செய்திகள் :

லாரி மீது பஸ் மோதி விபத்து; தீப்பிடித்தில் 7 பேர் பலி; பஸ்ஸில் சிகரெட் ஏற்றிச்சென்றதுதான் காரணமா?

post image

மும்பை-டெல்லி இடையே புதிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சாலை இன்னும் முழுமையாகப் பயன்பாட்டுக்கு வராவிட்டாலும் முடிக்கப்பட்ட இடங்களில் போக்குவரத்திற்குத் திறந்துவிடப்பட்டுள்ளது.

இந்தச் சாலையில் ரிஷிகேஷ் நகரில் இருந்து மத்தியப் பிரதேசத்தின் இந்தூருக்கு சொகுசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் இன்று அதிகாலையில் ராஜஸ்தான் மாநிலம் தவுஷா என்ற இடத்தில் வந்தபோது டிரைலர் லாரி மீது மோதிக்கொண்டது. இந்த விபத்தில் பஸ்சில் இருந்த 7 பயணிகள் உயிரிழந்தனர். மேலும் 22 பேர் காயம் அடைந்தனர்.

அவர்கள் அனைவரும் பஸ்ஸில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். பஸ், டிரைலர் லாரி மீது மோதிக்கொண்டதும் இரண்டுமே தீப்பிடித்துக்கொண்டன. இதனால் தீயில் கருகி பயணிகள் உயிரிழக்க நேரிட்டது.

தீப்பிடித்த வாகனங்கள்
தீப்பிடித்த வாகனங்கள்

பஸ் படுக்கை வசதி கொண்டது ஆகும். பஸ், டிரைலர் லாரி மீது மோதிக்கொண்டபோது பஸ்ஸின் மேல் படுக்கையில் உறங்கிக்கொண்டிருந்த பயணிகள் வெளியில் தூக்கி வீசப்பட்டனர். இதில் அவர்களது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இரண்டு பேர் உயிரிழந்தனர்.

மற்ற 5 பேர் தீக்காயத்தால் இறந்தனர். தீயணைப்புத் துறையினரும், போலீஸாரும் இரண்டு வாகனத்திலும் பிடித்த தீயை அணைத்து உள்ளே சிக்கிக்கொண்டிருந்த பயணிகளை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் தீவிபத்து ஏற்பட்டு ஒரு மணி நேரம் கழித்த பிறகே தீயணைப்புத் துறையினர் வந்தனர் என்றும், அதனால்தான் அதிக உயிரிழப்பு ஏற்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

அதோடு பஸ்ஸில் அதிக அளவு சிகரெட் ஏற்றிச்செல்லப்பட்டதாகவும், எனவே தீ பஸ்சில் வேகமாகப் பரவியதாகவும் கூறப்படுகிறது.

மேலும் நெடுஞ்சாலை என்பதால் டிரைவர் மிகவும் வேகமாக பஸ்ஸை ஓட்டியதாகவும், டிரைவர் பஸ்ஸை ஓட்டிக்கொண்டிருந்தபோது உறங்கியதால் இச்சம்பவம் நடந்திருக்கலாம் என்று ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

குரங்குகளுக்கு பழம் கொடுத்த புது மணப்பெண்; மலை உச்சியிலிருந்து உருண்டு விழுந்து உயிரிழந்த சோகம்!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள தெற்கு திட்டங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். வெளிநாட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இவருக்... மேலும் பார்க்க

காவிரியில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி; வீடியோ மோகத்தால் நிகழ்ந்த துயரம்

காவிரி ஆற்றுக்கு சுற்றுலா சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம், மாண்டியா மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.காவிரி ஆறுகர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டத்தைச் ச... மேலும் பார்க்க

Venezuela: வெனிசுலா இரட்டை நிலநடுக்கம்; இடிந்து விழுந்த கட்டடங்கள்; அவசர நிலை அறிவித்த அதிபர்!

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் காரணமாகப் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. தலைநகர் காரகாஸ் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் இந... மேலும் பார்க்க

`அப்பா, என்னைக் காப்பாத்துங்க' - லக்னோ தீயில் கருகிய மகனின் கடைசி அழைப்பு; நெஞ்சை உலுக்கும் சோகம்!

“அப்பா, இங்க தீப்பிடிச்சிருச்சு, என்னைக் காப்பாத்துங்க!” - இது வெறும் வார்த்தைகள் அல்ல. லக்னோ தீயில் கருகிப் போன 23 வயது இளைஞன் சுக்மணி சிங்கின் மரண ஓலம். திங்களன்று வடமேற்கு லக்னோவின் அலிகஞ்ச் பகுதிய... மேலும் பார்க்க

திருவள்ளூர் இறால் தொழிற்சாலை அமோனியா கசிவு: உயிரிழப்பு எண்ணிக்கை 4 ஆக உயர்வு; மூவர் கைது!

நேற்று (ஜூன் 21, 2026) திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள இறால் பதப்படுத்தும் தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இதனால், அங்கு வேலை செய்துகொண்டிருந்த 60-க்கும் மேற்பட்டோர் ... மேலும் பார்க்க

அமோனியா கசிவு: "தமிழ்நாட்டை நம்பி வந்த பிள்ளைகள்... கண், காது, மூக்கில் ரத்தம் வந்து..." - பிரேமலதா

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பெரியபாளையத்தில் இயங்கி வரும் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் இன்று அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்டது. இதனால் அந்தத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்களுக்கு மூச்சுத... மேலும் பார்க்க