செய்திகள் :

Serial update: மூணு பேருக்காக முடிச்சு விட்டாங்க! - வருத்ததில் ‘ஆடுகளம்’ சீரியல் ஆர்ட்டிஸ்டுகள்?

post image

விஜய் டிவியில் நாளை மறுதினம் நிறைவடைகிறது மகாநதி சீரியல். ’சரவணன் மீனாட்சி’, பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை – கதிர் ஜோடிகளுக்குப் பிறகு ஜோடிக்காகவே பார்க்கப்பட்ட சீரியல் என இந்த சீரியலைச் சொல்லலாம். விஜய் – காவேரி என்ற கேரக்டர்களில் தொடரில் லீட் ரோலில் நடித்த சாமிநாதன் – லக்ஷ்மிபிரியா ஜோடிக்கு சின்னத்திரை ஏரியாவில் பெரிய வரவேற்பு கிடைத்தது.

’விக ஃபேன்ஸ்’ என சமூக வலைதளங்களில் கணக்கு தொடங்கி இந்த தொடருக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர் ரசிகர்கள் .

கடந்தாண்டு விகடன் சின்னத்திரை விருதையும் ஜோடியாக வந்து வாங்கினார்கள் இவர்கள்.

இந்த நிலையில் சீரியல் நிறைவடைவதால் ரொம்பவே வருத்தத்தில் இருக்கும் தொடரின் ரசிகர்கள் இருவரையும் மிஸ் பண்ணுவதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

`மகாநதி’ லக்ஷ்மி பிரியா

சன் டிவியிலும் ‘ஆடுகளம்’ சீரியல் முடிவுக்கு வரவிருக்கிறது. இந்த சீரியல் முடிவடைவது குறித்து சீரியலில் நடிக்கும் நட்சத்திரங்கள் பெரிய வருத்தத்தில் இருக்கின்றனர்.

இது குறித்து சீரியலின் யூனிட் தொடர்பிலிருக்கும் சிலரிடம் பேசினோம்.

‘ஒளிபரப்பு தொடங்கின போதே ரொம்ப தாமதமாகவே தொடங்கியது. டெல்லி கணேஷ் சார் தொடரில் கமிட் ஆகி சில எபிசோடுகள் நடிச்ச நிலையில் திடீரென இறந்துட்டார். அவருக்குப் பதில் காத்தாடி ராமமூர்த்தி கமிட் ஆனார்.

நடிகை சச்சு, தீபா, நடிகர்கள் ராஜேந்திரன் காயத்ரி ஜெயராம், டெல்னா டேவிஸ், சல்மான்னு பெரிய பட்டாளத்துடன் ஆரம்பமான சீரியல் முதல்ல பிரைம் டைமில் போச்சு.

ஆனா என்ன காரணமோ தெரியல, திடீர்னு பகல் நேரத்துக்கு மாத்தினாங்க. இந்த நேர மாற்றம் சில ஆர்ட்டிஸ்டுகளுக்கு அதிருப்தியைத் தந்ததாச் சொன்னாங்க.

காயத்ரி ஜெயராம், டெல்னா டேவிஸ், சல்மான் மூணு பேருமே தொடரில் இருந்து வெளியேறுவதாகச் சொல்லிட்டாங்க.

டெல்லி கணேஷ்

சேனல்ல இருந்து இவங்களைச் சமாதானம் செய்யும் முயற்சி நடந்தும் அது பலனளிக்கலை. முக்கியமான மூணு கேரக்டர்கள் மாறுவதால் அவங்களுக்குப் பதில் வேறு ஆர்ட்டிஸ்டுகளைக் கமிட் செய்தாலும் சீரியலுக்கு ரேட்டிங் கிடைக்குமாங்கிற தயக்கம் சேனலுக்கு இருந்ததால் மொத்தமா சீரியலை முடிக்க சொல்லிட்டாங்க.

அடுத்த சில வாரங்களில் சீரியலுக்கு எண்ட் கார்டு போடப் பட்டு விடும்.

மொத்தத்துல மூணு ஆர்ட்டிஸ்டுகளுக்காக மத்த நடிகர் நடிகைகள், டெக்னீஷியன்கள்னு பல பேருக்கு சான்ஸ் பறி போகறதுதான் பெரிய வருத்தமா இருக்கு’ என்கிறார்கள் இவர்கள்.

மும்பையில் செட், 2 ஹோஸ்ட்! களமிறங்கும் பிக்பாஸ் வின்னர்.! விஜய் டிவியில் விரைவில் 'செகண்ட் லவ்' ஷோ!

விஜய் டிவியில் ஜூலை இரண்டாவது வாரத்தில் தொடங்கவிருக்கிறது புத்தம் புதிய ரியாலிட்டி ஷோவான 'செகன்ட் லவ்' என்கிற பேச்சு தான் இப்போது டெலிவிஷன் உலகில் வைரல்.'பிக்பாஸ்' நிகழ்ச்சியை முதன்முதலாக தமிழுக்குக் ... மேலும் பார்க்க

`பத்துக்கு பத்து வீட்ல மொத்த குடும்பமும் வசிச்ச‌தை நினைச்சா..' - புதுமனை புகுந்த‌ பழைய ஜோக் தங்கதுரை

சென்னையில் புது வீடு வாங்கிக் குடியேறி இருக்கிறார் `பழைய ஜோக்' தங்கதுரை.விஜய் டிவியின் 'கலக்கப் போவது யாரு' நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தங்கதுரை. டிவியிலிருந்து சினிமா பக்கமும் வந்தவர் 'டிடி ரிட்டர்ன்... மேலும் பார்க்க

"'Heart Beat 3'ல நான் இருக்கேனா?!" - 'கனா கண்டேனடி' சஞ்சனா ஷேரிங்ஸ்

'ஹார்ட் பீட்' சீரிஸிலும், 'பொன்னி' சீரியலில் வில்லியாக நடித்து மக்களுக்குப் பரிச்சயமான சஞ்சனா, இப்போது 'கனா கண்டேனடி' தொடரில் நடித்து வருகிறார். இத்தொடருக்காக அவரைச் சந்தித்துப் பேட்டி கண்டோம்.Kana Ka... மேலும் பார்க்க

"சாண்ட்ரா இடத்துல வேற பொண்ணு இருந்திருந்தா எங்கிட்ட டைவர்ஸ் வாங்கியிருப்பாங்க" - பிரஜின் பேட்டி

''தமிழில் இதுவரை 16 படங்கள் வந்திடுச்சு. நாலு படம் ரிலீஸ்க்கு வெயிட்டிங். மலையாளத்துல 4. கன்னடம், தெலுங்கில் தலா 1. ஆனாலும் எனக்குப் பிறகு டிவியில இருந்து சினிமாவுக்குப் போன விஜய் சேதுபதி, சிவ கார்த்த... மேலும் பார்க்க

நீங்களும் ஆகலாம் பிக்பாஸ் போட்டியாளர்! 'பிக்பாஸ் தி காமன் மேன்' எதற்கு தெரியுமா?

விஜய் டிவியின் ஃபேவரைட் நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 10 அடுத்த சில மாதங்களில் தொடங்க இருக்கிறது. வழக்கம் போல் இந்த சீசனையும் விஜய் சேதுபதியே தொகுத்து வழங்கவிருக்கிறார்.நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட... மேலும் பார்க்க

Kana Kandenadi: "சீரியல்ல நடிக்கணும்னு ஐ.டி வேலையை விட்டுட்டேன்" - 'கனா கண்டேனடி' டீம் பேட்டி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் 'கனா கண்டேனடி' சீரியலின் முக்கிய கதாபாத்திரங்களான ஜாய்சன் மற்றும் சைத்ராவிடம் பேசினோம். 'கனா கண்டேனடி' சீரியலில் அறிமுகமாகியிருக்கும் ஜாய்சன் அவரது முத... மேலும் பார்க்க