செய்திகள் :

Yuvan: துபாயில் வசிக்க காரணம் என்ன? - யுவன் சங்கர் ராஜா விளக்கம்

post image

நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'சிறை'. இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

இதனைத் தொடர்ந்து அவரின் 26-வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

விக்ரம் பிரபுவின் 26-வது படத்தை அறிமுக இயக்குநர் சித்தார்த் இயக்குகிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

யுவன் சங்கர் ராஜா
யுவன் சங்கர் ராஜா

பட அறிவிப்பு தொடர்பாக நடத்தப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பில் விக்ரம் பிரபு, யுவன் சங்கர் ராஜா, இயக்குநர் சித்தார்த் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய யுவன் சங்கர் ராஜா, "இத்திரைப்படம் இசை ரீதியாகவும், முற்றிலும் மாறுபட்ட கமர்சியல் பாணியிலும், ஒரு புதுமையான காட்சி மொழியுடனும் உருவாக உள்ளது.

இதில் முற்றிலும் ஒரு புதிய இசை வகையைக் கொண்டு வர முயற்சித்து வருகிறோம்" என்றிருக்கிறார்.

தொடர்ந்து அவரிடம், 'நீங்கள் துபாயில் வசிக்க காரணம் என்ன?' என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.

யுவன் சங்கர் ராஜா
யுவன் சங்கர் ராஜா

அதற்கு பதிலளித்த அவர், "நான் துபாயில் வசித்தாலும் பெரும்பாலும் சென்னையில்தான் இருக்கிறேன். என் மகள் துபாயில் படித்து வருவதால் அங்கு அதிக நேரம் செலவிடுகிறேன்.

பணிகளுக்கு ஏற்ப அங்கும், இங்கும் பயணம் செய்கிறேன். நான் பணியாற்றும் திரைப்படங்கள் தாமதமாவதற்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை" என்று தெரிவித்திருக்கிறார்.

Dharman: `பேட்ட பத்தல சார், இன்னும் சேர்ந்து நடிக்கணும்னு சொன்னேன்'- ரஜினி குறித்து நெகிழும் சிம்ரன்

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அந்தப் படத்திற்கு 'தர்மன்' என்று தலைப்பிட்டிருக்கிறார்கள். Dharman - Rajinikanth - Ashwath Mar... மேலும் பார்க்க

"அவர் மியூசிக்ன்னு சொன்ன உடனே ரொம்ப குஷி ஆகிட்டேன்" - யுவன் குறித்து விக்ரம் பிரபு

நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'சிறை'. இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து அவரின் 26-வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. விக்ரம் பிரபு... மேலும் பார்க்க

Dharman: "இது '5 ரூபாய் டாக்டரின்' கதையா?!" - ரஜினி படம் குறித்து இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அந்தப் படத்திற்கு 'தர்மன்' என்று தலைப்பிட்டிருக்கிறார்கள். Dharman - Rajinikanth - Ashwath Mar... மேலும் பார்க்க

Dharman: 'கே.எஸ். ரவிக்குமார், சுந்தர்.சி, சிபி சக்ரவர்த்தி படங்கள் நடக்காதது ஏன்?' - ரஜினி பதில்

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அந்தப் படத்திற்கு 'தர்மன்' என்று தலைப்பிட்டிருக்கிறார்கள். ராஜ்கமல் நிறுவனம் சார்பில் கமல்ஹாசன... மேலும் பார்க்க

Dharman: "'நான் கமல் படம் செய்கிறேன்' என ரஜினி தூங்காமல் வேலை செய்கிறார்" - கமல்ஹாசன்

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அந்தப் படத்திற்கு 'தர்மன்' என்று தலைப்பிட்டிருக்கிறார்கள். Dharman - Rajinikanth - Ashwath Mar... மேலும் பார்க்க

ரஜினி படத்தை இயக்கும் அஷ்வத் மாரிமுத்து! - கமல் தயாரிக்க, வருகிறார் `The Deadly Doctor' - டைட்டில்?

'ஜெயிலர் 2’ படத்தின் பணிகளை முடித்துள்ள ரஜினிகாந்த், அடுத்ததாக தனது 173-வது திரைப்படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். 'தலைவர் 173' படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இந்தப் படத்... மேலும் பார்க்க