செய்திகள் :

`மு.க.ஸ்டாலினுக்கு நன்றி சொல்லி வெளியேறியிருக்கலாம்!’ - திமுக - காங்கிரஸ் முறிவு குறித்து நாராயணசாமி

post image

``தோல்விக்கு பொறுப்பேற்கிறேன்...!’

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நேற்று 17-ம் தேதி தன்னுடைய இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``சட்டமன்றத் தேர்தலில் மக்கள் கொடுத்திருக்கும் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். சட்டமன்றத் தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும் என்ற சூழல்தான் புதுச்சேரி மக்கள் மத்தியில் நிலவியது.

ஆனால் கூட்டணிக் கட்சிகளுக்குள் நடைபெற்ற குழப்பத்தின் காரணமாக, இந்த தோல்வியை நாங்கள் சந்தித்துள்ளோம். இந்த தேர்தலில் பணிபுரிந்தவன் என்ற முறையில் நானும் தோல்விக்கு பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.

வெற்றியைக் கொண்டாடும்போது, தோல்வியடையும் நேரங்களில் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம். பணபலம், அதிகார பலத்தை வைத்து என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணி ஆட்சிக்கு வந்திருக்கிறது. இனி வரும் காலங்களில் கட்சியை பலப்படுத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் எங்களுக்கு உள்ளது.

காங்கிரஸ் நாராயணசாமி

புதுச்சேரி முதல்வர் பதவியேற்பில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படும். ஆனால் தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் பிரதமர் மோடியின் ஏஜெண்டுகள் ஆளுநர்களாக இருப்பதால் முதலில் வந்தே மாதரம், தேசிய கீதத்துக்கு பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுகிறது. இது புதுச்சேரி மக்களுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு செய்யும் துரோகம்.

முதல்வர் ரங்கசாமிக்கு நாற்காலி மட்டும் தேவை. பா.ஜ.க சொல்லும் அனைத்தையும் கேட்டுக்கொண்டு ஐந்தாண்டுகள் தலையாட்டி பொம்மையாக இருப்பார். இது புதுச்சேரி மக்களின் தலைவிதி. வாக்களித்தவர்கள் சிந்தித்து வாக்களித்து இருக்க வேண்டும்.

ஐந்தாண்டுகள் புதுச்சேரியில் வேலைவாய்ப்பு இருக்காது. புதிய தொழிற்சாலைகள் வராது. புதிய திட்டங்கள் இருக்காது. அரைத்த மாவையே அரைப்பார்கள். புதுச்சேரியில் முதல்வருடன் இரண்டு அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். தற்காலிக சபாநாயகர் அன்பழகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

``அமைச்சர் பதவிக்கு ரூ.100 கோடி பேரம்...”

இன்னும் மூன்று அமைச்சர், சபாநாயகர், துணை சபாநாயகர் பதவியேற்கவேண்டும். அதில் இழுபறி நீடிக்கிறது. அமைச்சர் பதவிக்கு பேரம் பேசப்படுவதாக பொதுவெளியில் தகவல்கள் வருகின்றன. ஒரு அமைச்சர் பதவிக்கு ரூ.100 கோடி பேரம் பேசப்படுகிறது. அமைச்சரவை அமைக்கும் முன்பாகவே ஊழல் இருந்தால் இந்த ஆட்சி எப்படி இருக்கும்.

புதுச்சேரிக்கு தொடர்பில்லாதவர்கள் எல்லாம் அமைச்சராக வேண்டும் என கனவு காண்கிறார்கள். பணத்தை வாரி இறைத்து தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சராகிவிட வேண்டும் என்று புதுவைக்கும், டெல்லிக்கும் காவடி தூக்கிக் கொண்டிருக்கின்றனர். இதனால்தான் அமைச்சர்கள் பதவியேற்பு விழா தள்ளிப் போகிறது.

முதலமைச்சர் முதுகெலும்பு இல்லாதவர். அமித் ஷா சொல்வதை கேட்காவிட்டால் முதல்வரின் நாற்காலிக்கு ஆபத்து. இதையெல்லாம் நாம் வேடிக்கை பார்க்க வேண்டியதுதான். அமைச்சர் நியமனம் தாமதமாவதற்கான காரணம் என்னவென்று முதல்வர் ரங்கசாமி பகிரங்கமாக அறிக்கை வெளியிட வேண்டும்.

விஜய் - ராகுல் காந்தி
விஜய் - ராகுல் காந்தி

தமிழக முதல்வர் விஜய்க்கு முதல்வர் ரங்கசாமி நண்பர். விஜய் பதவியேற்பில் ஊழல் செய்யமாட்டேன் என்று பகிரங்கமாக பதவியேற்பில் தெரிவித்தார். அதேபோல் விஜய்க்கு நெருக்கமான ரங்கசாமியும் விஜய் பாணியில் செயல்படுவாரா? ஆரம்பமே கோணலாக அமைச்சர் பதவிக்கு ஏலம் போகிறது. தற்போது ரூ.50 கோடியில் இருந்து ரூ.100 கோடியாகி இன்னும் தாமதமானால் ரூ.150 கோடியாகும்" என்றார்.

தொடர்ந்து, `தமிழகத்தைப் போல் புதுச்சேரியிலும் த.வெ.க கூட்டணியா?' என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ``தமிழக முதல்வர் விஜய் முதல்வர் பதவியேற்பில் எங்கள் தலைவர் ராகுல் பங்கேற்றிருக்கிறார். அதன்மூலம் த.வெ.க-வுக்கும் காங்கிரஸுக்கும் நல்ல நட்பு ஏற்பட்டிருக்கிறது" என்று பதிலளித்தார்.

அதையடுத்து தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், ``தி.மு.க கூட்டணியில் இருந்து வெளியேறியபோது, தமிழ்நாட்டு காங்கிரஸ் கமிட்டிக்காரர்கள் குறைந்தபட்சம் மு.க.ஸ்டாலினை சந்தித்து, தேர்தலில் இணைந்து பணியாற்றியதற்கு நன்றி தெரிவித்துவிட்டுச் சென்றிருக்கலாம்" என்றார்.

‘இதுதான் உங்களது நாகரிக அரசியலா ஜோசப் விஜய்?’ – வானதி சீனிவாசன் சாடல்!

பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழர்களின் தொன்மையான சோழர் பெருமையை 300 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்டெடுத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு சின்ன பாராட்டுகூட தெரிவி... மேலும் பார்க்க

'இந்தியாவில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லையா?' - நெதர்லாந்து பிரதமருக்கு இந்தியா தக்க பதில்

இந்திய பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே, இத்தாலி என ஐந்து நாடுகள் பயணத்தை மே 15 முதல் மே 20 வரை மேற்கொண்டிருக்கிறார். மோடி நெதர்லாந்து செல்வதற்கு முன்பு, அவரது பயணம் குறி... மேலும் பார்க்க

`இந்திய ரூபாய்-ன் வீழ்ச்சியை அரசு கண்டும் காணாமலும் இருப்பது இதனால்தான்' - நிபுணர் சொல்வதென்ன?

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்துகொண்டே வருகிறது. தற்போது சந்தையில் ஒரு டாலருக்கு ரூ.96-ஐ தாண்டி வர்த்தகம் ஆகிறது. இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதால், வ... மேலும் பார்க்க

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடை மூடல் - நிம்மதியடைந்த பொதுமக்கள்!

தமிழக அரசு, கல்வி நிலையங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் உள்ள மதுக்கடைகளை மூட உத்தரவிட்டது. இதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட உள்ளன.அவற்றுள் மிகவும் கவனம் ப... மேலும் பார்க்க

`தவெக ஆட்சிக்கு வந்தபின்பும் அதே நிலை தான் நீடிக்கிறதோ?' - சட்டம் ஒழுங்கு குறித்து டிடிவி தினகரன்

தமிழ்நாட்டில் புதிய ஆட்சியாக தமிழக வெற்றிக் கழகம் பொறுப்பேற்றிருக்கிறது. முதல்வராக சி.ஜோசப் விஜய் தலைமையிலான நிர்வாகம் நடந்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்கேடு தொடர்வதாக அ... மேலும் பார்க்க

“ஆரவாரத்தால் அதிர போகும் சேப்பாக்கம்.!” - தோனியின் `Last' என்ட்ரியை காண வரும் முதல்வர் விஜய்?

சேப்பாகத்தில் இன்று நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் - ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது சேப்பாக்கம் மைதானமே கூடுதல் உற்சாகமாக இருக்கப்போகிறது.இந்தியாவில் நடந்துவரும் ஐ.பி.எல் தொடர் கிரிக்க... மேலும் பார்க்க