செய்திகள் :

கே.ராஜன்: 'சினிமாவின் போக்கு குறித்து துணிச்சலுடன் கருத்துகளை வெளிப்படுத்தியவர்'- முதல்வர் இரங்கல்

post image

தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளரான கே.ராஜன் மறைவிற்கு முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

தயாரிப்பாளர் கே.ராஜன்
தயாரிப்பாளர் கே.ராஜன்

அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "தமிழ்த் திரைப்படத் துறையின் மூத்த தயாரிப்பாளரும், இயக்குநரும், நடிகரும், திரைப்பட விநியோகிப்பாளருமாக தனது தனித்துவமான பங்களிப்பை நல்கியவருமான திரு. கே.ராஜன் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

திரைப்படத் துறையின் நலன், குறிப்பாக சிறு திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகிப்பாளர்களின் உரிமைகள் மற்றும் தமிழ் சினிமாவின் போக்கு குறித்து தொடர்ந்து துணிச்சலுடன் தனது கருத்துகளை வெளிப்படுத்தி வந்தவர் திரு. கே.ராஜன் அவர்கள். பல தசாப்தங்களாக திரைப்படத் துறையுடன் நெருங்கிப் பயணித்த அவரது பங்களிப்புகள் நினைவுகூரத்தக்கவை. அவரது பங்களிப்பை திரைத்துறை என்றும் நினைவில் வைத்திருக்கும்.

தயாரிப்பாளர் கே.ராஜன்
தயாரிப்பாளர் கே.ராஜன்

திரு. கே.ராஜன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அவரது நண்பர்களுக்கும், தமிழ் திரைப்படத் துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

"திரையரங்குகளில் சாமியாடுபவர்களுக்கு அன்போடு உதவுங்கள்!" - ஆர்.ஜே. பாலாஜி வேண்டுகோள்!

சூர்யாவின் 'கருப்பு' படத்திற்கு வசூல் ரீதியாகப் பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் த்ரிஷா, இந்திரன்ஸ், நட்டி, அனகா ரவி ஆகியோர் முக்கியக் கத... மேலும் பார்க்க

காமெடி நடிகர் முத்துக்காளையின் மனைவி காலமானார் - சொந்த ஊரில் இறுதிச்சடங்கு

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் முத்துக்காளையின் மனைவி மாலதி (வயது 47) இன்று காலை 9 மணிக்கு காலமானார்.காமெடி நடிகராக நமக்கு நன்கு பரிச்சயமான முத்துக்காளை பட்டப்படிப்புகளை முடித்து பலருக்கு... மேலும் பார்க்க

"அப்பா கொஞ்ச நாட்களாகவே மன உளைச்சலில் இருந்தார்!" - தயாரிப்பாளர் கே ராஜனின் மகன்!

தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் கே. ராஜன் காலமானார். 85 வயதான கே. ராஜன். 'பிரம்மசாரிகள்', 'நினைக்காத நாளில்லை' போன்ற திரைப்படங்களைத் தயாரித்தவர்.Producer K Rajan with his sonதயாரிப்பு மட்டுமின்றி,... மேலும் பார்க்க

ஹபீபி: "இப்படத்தின் சிறப்புகளைப் பற்றி முதல்வரிடம் எடுத்துரைப்பேன்!" - பட விழாவில் தவெக முஸ்தபா

‘அவள் பெயர் தமிழரசி’, ‘விழித்திரு’ படங்களின் இயக்குநர் மீரா கதிரவனின் அடுத்த எதார்த்த படைப்பான 'ஹபீபி' படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (17.05.2026) நடைபெற்றது. Habibi ... மேலும் பார்க்க

``சின்னப் படங்களை எடுப்பவர்கள்தான் சினிமாவில் 'சிறுபான்மை' மக்கள்; முதல்வர் விஜய்.! - பார்த்திபன்

‘அவள் பெயர் தமிழரசி’, ‘விழித்திரு’ படங்களின் இயக்குநர் மீரா கதிரவனின் அடுத்த எதார்த்த படைப்பான 'ஹபீபி' படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (17.05.2026) நடைபெற்றது. Habibi ... மேலும் பார்க்க

K Rajan: அடையாறு ஆற்றில் குதித்து தயாரிப்பாளர் கே. ராஜன் தற்கொலை? போலீஸ் தீவிர விசாரணை

தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் கே. ராஜன் இன்று காலமானார். 85 வயதான கே. ராஜன். 'பிரம்மசாரிகள்', 'நினைக்காத நாளில்லை' போன்ற திரைப்படங்களைத் தயாரித்தவர்.K Rajanதயாரிப்பு மட்டுமின்றி, 'நம்ம ஊரு மாரிய... மேலும் பார்க்க