செய்திகள் :

முதல்வர் அலுவலக சிறப்பு அதிகாரியாக ஜான் ஆரோக்கியசாமி? - வெளியாகாத அரசாணை

post image

தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி, முதல்வர் விஜயின் அலுவலகத்தில் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இந்த நியமனம் தொடர்பான அரசாணை இதுவரை வெளியாகவில்லை.

தமிழகத்தில் முதல்வர்களின் அலுவலகங்களில் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்படுவது புதிய நடைமுறை அல்ல. இருப்பினும், ஜான் ஆரோக்கியசாமியின் நியமனம் தொடர்பாக அதிகாரப்பூர்வ அரசாணை இன்னும் வெளியிடப்படாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கிடையில், ஜான் ஆரோக்கியசாமிக்கு அரசு வாகனம் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், நியமனம் நடைமுறையில் அமல்படுத்தப்பட்டிருந்தாலும், அதற்கான ஆவணங்கள் ஏன் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை என்ற கேள்வி மேலும் வலுப்பெற்றுள்ளது.

ஜெகதீஸ்

முன்னதாக, முதல்வர் விஜயின் அரசியல் ஆலோசகராக ராதன் ரத்தன் பண்டிட் நியமிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியானபோது கடும் விமர்சனங்கள் எழுந்தன. அதனைத் தொடர்ந்து அந்த நியமனத்துக்கான அரசாணை திரும்பப் பெறப்பட்டது.

அதேபோல், முதல்வரின் தனிச் செயலாளராக (அரசியல்) ஜெகதீஷ் பழனிசாமி நியமிக்கப்பட்டதற்கான அரசாணை நேற்று முந்தினம் வெளியானது. ஆனால், அந்த அரசாணை மே 12-ஆம் தேதி தேதியிடப்பட்டிருந்த நிலையில், சுமார் 40 நாட்களுக்குப் பின்னரே அது பொதுவெளியில் வெளியானது விவாதத்தை ஏற்படுத்தியது.

இந்தச் சூழலில், ஜான் ஆரோக்கியசாமி முதல்வர் அலுவலக சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தாலும், அதற்கான அரசாணை இன்னும் வெளியிடப்படாதது தவெக அரசின் நிர்வாக வெளிப்படைத்தன்மை குறித்து எதிர்க்கட்சிகள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்ப வழிவகுத்துள்ளது.!

TNPSC மூலம் தேர்வு செய்யப்பட்ட 401 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!

TNPSC மூலம் தேர்வு செய்யப்பட்ட 401 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!TNPSC மூலம் தேர்வு செய்யப்பட்ட 401 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!TNPSC மூலம் தேர்வு செய்யப்பட்ட 401 பேர... மேலும் பார்க்க

புதுச்சேரி: ரூ.1,000 கோடியில் உறுப்பு மாற்று, விமான ஆம்புலன்ஸ் மருத்துவமனை! - ஜிப்மர் அறிவிப்பு

புதுச்சேரி சேதராப்பட்டு பகுதியில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, சுகாதாரம் மற்றும் கல்வி வசதியை உருவாக்குவதற்காக, சுமார் 50 ஏக்கர் நிலத்தை ஜிப்மர் நிறுவனத்துக்கு வழங்கியிருக்கிறது மாநில அரசு. அதையடுத்... மேலும் பார்க்க

"பொருளாதார மந்த நிலையை விட அணு ஆயுதம் மிகப்பெரிய பேரழிவு" - ஈரான் போர் குறித்து ட்ரம்ப்

நேற்று வெள்ளை மாளிகையில் ஈரான் போர் குறித்து பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி அளித்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அந்தப் பேட்டியில், "அவர்கள் நம்மை மதிக்கும் வரை நமக்கு எந்தப் பிரச்னையும் இருக்காது. ... மேலும் பார்க்க

இருமுறை மேயர்; அமமுக அமைப்புச் செயலாளர்! - தவெக-வில் இணையும் முயற்சியில் சாருபாலா தொண்டைமான்?

அமமுக முக்கிய நிர்வாகிகளில் ஒருவரும், புதுக்கோட்டை அரச குடும்பத்தைச் சேர்ந்தவருமான சாருபாலா தொண்டைமான் விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதன் ஒரு பகுதி... மேலும் பார்க்க

'ஜாக்கிரதையாக இருங்கள்; நாங்கள் திமுகக்காரர்கள்' - மாநகராட்சி கூட்டத்தில் சீறிய திமுக கவுன்சிலர்

சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் ரிப்பன் பில்டிங்கில் நடந்து வருகிறது. இதில் நேரமில்லாத நேரத்தின் போது பேசிய திமுக கவுன்சிலர் கவி கணேசன் முதல்வர் விஜய்யை கடுமையாக விமர்சித்திருந்தார். அவையில் பேசி... மேலும் பார்க்க

'தவெக ஆட்சியில் மக்கள் நொந்து போயிருக்கின்றனர்!' - மாநகராட்சி கூட்டத்தில் மேயர் பிரியா கடும் தாக்கு!

சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் பேசிய மேயர் பிரியா தவெக அரசை 'ரீல் அரசு' என விமர்சித்து பேசியிருந்தார்.சென்னை மாமன்ற கூட்டத்தின் அவையில் முன்னாள் முதல்வர் ஸ்டாலி... மேலும் பார்க்க