செய்திகள் :

Dharman: "இது '5 ரூபாய் டாக்டரின்' கதையா?!" - ரஜினி படம் குறித்து இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து

post image

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அந்தப் படத்திற்கு 'தர்மன்' என்று தலைப்பிட்டிருக்கிறார்கள்.

Dharman - Rajinikanth - Ashwath Marimuthu
Dharman - Rajinikanth - Ashwath Marimuthu

ராஜ்கமல் நிறுவனம் சார்பில் கமல்ஹாசன் மற்றும் மகேந்திரன் தயாரிக்கும் இப்படத்தில் சிம்ரன், ராஷி கன்னா முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தின் டைட்டில் வெளியீட்டு விழா இன்று சென்னை ராஜ்கமல் அலுவலகத்தில் நடைபெற்றது.

அப்போது பேசிய அஸ்வத் மாரிமுத்து, "இங்க நடக்கிறது ஒரு ஹிஸ்டரி. தலைவர் படத்தை இயக்க வேண்டும் என்பது இயக்குநராக இருக்கும் அனைவரின் ஆசை. கமல் சார் தயாரிப்பில், ரஜினி சார் நடிக்கும் படத்தை என்னுடைய குழு இயக்குவது ஒரு ஹிஸ்டரிதான்.

இதை நான் டைரக்ட் செய்கிற படமாக மட்டும் பார்க்கல. இந்தப் படம் நடப்பதற்குக் காரணமாக இருந்த மகேந்திரன் சாருக்கு நன்றி. ஏ.ஜி.எஸ் நிறுவனத்திற்கு, சிம்பு சாருக்கும் நன்றி. என்னை வழியனுப்பி வைத்திருக்கிறார்.

படத்துல மொத்தம் 8 பாட்டு இருக்கு. அனிருத் இசையில் அத்தனை இடங்களையும் கவர் செய்திடுவார். சுவாரஸ்யமான கதாபாத்திரங்களையும் படத்திற்கு அமைத்திருக்கிறோம்.

அஸ்வத் மாரிமுத்து
அஸ்வத் மாரிமுத்து

கமல் சாரைப் பார்க்கும்போது, எனக்கு எப்போதும் பயமாக இருக்கு. கமல் சாரைச் சந்திக்கும்போது, 'நான் ரஜினி சார் ஃபேன். ரஜினி படம் பண்ணுங்க'னு சொன்னார். பிறகு ரஜினி சார், 'அஸ்வத், நம்ம கமல்ஹாசனுக்குப் படம் பண்றோம். நல்ல படம் பண்ணனும்' என்றார். ரஜினி சாருக்கு இரவு 11 மணிக்குக்கூட கால் பண்ணி பேசுவேன். அப்போ கதையை டிஸ்கஸ் பண்ணுவோம்.

அதுக்கான இடத்தை ரஜினி சார் கொடுத்தார்" என்றவர், "இது 5 ரூபாய் டாக்டரின் கதைனு பேசிக்கிறாங்க. ஆனா, அது கிடையாது. இது தர்மன் என்கிற கேரக்டரை வைத்து நகர்கிற படம். நாளை முதல் படப்பிடிப்பைத் தொடங்குகிறோம்" என்றார்.

Yuvan: துபாயில் வசிக்க காரணம் என்ன? - யுவன் சங்கர் ராஜா விளக்கம்

நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'சிறை'. இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து அவரின் 26-வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. விக்ரம் பிரபு... மேலும் பார்க்க

"அவர் மியூசிக்ன்னு சொன்ன உடனே ரொம்ப குஷி ஆகிட்டேன்" - யுவன் குறித்து விக்ரம் பிரபு

நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'சிறை'. இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து அவரின் 26-வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. விக்ரம் பிரபு... மேலும் பார்க்க

Dharman: 'கே.எஸ். ரவிக்குமார், சுந்தர்.சி, சிபி சக்ரவர்த்தி படங்கள் நடக்காதது ஏன்?' - ரஜினி பதில்

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அந்தப் படத்திற்கு 'தர்மன்' என்று தலைப்பிட்டிருக்கிறார்கள். ராஜ்கமல் நிறுவனம் சார்பில் கமல்ஹாசன... மேலும் பார்க்க

Dharman: "'நான் கமல் படம் செய்கிறேன்' என ரஜினி தூங்காமல் வேலை செய்கிறார்" - கமல்ஹாசன்

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அந்தப் படத்திற்கு 'தர்மன்' என்று தலைப்பிட்டிருக்கிறார்கள். Dharman - Rajinikanth - Ashwath Mar... மேலும் பார்க்க

ரஜினி படத்தை இயக்கும் அஷ்வத் மாரிமுத்து! - கமல் தயாரிக்க, வருகிறார் `The Deadly Doctor' - டைட்டில்?

'ஜெயிலர் 2’ படத்தின் பணிகளை முடித்துள்ள ரஜினிகாந்த், அடுத்ததாக தனது 173-வது திரைப்படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். 'தலைவர் 173' படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இந்தப் படத்... மேலும் பார்க்க

ஹபீபி: "'என்னமோன்னு நினைச்சேன்; நல்லா நடிச்சுருக்கீங்கப்பா'ன்னு தனுஷ் சொன்னார்" - கஸ்தூரி ராஜா

மீரா கதிரவனின் இயக்கத்தில், கஸ்தூரி ராஜா, ஈசா, மாளவிகா மனோஜ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் 'ஹபீபி'. இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். இஸ்லாமியர்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டு இ... மேலும் பார்க்க