கிரிக்கெட் வீரர் திலக் வர்மாவுக்கும், நடிகை ஸ்ரீலீலாவுக்கும் காதலா? - ஸ்ரீலீலாவி...
Blast: "எனக்குள் இருந்த பயத்தை போக்கிய அர்ஜுன் சாருக்கு நன்றி" - 'ஆக்ஷன் அவதாரம்' குறித்து அபிராமி
சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் `பிளாஸ்ட்'. கராத்தேவை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.
இப்படம் மே 28ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று (மே.18) நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அபிராமி, "நான் இந்தக் கதையைக் கேட்டவுடன் நடிக்க யோசித்தேன். இந்த மாதிரியான சண்டைக்காட்சியில் நடிக்க முடியுமா என்று சந்தேகப்பட்டேன். ஆனால், இயக்குநர் எனக்கு உற்சாகம் கொடுத்தார். அவர் அம்மாவும் கராத்தேயில் பிளாக் பெல்ட் என்றார்.
'வானவில்' படத்துக்குப் பின் 25 ஆண்டுகள் கழித்து இதில் அர்ஜுனுடன் ஜோடியாக நடித்திருக்கிறேன். ஏன் இத்தனை நாள்கள் நாங்கள் ஜோடி சேரவில்லை என்று புரியவில்லை. இருந்தாலும் இந்தமுறை நடந்திருப்பது மகிழ்ச்சி.
எனக்கும் வயலன்ஸுக்கும் (Violence) சம்பந்தமே கிடையாது. காமெடி, ஹாரர், ரொமான்ஸ் போன்ற படங்களில் நடித்திருக்கேன். ஆனால் இது போன்ற ஆஷன் படத்தில் நடிக்க ஒரு பதற்றம் இருந்தது. எனக்குள் இருந்த பயத்தை போக்கிய அர்ஜுன் சாருக்கு நன்றி.

சண்டைக்காட்சிகளில் சிறப்பாக நடித்து இருக்கிறேன். அதற்கு காரணம் பைட் மாஸ்டர், பைட்டர்கள்தான். அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துகொள்கிறேன்.
எனக்கு கராத்தே சொல்லிக்கொடுத்த மாஸ்டருக்கு நன்றி. அவர்களுக்கு அடிபட்டாலும், எனக்கு உற்சாகம் கொடுத்து சிறப்பாக நடிக்க வைத்தார்கள்" என்று பேசியிருக்கிறார்.
















