செய்திகள் :

'ஜாக்கிரதையாக இருங்கள்; நாங்கள் திமுகக்காரர்கள்' - மாநகராட்சி கூட்டத்தில் சீறிய திமுக கவுன்சிலர்

post image

சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் ரிப்பன் பில்டிங்கில் நடந்து வருகிறது. இதில் நேரமில்லாத நேரத்தின் போது பேசிய திமுக கவுன்சிலர் கவி கணேசன் முதல்வர் விஜய்யை கடுமையாக விமர்சித்திருந்தார்.

அவையில் பேசிய கவி கணேசன்
அவையில் பேசிய கவி கணேசன்

கவி கணேசன் பேசியதாவது, ``முதல்வர் விஜய்க்கு தன்னுடைய துறைகள் என்னவென்றே தெரியவில்லை. எங்களின் தலைவர் ஸ்டாலினுக்கு உள்ளாட்சி பிரதிநிதிகளின் பணி குறித்து பரந்துபட்ட அனுபவம் உண்டு.

நீங்கள் முதல்வராக இருந்தாலும், இந்த மாநகராட்சி முத்துவேல் கருணாநிதி கட்டுப்பாட்டில்தான் இருக்கும்.

நாங்கள்தான் மக்களுக்கு நெருக்கமான அரசு. உள்ளாட்சி எங்கள் கையில்தான் இருக்கிறது.

பல மாநகராட்சிகளில் முதல்வர் விஜய்யின் படத்தை தவெகவினர் தூக்கிக் கொண்டு வருகின்றனர். இவர்கள்தான் உள்ளாட்சியின் மாண்பை குலைக்கின்றனர். உள்ளாட்சி அரசு எங்கள் கையில்தான் இருக்கிறது. நாங்கள் நியமிக்கப்பட்டவர்கள் அல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

மண்டல குழுவின் கூட்டத்தில் மண்டல தலைவருக்கு இணையாக தவெக எம்.எல்.ஏ வந்து உட்கார்ந்தார். அது தவறு. தவெக எம்.எல்.ஏக்கள் வந்தால் அவர்களுக்கான இடத்தில் அமர்ந்து செல்ல வேண்டும். 150 பேரை கூட்டி கொண்டு வருவீர்களா? காலி கிரவுண்ட்டில் நீங்கள் கம்பு சுற்றிக் கொண்டிருக்கிறீர்கள். ஜாக்கிரதையாக இருங்கள். நாங்கள் திமுகக்காரர்கள்.

அம்மா உணவகத்தில் போய் தவெகக்காரர்கள் சோதனை என்ற பெயரில் தோசை ஊற்றி கேட்கின்றனர். முதல்வர் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறாரா? தூங்கிக் கொண்டிருக்கிறாரா?' என்றார்.

விமர்சித்த அதிமுக கவுன்சிலர்; அடிக்க பாய்ந்த திமுக கவுன்சிலர்கள்! - மாநகராட்சி கூட்டத்தில் கடமுடா!

சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் ரிப்பன் பில்டிங்கில் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தின் போது அதிமுகவின் கவுன்சிலர் கே.பி.கே.சதீஷ் திமுகவினரை விமர்சனம் வைக்க, வாக்குவாதம் முற்றி திமுகவினர் சதீஷை ... மேலும் பார்க்க

TNPSC மூலம் தேர்வு செய்யப்பட்ட 401 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!

TNPSC மூலம் தேர்வு செய்யப்பட்ட 401 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!TNPSC மூலம் தேர்வு செய்யப்பட்ட 401 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!TNPSC மூலம் தேர்வு செய்யப்பட்ட 401 பேர... மேலும் பார்க்க

புதுச்சேரி: ரூ.1,000 கோடியில் உறுப்பு மாற்று, விமான ஆம்புலன்ஸ் மருத்துவமனை! - ஜிப்மர் அறிவிப்பு

புதுச்சேரி சேதராப்பட்டு பகுதியில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, சுகாதாரம் மற்றும் கல்வி வசதியை உருவாக்குவதற்காக, சுமார் 50 ஏக்கர் நிலத்தை ஜிப்மர் நிறுவனத்துக்கு வழங்கியிருக்கிறது மாநில அரசு. அதையடுத்... மேலும் பார்க்க

"பொருளாதார மந்த நிலையை விட அணு ஆயுதம் மிகப்பெரிய பேரழிவு" - ஈரான் போர் குறித்து ட்ரம்ப்

நேற்று வெள்ளை மாளிகையில் ஈரான் போர் குறித்து பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி அளித்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அந்தப் பேட்டியில், "அவர்கள் நம்மை மதிக்கும் வரை நமக்கு எந்தப் பிரச்னையும் இருக்காது. ... மேலும் பார்க்க

இருமுறை மேயர்; அமமுக அமைப்புச் செயலாளர்! - தவெக-வில் இணையும் முயற்சியில் சாருபாலா தொண்டைமான்?

அமமுக முக்கிய நிர்வாகிகளில் ஒருவரும், புதுக்கோட்டை அரச குடும்பத்தைச் சேர்ந்தவருமான சாருபாலா தொண்டைமான் விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதன் ஒரு பகுதி... மேலும் பார்க்க

முதல்வர் அலுவலக சிறப்பு அதிகாரியாக ஜான் ஆரோக்கியசாமி? - வெளியாகாத அரசாணை

தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி, முதல்வர் விஜயின் அலுவலகத்தில் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இந்த நியமனம் தொடர்பான அரசா... மேலும் பார்க்க