செய்திகள் :

"அவர் மியூசிக்ன்னு சொன்ன உடனே ரொம்ப குஷி ஆகிட்டேன்" - யுவன் குறித்து விக்ரம் பிரபு

post image

நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'சிறை'. இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

இதனைத் தொடர்ந்து அவரின் 26-வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

விக்ரம் பிரபுவின் 26-வது படத்தை அறிமுக இயக்குநர் சித்தார்த் இயக்குகிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

சிறை படத்தில்...
சிறை படத்தில்...

பட அறிவிப்பு தொடர்பாக வெளியான செய்தியாளர்கள் சந்திப்பில் விக்ரம் பிரபு, யுவன் சங்கர் ராஜா, இயக்குநர் சித்தார்த் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய விக்ரம் பிரபு, "இயக்குநர் கதையை சொன்னபோது புதுவித அனுபவமாக இருந்தது. அவர் கதை சொல்லும்போது படம் பார்ப்பது மாதிரியான அனுபவமாக இருந்தது.

இந்தக் கதையை அவர் இரண்டு வருடமாக எழுதியிருக்கிறார். கதையை கேட்கும்போது ஆர்வமாக இருந்தது.

யுவன் இசை என்று சொன்னதும் குஷி ஆகிவிட்டேன். நான் உங்களின் மிகப்பெரிய ரசிகன் யுவன்.

விக்ரம் பிரபு - யுவன் சங்கர் ராஜா
விக்ரம் பிரபு - யுவன் சங்கர் ராஜா

என் தங்கையும் உங்களோட தீவிர ரசிகை. உங்கள் பாட்டைதான் பாடிக்கொண்டே இருப்பார்.

உங்களுடன் பணியாற்றுவது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. படப்பிடிப்பிற்கு செல்வதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்" என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

Yuvan: துபாயில் வசிக்க காரணம் என்ன? - யுவன் சங்கர் ராஜா விளக்கம்

நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'சிறை'. இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து அவரின் 26-வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. விக்ரம் பிரபு... மேலும் பார்க்க

Dharman: "இது '5 ரூபாய் டாக்டரின்' கதையா?!" - ரஜினி படம் குறித்து இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அந்தப் படத்திற்கு 'தர்மன்' என்று தலைப்பிட்டிருக்கிறார்கள். Dharman - Rajinikanth - Ashwath Mar... மேலும் பார்க்க

Dharman: 'கே.எஸ். ரவிக்குமார், சுந்தர்.சி, சிபி சக்ரவர்த்தி படங்கள் நடக்காதது ஏன்?' - ரஜினி பதில்

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அந்தப் படத்திற்கு 'தர்மன்' என்று தலைப்பிட்டிருக்கிறார்கள். ராஜ்கமல் நிறுவனம் சார்பில் கமல்ஹாசன... மேலும் பார்க்க

Dharman: "'நான் கமல் படம் செய்கிறேன்' என ரஜினி தூங்காமல் வேலை செய்கிறார்" - கமல்ஹாசன்

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அந்தப் படத்திற்கு 'தர்மன்' என்று தலைப்பிட்டிருக்கிறார்கள். Dharman - Rajinikanth - Ashwath Mar... மேலும் பார்க்க

ரஜினி படத்தை இயக்கும் அஷ்வத் மாரிமுத்து! - கமல் தயாரிக்க, வருகிறார் `The Deadly Doctor' - டைட்டில்?

'ஜெயிலர் 2’ படத்தின் பணிகளை முடித்துள்ள ரஜினிகாந்த், அடுத்ததாக தனது 173-வது திரைப்படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். 'தலைவர் 173' படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இந்தப் படத்... மேலும் பார்க்க

ஹபீபி: "'என்னமோன்னு நினைச்சேன்; நல்லா நடிச்சுருக்கீங்கப்பா'ன்னு தனுஷ் சொன்னார்" - கஸ்தூரி ராஜா

மீரா கதிரவனின் இயக்கத்தில், கஸ்தூரி ராஜா, ஈசா, மாளவிகா மனோஜ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் 'ஹபீபி'. இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். இஸ்லாமியர்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டு இ... மேலும் பார்க்க