செய்திகள் :

அமோனியா கசிவு: "இருவர் உயிரிழப்பு; 23 பேர் ஐ.சி.யூ-வில்... விபத்துக்கு இதுதான்...' - அமைச்சர் குமார்

post image

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பெரியபாளையத்தில் இயங்கி வரும் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் இன்று அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்டது.

இதனால் அந்தத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் - பெரியபாளையம்
திருவள்ளூர் - பெரியபாளையம்

சிலருக்கு வாய், மூக்கிலிருந்து ரத்தக்கசிவும் ஏற்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட 70-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களில் 2 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அருகிலுள்ள சில மருத்துவமனைகளில் 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் சிலர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

முதலமைச்சர் விஜய் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஒரு குழுவை அமைக்க உத்தரவிட்டிருக்கிறார். தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் மற்றும் பொதுச் சுகாதாரக் கூடுதல் இயக்குநர் ஆகியோரைக் கொண்ட 3 பேர் குழு, 24 மணி நேரத்திற்குள் இடைக்கால அறிக்கையையும், 3 நாள்களுக்குள் இறுதி அறிக்கையையும் சமர்ப்பிக்க உத்தரவிட்டிருக்கிறார்.

திருவள்ளூர் - பெரியபாளையம்
திருவள்ளூர் - பெரியபாளையம்

அமைச்சர் குமார் பேசுகையில், "இது ரொம்ப துயரமான சம்பவம். 60 பெண்களும், 4 ஆண்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இருவர் உயிரிழந்திருக்கிறார்கள். முதல்வர் இச்சம்பவம் பற்றி அறிந்ததும் ரொம்ப வேதனைப்பட்டார். இனிமேல், இதுபோல் சம்பவம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும் அறிவுறுத்தியிருக்கிறார். பாதிக்கப்பட்டோரை கவனித்துக் கொள்ள, உயர்மட்ட மருத்துவர்கள் வந்திருக்கிறார்கள். ஒவ்வொரு விஷயத்தையும், முதல்வரிடம் அப்டேட் செய்துக் கொண்டிருக்கிறோம். பாதிக்கப்பட்டவர்களில் பலர் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இறால் சேமிப்பு தொழிற்சாலை அது. அங்குள்ள கூலண்டில் கசிவு ஏற்பட்டிருக்கிறது. விசாரணைக்கு கேட்டிருக்கிறோம். அது வந்தப் பிறகு கூடுதல் விவரத்தை தெரிவிக்கிறோம். தொழிற்சாலையின் உரிமையாளர்கள் மீது எஃப்.ஐ. ஆர் போடப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களில் 23 பேர் ஐ.சி.யூ-வில் இருக்கிறார்கள்." எனத் தெரிவித்திருக்கிறார்.

பெரியபாளையம் அமோனியா கசிவு சம்பவம்: உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பெரியபாளையத்தில் இயங்கி வரும் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் இன்று அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்டது. இதனால் அந்தத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்களுக்கு மூச்சுத... மேலும் பார்க்க

திருவள்ளூர்: தொழிற்சாலையில் அமோனியா கசிவு; பாதிக்கப்பட்டவர்களில் 7 பேர் உயிரிழப்பு!

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பெரியபாளையத்தில் இயங்கி வரும் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் இன்று அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்டது. இதனால் அந்தத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்களுக்கு மூச்சுத... மேலும் பார்க்க

பெரியபாளையம்: இறால் தொழிற்சாலையில் அமோனியா கசிவு; தீவிர சிகிச்சையில் இருவர்!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே இறால் பதப்படுத்தும் தொழிற்சாலை ஒன்று உள்ளது.அந்தத் தொழிற்சாலையில் பல்வேறு தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இன்று திடீரென அந்தத் தொழிற்சாலையில் அமோனியா வாயு... மேலும் பார்க்க

ஏற்காடு: வேனை பின்னோக்கி இயக்கிய ஓட்டுநர் - டயரில் சிக்கி துடிதுடித்து உயிரிழந்த 3ம் வகுப்பு மாணவி

சேலம் மாவட்டம் ஏற்காடு அருகில் உள்ள வாழவந்தி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரின் 8 வயது மகள் மேனகா முண்டகாம்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்திருக்கிறார். ஏற்காட்டில் போதி... மேலும் பார்க்க

திருச்சி: மோதிக்கொண்ட இருச்சக்கர வாகனங்கள்; பலியான காவல்துறை உதவி ஆய்வாளர்; என்ன நடந்தது?

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள பெல் மத்திய பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவன கே செட்டார் குடியிருப்பைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது: 55). இவர், 1995-ம் ஆண்டு காவல்துறையில் சேர்ந்தவர்... மேலும் பார்க்க

Keralam: மூழ்கிய கப்பலில் கால்சியம் கார்பைடு; கடலோர மக்களுக்கு அச்சுறுத்தல்; நீதிமன்றம் கவலை

கேரள மாநிலத்தில் கடந்த ஆண்டு மே மாதம் 23-ம் தேதி விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற எம்.எஸ்.சி எல்சா 3 என்ற லைபீரியா நாட்டு சரக்கு கப்பல், மறுநாளான மே 24-ம் தேதி கொச்சியிலிருந்து 38 நா... மேலும் பார்க்க