செய்திகள் :

விமர்சித்த அதிமுக கவுன்சிலர்; அடிக்க பாய்ந்த திமுக கவுன்சிலர்கள்! - மாநகராட்சி கூட்டத்தில் கடமுடா!

post image

சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் ரிப்பன் பில்டிங்கில் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தின் போது அதிமுகவின் கவுன்சிலர் கே.பி.கே.சதீஷ் திமுகவினரை விமர்சனம் வைக்க, வாக்குவாதம் முற்றி திமுகவினர் சதீஷை அடிக்க பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சதீஶ்
சதீஷ்

நேரமில்லா நேரத்தின் போது அதிமுக கவுன்சிலர் சதீஷ் பேச எழுந்தார். ஆரம்பத்திலேயே 'நான் உங்களை போல கட்சி பற்றியோ அரசியல் பற்றியோ பேசமாட்டேன். மக்கள் பிரச்னைகளை மட்டுமே பேசுவேன்' என திமுக தலைவர் ஸ்டாலினை பற்றி அக்கட்சியின் கவுன்சிலர்கள் புகழ்ந்து பேசியதை விமர்சித்திருந்தார்.

தொடர்ந்து அவரது வார்டு பிரச்னைகளை பற்றி பேசியவர் மீண்டும் 'நான் உங்களை போல கட்சியை பற்றி பேசமாட்டேன்' என்றார். உடனே ஆவேசமான திமுக கவுன்சிலர்கள் கூச்சல் எழுப்பினர். பதிலுக்கு சதீஷூம் கூச்சல் எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவையின் இடப்புறம் இருந்து திமுக கவுன்சிலர் ஒருவர் பேப்பர்களை தூக்கி வீச, இன்னொரு திமுக கவுன்சிலர் கவி கணேசன் ஆவேசமாக கத்திக் கொண்டு சதீஷை அடிப்பதை போல இருக்கையை விட்டு எழுந்து ஓடி வந்தார். சதீஷூம் ஆவேசமாக பேச இருவரையும் மற்ற கவுன்சிலர்கள் இழுத்து பிடித்து சமாதானப்படுத்தினர். இந்த சச்சரவால் அவை சில நிமிடங்களுக்கு பரபரப்பாக காணப்பட்டது.

கவி கணேசன்
கவி கணேசன்

தொடர்ந்து பேசிய சதீஷ் சில நிமிடங்களில் உரையை முடித்துவிட்டார். பின்னர் கவி கணேசன் பேசும்போது அரசியல் விஷயங்களை பேச அதற்கு கண்டனம் தெரிவித்துவிட்டு சதீஷ் வெளிநடப்பு செய்தார்.

ஈரானுக்கு கிடைக்கும் $12 பில்லியன்: 'உணவுக்கும், மருந்துக்கும் தான்' ட்ரம்ப் தகவல்; ஈரான் மறுப்பு!

போர் நிறுத்தத்தில் ஈரானுக்கு இருக்கும் முக்கிய கோரிக்கைகளில் ஒன்று - ஈரானின் முடக்கப்பட்ட சொத்துகள் விடுவிக்கப்பட வேண்டும் என்பது ஆகும். இது ஸ்விட்சர்லாந்தில் நடந்து வரும் ஈரான், அமெரிக்கா பேச்சுவார்த... மேலும் பார்க்க

"காவல்துறையை ஏவி அச்சுறுத்தலாம் என்று ஆளும் அரசு நினைத்தால்.!" - உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை

"காவல் துறையை ஏவி அச்சுறுத்தலாம் என்று ஆளும் அரசு நினைத்தால், கழகம் அதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது" என்று தவெக அரசை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வ... மேலும் பார்க்க

TNPSC மூலம் தேர்வு செய்யப்பட்ட 401 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!

TNPSC மூலம் தேர்வு செய்யப்பட்ட 401 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!TNPSC மூலம் தேர்வு செய்யப்பட்ட 401 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!TNPSC மூலம் தேர்வு செய்யப்பட்ட 401 பேர... மேலும் பார்க்க

புதுச்சேரி: ரூ.1,000 கோடியில் உறுப்பு மாற்று, விமான ஆம்புலன்ஸ் மருத்துவமனை! - ஜிப்மர் அறிவிப்பு

புதுச்சேரி சேதராப்பட்டு பகுதியில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, சுகாதாரம் மற்றும் கல்வி வசதியை உருவாக்குவதற்காக, சுமார் 50 ஏக்கர் நிலத்தை ஜிப்மர் நிறுவனத்துக்கு வழங்கியிருக்கிறது மாநில அரசு. அதையடுத்... மேலும் பார்க்க

"பொருளாதார மந்த நிலையை விட அணு ஆயுதம் மிகப்பெரிய பேரழிவு" - ஈரான் போர் குறித்து ட்ரம்ப்

நேற்று வெள்ளை மாளிகையில் ஈரான் போர் குறித்து பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி அளித்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அந்தப் பேட்டியில், "அவர்கள் நம்மை மதிக்கும் வரை நமக்கு எந்தப் பிரச்னையும் இருக்காது. ... மேலும் பார்க்க

இருமுறை மேயர்; அமமுக அமைப்புச் செயலாளர்! - தவெக-வில் இணையும் முயற்சியில் சாருபாலா தொண்டைமான்?

அமமுக முக்கிய நிர்வாகிகளில் ஒருவரும், புதுக்கோட்டை அரச குடும்பத்தைச் சேர்ந்தவருமான சாருபாலா தொண்டைமான் விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதன் ஒரு பகுதி... மேலும் பார்க்க