செய்திகள் :

திருவள்ளூர் இறால் தொழிற்சாலை அமோனியா கசிவு: உயிரிழப்பு எண்ணிக்கை 4 ஆக உயர்வு; மூவர் கைது!

post image

நேற்று (ஜூன் 21, 2026) திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள இறால் பதப்படுத்தும் தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது.

இதனால், அங்கு வேலை செய்துகொண்டிருந்த 60-க்கும் மேற்பட்டோர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளனர். சிலருக்கு வாய், மூக்கில் ரத்தமும் வந்துள்ளது.

இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

நான்கு பேர் உயிரிழப்பு: சிகிச்சைக்குப் பலனளிக்காமல் நேற்று இரண்டு பெண்களும், இன்று இரண்டு பெண்களும் உயிரிழந்துள்ளனர். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

திருவள்ளூர் இறால் தொழிற்சாலை அமோனியா கசிவு
திருவள்ளூர் இறால் தொழிற்சாலை அமோனியா கசிவு

கைது: இந்த விபத்து காரணமாக இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையின் உரிமையாளர், மேலாளர் என 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணைக் குழு: இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்துள்ளது தமிழ்நாடு அரசு. இவர்கள் 24 மணிநேரத்திற்குள் இடைக்கால அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

நிவாரண நிதி: இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 2 லட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என்றும், அரசு செலவில் அவர்களது சொந்த மாநிலங்களுக்கு உடல்கள் அனுப்பி வைக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

அமோனியா கசிவு: "தமிழ்நாட்டை நம்பி வந்த பிள்ளைகள்... கண், காது, மூக்கில் ரத்தம் வந்து..." - பிரேமலதா

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பெரியபாளையத்தில் இயங்கி வரும் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் இன்று அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்டது. இதனால் அந்தத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்களுக்கு மூச்சுத... மேலும் பார்க்க

அமோனியா கசிவு: "பாதிக்கப்பட்டவர்களின் முகம் வீங்கியிருக்கிறது; நுரையீரலும்..." - அமைச்சர் அருண் ராஜ்

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பெரியபாளையத்தில் இயங்கி வரும் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் இன்று அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்டது. இதனால் அந்தத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்களுக்கு மூச்சுத... மேலும் பார்க்க

அமோனியா கசிவு: "இருவர் உயிரிழப்பு; 23 பேர் ஐ.சி.யூ-வில்... விபத்துக்கு இதுதான்...' - அமைச்சர் குமார்

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பெரியபாளையத்தில் இயங்கி வரும் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் இன்று அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்டது. இதனால் அந்தத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்களுக்கு மூச்சுத... மேலும் பார்க்க

பெரியபாளையம் அமோனியா கசிவு சம்பவம்: உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பெரியபாளையத்தில் இயங்கி வரும் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் இன்று அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்டது. இதனால் அந்தத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்களுக்கு மூச்சுத... மேலும் பார்க்க

திருவள்ளூர்: தொழிற்சாலையில் அமோனியா கசிவு; பாதிக்கப்பட்டவர்களில் 7 பேர் உயிரிழப்பு!

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பெரியபாளையத்தில் இயங்கி வரும் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் இன்று அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்டது. இதனால் அந்தத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்களுக்கு மூச்சுத... மேலும் பார்க்க

பெரியபாளையம்: இறால் தொழிற்சாலையில் அமோனியா கசிவு; தீவிர சிகிச்சையில் இருவர்!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே இறால் பதப்படுத்தும் தொழிற்சாலை ஒன்று உள்ளது.அந்தத் தொழிற்சாலையில் பல்வேறு தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இன்று திடீரென அந்தத் தொழிற்சாலையில் அமோனியா வாயு... மேலும் பார்க்க