுவிக்க முடியாது.

5. பேச்சுவார்த்தை முடிந்தால் தான் ஈரான், லெபனான் மீதான தாக்குதல்களை நிறுத்த முடியும்.

இந்த போட்டி நிபந்தனைகளால் போர் நிறுத்தம் என்னவாகும் என்ற கேள்வி எழுகிறது!

அன்பார்ந்த வேட்பாள பெருங்குடி மக்களுக்கு... நடப்பு அரசியல் கண்டு அழும் வாக்காளனின் கடிதம்!

அன்பார்ந்த வேட்பாள பெருங்குடி மக்களே..'வழக்கத்தைத் தாண்டி இந்தத் தடவை கொஞ்சம் அதிகமா ஏமாந்துட்டோமோ'ங்கிற ஆதங்கத்துடன் உங்களுக்கு ஓட்டுப் போட்ட வாக்காளன் வரையும் மடல் இது. 'யோக்கியன் வர்றான் செம்பெடுத்... மேலும் பார்க்க

“அ.தி.மு.க - தி.மு.க உறவை அம்பலப்படுத்தும் ப்ளான்.!” - த.வெ.க தலைமை வியூகம்!

தமிழக அரசியல் களத்தில் எதிரும் புதிருமாக இருந்த அ.தி.மு.கவும், தி.மு.க-வும் தமிழக தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அ.தி.மு.க- தி.மு. க கூட்டணி வைத்து ஆட்சியை ... மேலும் பார்க்க

சேலம்: `தொடர் தோல்வி எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்' - சுவரொட்டிகளால் பதறும் ஆதரவாளர்கள்

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, பெரும்பான்மையை நிரூபித்த த.வெ.க ஆட்சியை நடத்தி வருகிறது. இரண்டாம் இடம் பிடித்த தி.மு.க எதிர்கட்சியாக செயல்பட்டு வருகிறது. ஆனால், அ.தி.மு.க - வி... மேலும் பார்க்க

`நாம் நேரு அண்ணனுக்கு நன்றி கடன்பட்டுள்ளோம்'- உணர்ச்சிவசப்பட்ட நிர்வாகி; மைக்கை வாங்கிய கே.என்.நேரு

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிட்டு, தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வெற்றி பெற்றுள்ளார். தனக்கு வாக்களித்து வெற்றிபெற வைத்த பொதுமக்களுக்கு அவர் நன்றி சொல்ல... மேலும் பார்க்க

`60 ஆண்டுக்குப் பிறகு காங்கிரஸ் தலைமையில் முழுமையான அமைச்சரவை.!' - வி.டி.சதீசன் பெருமிதம்

கேரள முதல்வராக காங்கிரஸ் கட்சியை சேந்த வி.டி.சதீசன் இன்று (மே 18) காலை 10 மணிக்கு பதவி ஏற்கிறார். வி.டி.சதீசன் தலைமையில் 21 அமைச்சர்களும் இன்று பதவி ஏற்கிறார்கள். திருவனந்தபுரம் தலைமைச் செயலகம் அருகே ... மேலும் பார்க்க