'இந்தியாவில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லையா?' - நெதர்லாந்து பிரதமருக்கு ...
ராணிப்பேட்டை: ஒரே மகனை விபத்தில் பறிகொடுத்த தாய் - உடல் உறுப்புகளையும் தானமாகக் கொடுத்த நெகிழ்ச்சி
ராணிப்பேட்டை மாவட்டம், காவனூர் பகுதியைச் சேர்ந்தவர் இலங்கேஸ்வரன். இவர், கடந்த 2018-ம் ஆண்டு இறந்துவிட்டார். இவரின் மனைவி கோமளேஸ்வரி (வயது 57). இவர்களின் மகன் தினேஷ் குமார் (வயது 28). டிப்ளமோ படித்திருக்கிறார்.
இந்த நிலையில், கடந்த 15-ம் தேதி இரவு, பைக்கில் சென்றபோது கண்ணமங்கலம் கூட்ரோடு அருகில் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார் தினேஷ் குமார். உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தினேஷ் குமார், விரைவான மேல்சிகிச்சைக்காக ராணிப்பேட்டை ரத்தினகிரியில் உள்ள சி.எம்.சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பலனின்றி, நேற்று காலை மூளைச்சாவு ஏற்பட்டது.

இதையடுத்து, அவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன் வந்தனர். அதன்படி, இதயம் - சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனைக்கும், கல்லீரல் - சி.எம்.சி ராணிப்பேட்டை வளாக மருத்துவமனைக்கும், வலது சிறுநீரகம் - வேலூர் ஸ்ரீ நாராயணி மருத்துவமனைக்கும், இடது சிறுநீரகம் - சி.எம்.சி ராணிப்பேட்டைக்கும், கண்கள் - வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டு, 5 பயனாளர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டிருக்கிறது.
இதையடுத்து, உரிய மரியாதையுடன் இளைஞர் தினேஷ் குமாரின் உடல் அவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. கணவரைத் தொடர்ந்து தனது ஒரே மகனும் இறந்துவிட மிகுந்த மனவேதனைக்குள்ளாகியிருக்கிறார் தாய் கோமளேஸ்வரி.












.jpeg)




