`பூத் ஏஜென்ட், ஏன் கவுண்டிங் ஏஜென்ட் கூட இல்லாமல் வெற்றி; இது நம் கண்ணுக்குத் தெ...
ஹபீபி: "இப்படத்தின் சிறப்புகளைப் பற்றி முதல்வரிடம் எடுத்துரைப்பேன்!" - பட விழாவில் தவெக முஸ்தபா
‘அவள் பெயர் தமிழரசி’, ‘விழித்திரு’ படங்களின் இயக்குநர் மீரா கதிரவனின் அடுத்த எதார்த்த படைப்பான 'ஹபீபி' படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (17.05.2026) நடைபெற்றது.

கஸ்தூரி ராஜா, மாளவிகா மனோஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தத் திரைப்படம், வருகிற மே 28-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.
விழாவில் பேசிய மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா, "நான் 1998-ஆம் ஆண்டிலிருந்தே அரசியல் மேடைகளைப் பார்த்திருக்கிறேன். ஆனால், திரையுலக ஜாம்பவான்கள் நிறைந்த இந்த மேடை எனக்குப் புதியது.
உண்மையாக உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன், 2007-இல் பரத் நடிப்பில் வெளியான 'எம் மகன்' திரைப்படம்தான் நான் கடைசியாகப் பார்த்த படம். அதற்குப் பிறகு நான் திரையரங்கில் படமே பார்க்கவில்லை.

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த நான், சென்னையில் வளர்ந்த சிறுவயது இஸ்லாமியக் குடும்ப நினைவுகளை இப்படம் அச்சுப்பிசகாமல் காட்டியிருக்கிறது.
கொரோனாவால் மறைந்த என்னுடைய நண்பர் சம்சுதீனை இப்படம் நினைவூட்டியது. இத்திரைப்படத்தின் சிறப்புகளைப் பற்றித் தமிழக முதலமைச்சர் விஜய் அண்ணனிடம் நிச்சயமாக எடுத்துரைப்பேன்." என்றார்.















