செய்திகள் :

`பூத் ஏஜென்ட், ஏன் கவுண்டிங் ஏஜென்ட் கூட இல்லாமல் வெற்றி; இது நம் கண்ணுக்குத் தெரியவில்லை'- ஸ்டாலின்

post image

திருவாரூர் எம்.எல்.ஏ பூண்டி கே.கலைவாணன் இல்லத் திருமண விழா தஞ்சாவூரில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்த முன்னாள் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, ``இந்த மணவிழா நிகழ்ச்சிக்கு தலைமைப் பொறுப்பேற்று, மணவிழாவை நடத்தி வைத்து, மணமக்களை வாழ்த்தக்கூடிய ஒரு சிறப்பான வாய்ப்பைப் பெற்றமைக்காக நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன், பெருமைப்படுகிறேன்.

ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இன்றைக்கு இந்த இயக்கத்திற்காக உழைத்துக் கொண்டிருக்கிறது, பணியாற்றிக் கொண்டிருக்கிறது, பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. அதைத்தான் உதயநிதி பெருமையோடு எடுத்துச் சொன்னார்.

பூண்டி கலைவாணன் இல்லத் திருமண விழாவில் ஸ்டாலின்

தோல்வி வெற்றி என்பது இரண்டையும் சமமாகக் கருதி பாடுபட்டுக் கொண்டிருக்கக்கூடிய தொண்டன் தான் திமுக என்பதை யாரும் மறுக்க முடியாது. ஏதோ நடந்து முடிந்த தேர்தலிலே நாம் தோற்றுவிட்டது மாதிரி, படுதோல்வி அடைந்துவிட்டது மாதிரி, இதோடு திமுக கதை முடிந்து விட்டது என்று கவிதை அரங்கேற்றப் பாடுவதற்கு கூட முன் வந்திருக்கிறார்கள். நம்முடைய எதிரிகள் அந்த சூழ்ச்சியிலே இன்றைக்கு ஈடுபட்டிருக்கிறார்கள்.

நாம் சோகப்பட வேண்டிய அவசியம் இல்லை.

திமுகவை பொறுத்தவரைக்கும் எத்தனையோ தேர்தலைப் பார்த்திருக்கிறோம். 1949ல் தொடங்கி தேர்தல்களில் பல வெற்றிகளைக் கண்டதுண்டு, பல தோல்விகளையும் நாம் சந்தித்திருக்கிறோம். ஆனால் தோல்வி அடைகிற நேரத்தில்தான் திமுக எப்போதுமே ஒரு பீனிக்ஸ் பறவையைப் போல கிளம்பி எழக்கூடிய நிலையில் அது வரும்.

இங்கே கூட பேசியவர்கள் எல்லாம் ஏதோ சோகத்தில் இருப்பது போல நான் பார்க்கிறேன். அதுமட்டுமல்ல, இந்த மேடையில் இருக்கக்கூடியவர்கள் மட்டுமல்ல, எதிரே இருக்கக்கூடியவர்கள் கூட ஏதோ சோகமாக இருப்பதாகக் காட்சித் தருகிறீர்கள். நாம் சோகப்பட வேண்டிய அவசியம் இல்லை. நாம் தான் இன்றைக்கு ஆட்சிப் பொறுப்பிலே இருக்கிறோம்.

ஸ்டாலின்

நம்முடைய திட்டங்களைப் பற்றி நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஐந்து வருடம் ஆட்சிப் பொறுப்பு தந்தபோது, எல்லாத் தரப்பு மக்களுக்கும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிய ஆட்சி நம்முடைய திராவிட மாடல் ஆட்சி என்பதை மறந்துவிட முடியாது. நாம் வெற்றி வாய்ப்பை இழந்து புதிய ஆட்சிப் பொறுப்பு ஏற்றபோது, புதிய ஆட்சிக்கு பொறுப்பேற்று இருக்கக்கூடியவர்களுக்கு வாழ்த்துச் சொல்லுகிற போது சொன்னேன், புதிதாக ஆட்சிக்கு வந்திருக்கக் கூடியவர்களுக்கு வாழ்த்துக்கள், ஆட்சிப் பொறுப்பேற்று இருக்கக்கூடியவர்களுக்கு ஒரு வேண்டுகோள், நாம் கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தையும் நீங்கள் தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும் என்பதை ஒரு கோரிக்கையாக வைத்தேன்.

ஆக நாம் வைத்திருக்கிற கோரிக்கை, இன்றைக்கு அது எப்படி நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்பதை இன்றைக்கு கண்கூடாகப் பார்க்கிறோம். அதையேதான் சொன்னேன், நாமும் தான் இன்றைக்கு ஆட்சியில் இருக்கிறோம்.

இந்தத் தேர்தலின் தோல்வியைப் பார்த்து நான் சிதறிவிடவில்லை, மனம் சோர்ந்துவிடவில்லை. 234 தொகுதிகள்ல இன்றைக்கு என்ன நிலை? எப்படி வெற்றி பெற்றிருக்காங்க? எப்படி வெற்றி வாய்ப்பு இழந்திருக்கிறோம்? என்ன காரணம்? என்பதைப் பற்றி ஆய்வு செய்வதற்காக நான் ஒரு குழுவை நியமிச்சிருக்கேன்.

86 பேர் அடங்கிய ஒரு குழு அமைக்கப்பட்டு, 234 தொகுதிக்கும் இன்றிலிருந்து அந்த குழு அனுப்பப்பட்டு ஆய்வுகள் நடக்க இருக்கிறது. அந்த ஆய்வில், நம்மிடத்தில் என்ன குறை? நம்மிடத்தில் என்ன பிரச்சனை? மற்றவங்க என்ன செஞ்சிருக்காங்க? எது விட்டுப்போயிருக்கு? ஏன் இந்தத் தோல்வி நடந்திருக்கு? ஏன் இந்தத் தொகுதியில வெற்றி பெற்றிருக்கோம், ஏன் இந்தத் தொகுதியில வெற்றி பெறல? என்பதைப் பற்றி ஆய்வு செய்வதற்காக குழு அமைக்கப்பட்டிருக்கு.

திருமண விழா

அந்த குழு மட்டுமல்ல, ‘உடன்பிறப்பே வா’ என்ற தலைப்புல ஒரு வெப்சைட்டையும் ஆரம்பிச்சிருக்கிறோம். இந்தத் தேர்தலைப் பற்றி இன்னும் சொல்லணும்னா, நம்முடைய கட்சி என்பது ஒரு கட்டமைப்பு கொண்டிருக்கக்கூடிய கட்சி. எப்போ நாடாளுமன்ற தேர்தல் முடிஞ்சதோ, அப்பவே சட்டமன்றத் தொகுதியினுடைய தேர்தல் பணியை நம்ம அப்பவே தொடங்கினோம். பல பணிகளையும் செஞ்சு ஏன் நாம் ஆட்சிக்கு வர முடியல? ஆனால், எந்தப் பணியும் செய்யாமல், மக்களைச் சந்திக்காமல், பாக முகவர் நியமிக்காமல், பூத் ஏஜென்ட் அமைக்கவில்லை, இன்னும் சொல்லணும்னா கவுண்டிங் ஏஜென்ட் கூட பல இடங்கள்ல நியமிக்கல. அப்படிப்பட்டவர்கள் இன்றைக்கு வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்திருக்காங்க. அது தவறில்லை, ஆனா அதுல என்ன இருக்கு என்பதுதான்...

சோசியல் மீடியா, முக்கியமா இன்ஸ்டாகிராம் (Instagram) என்று சொல்லக்கூடிய அதை பயன்படுத்தி ரொம்ப சுலபமாக சிறு பிள்ளைகளை, குழந்தைகளை பிரச்சாரம் செய்ய வச்சு, அவர்களை அவருடைய தாத்தாக்கள், பாட்டிகள், அப்பாக்கள், அம்மாக்கள், அவங்க வீட்ல இருக்கக்கூடிய பெரியவங்கள்ட்ட அந்த குழந்தைகள் மூலமாக பிரச்சாரங்களை முன்னெடுத்து, ஒரு திட்டமிட்ட பிரச்சாரத்தைக் கொடுத்திருக்காங்க. ஆக, அது நம்முடைய கண்ணுகுக்குத் தெரியாமப் போய்விட்டது. ஆனா, இனிமேல் நாம் உஷாரா இருந்து அதையும் முறியடிக்கக்கூடிய வகையில அந்தப் பணியை நிறைவேற்றுவதற்குத் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறோம்.

ஸ்டாலின்

எனவே, நீங்க எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. நம்முடைய கழகம் உங்களுக்கு இருக்கு, இயக்கம் இருக்கு, நாங்கள் இருக்கிறோம். எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. மீண்டும் நாம்தான் ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கையோடு பணியாற்றுங்கள். எனக்கிருக்கக்கூடிய கவலையெல்லாம் ஐந்து ஆண்டுகள் நிறைவேற்றிய திட்டப் பணிகள் போதாது, இன்னும் பல பணிகள் நிறைவேற்ற வேண்டியது இருக்கும். இன்னும் ஐந்து ஆண்டு காலம் நமக்கு வாய்ப்பு கிடைச்சிருந்தா இன்னும் பல பணிகள் நிறைவேற்றி இருப்போம். அது தடைபட்டுப் போய் இருக்கிறது. அதை எப்படியாவது நாம் எதிர்க்கட்சியாக இருந்தாலும்கூட, இன்றைக்கு நாம் மக்களிடத்திலே போராட்டங்களை, ஆர்ப்பாட்டங்களை உறுதியோடு எடுத்துச் சொல்லக்கூடிய வகையில நம்முடைய கடமையை ஆற்றுவோம்" என்றார்.

`தவெக ஆட்சிக்கு வந்தபின்பும் அதே நிலை தான் நீடிக்கிறதோ?' - சட்டம் ஒழுங்கு குறித்து டிடிவி தினகரன்

தமிழ்நாட்டில் புதிய ஆட்சியாக தமிழக வெற்றிக் கழகம் பொறுப்பேற்றிருக்கிறது. முதல்வராக சி.ஜோசப் விஜய் தலைமையிலான நிர்வாகம் நடந்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்கேடு தொடர்வதாக அ... மேலும் பார்க்க

“ஆரவாரத்தால் அதிர போகும் சேப்பாக்கம்.!” - தோனியின் `Last' என்ட்ரியை காண வரும் முதல்வர் விஜய்?

சேப்பாகத்தில் இன்று நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் - ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது சேப்பாக்கம் மைதானமே கூடுதல் உற்சாகமாக இருக்கப்போகிறது.இந்தியாவில் நடந்துவரும் ஐ.பி.எல் தொடர் கிரிக்க... மேலும் பார்க்க

`முதல்வர் வேட்பாளராக என்னை நிறுத்த முடிவு செய்தார்களா?' - திமுக, அதிமுக கூட்டணி குறித்து திருமா

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக - அதிமுக கூட்டணி அமைக்கும்பட்சத்தில் கே. பழனிசாமி முதலில் முதல்வர் வேட்பாளர் எனக் கூறிவந்த நிலையில், பிறகு விசிக தலைவர் திருமாவளவனை முதல்வராக பேச்சுவார்த்தை ந... மேலும் பார்க்க

மே 17 நினைவேந்தல்: `இனப்படுகொலைக்கு நீதி கேட்டு அழுத்தம் தர வேண்டும்' - திருமுருகன் காந்தி

2009, மே மாதம் 17,18,19 ஆகிய தேதிகளில் ஈழத்தின் முள்ளிவாய்க்காலில் மக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில், பல்வேறு தமிழ்த்தேசிய - திராவிட இயக்கங்களும் இனப்படுகொலை நாளுக்கு நினைவேந்தல்... மேலும் பார்க்க

திமுக: "60 வயதிற்கு மேற்பட்டவர்கள் யாரும் இருக்க கூடாது.!"- வைரலாகும் எழிலன் பதிவு

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியைத் தழுவிய நிலையில், தவெக அதிக இடங்களை வென்று ஆட்சி கட்டிலில் அமர்ந்திருக்கிறது. திமுகவின் கோட்டை என கருதப்படும் சென்னைம மாவட்டத்தில் உள்ள 16 தொக... மேலும் பார்க்க

'அரசியலில் இருந்து சிறிது காலம் ஓய்வு' - பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பரபரப்பு அறிக்கை!

முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இந்நிலையில் சிறிது காலம் ஓய்வெடுக்கபோவதாக எக்ஸ் தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அ... மேலும் பார்க்க