'அரசியலில் இருந்து சிறிது காலம் ஓய்வு' - பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பரபரப்பு ...
'இன்ஸ்டாகிராம் மூலமாக தமிழக வெற்றிக்கழகம் ஆட்சிக்கு வந்துள்ளது' - ஸ்டாலின் கூறியது என்ன?
தஞ்சாவூரில் திமுக எம்.எல்.ஏ பூண்டி கலைவாணனின் இல்லத் திருமண விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டிருக்கிறார்.
திருமண விழாவில் பேசிய ஸ்டாலின், " யாரும் சோகமாக இருக்கத் தேவையில்லை. நாம் தான் ஆட்சியில் இருக்கிறோம். தமிழகத்தில் இன்றும் ஆட்சியில் இருப்பது திராவிட முன்னேற்றக்கழகம் தான்.

திராவிட முன்னேற்றக்கழக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை தான் தற்போதைய அரசு நிறைவேற்றுகிறது. தி.மு.க. கொண்டுவந்த திட்டங்கள் அமலில் இருக்கும் வரை திராவிட முன்னேற்றக்கழகம் தான் தமிழகத்தை ஆள்கிறது.
எந்த பணியையும் செய்யாமல் முந்தைய திமுக அரசின் திட்டங்கள் தொடர வேண்டும் என கோரிக்கை வைத்தேன். அவை தொடர்கின்றன.
தோல்வி, வெற்றி என்பதை சமமாக கருதி பாடுபடும் இயக்கம் திமுக என்பதை யாரும் மறுக்க முடியாது.

கட்சி தொடங்கியதில் இருந்து திமுக பல வெற்றிகளையும், தோல்விகளையும் கண்டுள்ளன. தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்திருக்கிறது.
சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலமாக தான் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சிக்கு வந்துள்ளது" என்று பேசியிருக்கிறார்.













