செய்திகள் :

திருச்சி: திருமணம் செய்ய மறுத்த கல்லூரி மாணவி; தலையில் கல்லால் கொடூரத் தாக்குதல் நடத்திய இளைஞர்

post image

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண், திருச்சியில் தங்கி அங்குள்ள கல்லூரி ஒன்றில் எம்.பி.ஏ படித்துக் கொண்டே, பகுதிநேர வேலை பார்த்து வந்துள்ளார்.

இவருக்கும், சிவகங்கை மாவட்டம், சாலை கிராமத்தைச் சேர்ந்த வியாகுல நவீன் என்ற வாலிபருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதல் இருந்து வந்துள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில், நேற்று மாலை இருவரும் திருச்சி ரேஸ்கோர்ஸ் சாலை நடைமேடையில் பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வியாகுல நவீன் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவரைத் திருமணம் செய்ய அப்பெண்ணின் பெற்றோர் மறுப்பு தெரிவித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், இருவருக்கும் இடையே தகராறு முற்றியுள்ளது. ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற நவீன், திடீரென கீழே கிடந்த கல்லை எடுத்து அப்பெண்ணின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார்.

இதில், ரத்த வெள்ளத்தில் அந்தப் பெண் மயங்கி விழுந்த நிலையிலும், நவீன் தொடர்ந்து அவரைத் தாக்கியுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த வழியே சென்ற பொதுமக்கள், உடனடியாக பாய்ந்து சென்று நவீனை மடக்கிப் பிடித்தனர். அவரிடமிருந்து கல்லூரி மாணவியை மீட்ட பொதுமக்கள், நவீனின் கைகளைக் கட்டி வைத்து அவருக்கு தர்ம அடி கொடுத்தனர்.

accused

இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கே.கே.நகர் காவல் நிலைய போலீஸார், பலத்த காயமடைந்த மாணவியை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கைதான நவீனிடம் போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தன்னை விட்டுவிட்டு வருமாறு பெண்ணின் பெற்றோர் வற்புறுத்திய ஆத்திரத்தில் கல்லூரி மாணவியை தாக்கியதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

திருச்சியின் மையப் பகுதியில், நடுரோட்டில் கல்லூரி படிக்கும் மாணவி ஒருவரை வாலிபர் கல்லால் தாக்கியதும், அவருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்ததும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சனி பூஜைக்கு வந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி - மறுத்த பெண், உறவினரை கொன்ற மந்திரவாதி

மகாராஷ்டிரா மாநிலம் துலே அருகில் உள்ள நிஜாம்பூர் ஜெய்தானே என்ற பகுதியில் வசிப்பவர் யோகேஷ் கெய்ர்னார். இவர் பில்லி சூனியம் வைக்கக்கூடிவராக அறியப்படும் ஒரு மந்திரவாதி. இவர் சொந்தமாக ஒரு கோயில் நடத்தி வர... மேலும் பார்க்க

மும்பை: கணவன் துணையோடு காதலன் கொலை; டிரம்மில் அடைத்து சாக்கடையில் வீசிய பெண் சிக்கியது எப்படி?

டிரம் கொலைகள் பற்றி உத்தரப் பிரதேசத்தில் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் மும்பையில் தற்போது அது போன்ற ஒரு சம்பவம் நடந்து இருக்கிறது. மும்பை அருகில் உள்ள மும்ப்ரா என்ற இடத்தில் வசித்தவர் அர்பாஸ் அலிகா... மேலும் பார்க்க

வாடகைக்கு பதிலாக மனைவி, 13 வயது மகளைப் பாலியல் வன்கொடுமைக்கு அனுமதித்த தந்தை; குஜராத்தில் அதிர்ச்சி

குஜராத் மாநிலம் மொர்பி என்ற இடத்தில் வசித்து வந்தவர் நரேந்திரா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). 45 வயதாகும் நரேந்திரா தனது மனைவி, மகளுடன் வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்தார். வீட்டிற்கு மாதம் ரூ.2 ஆயிரம் கொடு... மேலும் பார்க்க

திருவாரூர்: தலைக்கேறிய கஞ்சா போதை; தாத்தா பாட்டியை கொன்று தீ வைத்த பேரன்!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகில் வடுவூர் காரக்கோட்டை புதுத்தெருவில் முத்து(73)-சந்திரா(70) தம்பதியினர் வசித்து வந்தனர்.இவர்களுக்கு கலியபெருமாள் என்ற மகனும், அய்யப்பன்(30) என்ற பேரனும் உள்ளனர்.க... மேலும் பார்க்க

நெல்லை: மதுபோதையில் தகராறு; நண்பரைக் கொன்றுவிட்டு தற்கொலை என நாடகமாடியவர் சிக்கியது எப்படி?

நெல்லை மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் பொதிகையடியைச் சேர்ந்தவர் வனராஜ். இவர், கடந்த 12-ம் தேதி பாபநாசம், லோயர் கேம்ப் வனப்பகுதியில் உள்ள கோயிலுக்குச் சென்றுவிட்டு வருவதாகக்கூறிச் சென்றவர் அதன் பின்னர் வீ... மேலும் பார்க்க

நீட் தேர்வு வினாத்தாள் கசிய காரணமான புனே பேராசிரியர் கைது; சிக்கியது எப்படி? வெளியான பகீர் பின்னணி

மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு இம்மாத தொடக்கத்தில் நடந்தது. ஆனால் இத்தேர்வுக்கு ஒரு மாதத்திற்கு முன்பே தேர்வுக்கான வினாத்தாள் மாணவர்களிடையே கசிந்தது. இது தேர்வு நடந்து முடிந்த பிறகுதான் வ... மேலும் பார்க்க