செய்திகள் :

'25 வருடத்திற்குப் பின் அபிராமியுடன் நடித்திருக்கிறேன், முதன்முதலில் அவரை சந்தித்தபோது.!'- அர்ஜுன்

post image

சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் அர்ஜூன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் `ப்ளாஸ்ட்'.

இப்படம் மே 28ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று (மே.18) நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அர்ஜூன், " ‘ப்ளாஸ்ட்’ நிஜமாகவே ப்ளாஸ்ட் ஆக இருக்கும்.

அபிராமி
அபிராமி

நான் எத்தனையோ ரோல் செய்திருந்தாலும் இந்த மாதிரி ஒரு ரோல் இப்போதுதான் முதன்முறையாக செய்கிறேன். என்னுடைய இயக்குநருக்கு முதல் நன்றியைச் சொல்லிக் கொள்கிறேன்.

25 வருடத்திற்குப் பின் அபிராமியுடன் இணைந்து நடித்திருக்கிறேன். முதன்முதலில் அவரைச் சந்தித்தபோது மலையாளத்தில் மட்டும்தான் பேசுவார்.

உடைந்த தமிழ்தான் அவருக்குப் பேச வரும். இப்போது தமிழில் அசத்துகிறார். இந்தப் படத்தில் கடினமாக உழைத்து நடித்திருக்கிறார்" என்று பேசிய அவர் முதல்வர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

"வரலாறு காணாத வெற்றியோடு, சாதனையாளர்கள் பட்டியலில் முன்வரிசையில் இருக்கும், எனது நண்பரான மாண்புமிகு தமிழக முதலமைச்சர் விஜய்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று வாழ்த்தியிருக்கிறார்.

Blast: "எனக்குள் இருந்த பயத்தை போக்கிய அர்ஜுன் சாருக்கு நன்றி" - 'ஆக்ஷன் அவதாரம்' குறித்து அபிராமி

சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் `பிளாஸ்ட்'. கராத்தேவை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இப்படம் மே 28ஆம் தேதி வெளியாகவுள்ள ந... மேலும் பார்க்க

Karuppu: "இளையராஜாவைக் காயப்படுத்தும் எண்ணம் சிறிதளவும் இல்லை" - படக்குழு வருத்தம்; பின்னணி என்ன?

சூர்யா நடித்திருக்கும் 'கருப்பு' படத்திற்குத் திரையரங்குகளில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் திரிஷா, இந்திரன்ஸ், அனகா மாயா ரவி ஆகியோர் முக்கியக் கதாபா... மேலும் பார்க்க

கருப்பு: ``அந்த நேரத்தில் வீடியோ எடுக்காதீர்கள்" - ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள்!

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளியான 'கருப்பு' திரைப்படம் ரசிகர்களிடையே வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பிரமாண்ட வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தில் த்ரிஷா, இந்திரன்ஸ், நட்டி, அ... மேலும் பார்க்க

கே.ராஜன்: 'சினிமாவின் போக்கு குறித்து துணிச்சலுடன் கருத்துகளை வெளிப்படுத்தியவர்'- முதல்வர் இரங்கல்

தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளரான கே.ராஜன் மறைவிற்கு முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்திருக்கிறார். தயாரிப்பாளர் கே.ராஜன்அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "தமிழ்த் திரைப்படத் துறையின் மூத்த தயாரிப... மேலும் பார்க்க

"திரையரங்குகளில் சாமியாடுபவர்களுக்கு அன்போடு உதவுங்கள்!" - ஆர்.ஜே. பாலாஜி வேண்டுகோள்!

சூர்யாவின் 'கருப்பு' படத்திற்கு வசூல் ரீதியாகப் பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் த்ரிஷா, இந்திரன்ஸ், நட்டி, அனகா ரவி ஆகியோர் முக்கியக் கத... மேலும் பார்க்க

காமெடி நடிகர் முத்துக்காளையின் மனைவி காலமானார் - சொந்த ஊரில் இறுதிச்சடங்கு

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் முத்துக்காளையின் மனைவி மாலதி (வயது 47) இன்று காலை 9 மணிக்கு காலமானார்.காமெடி நடிகராக நமக்கு நன்கு பரிச்சயமான முத்துக்காளை பட்டப்படிப்புகளை முடித்து பலருக்கு... மேலும் பார்க்க