செய்திகள் :

"அந்த ஃப்ரேமை பார்த்துட்டு விஜய் சார் சொன்ன விஷயம்!" - பகிரும் வெங்கட் பிரபு

post image

முதல்வர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டுத் தமிழகமெங்கும் பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அந்த வரிசையில் தயாரிப்பாளர் டி. சிவாவும் ஒரு நிகழ்வை நடத்தியிருக்கிறார்.

இந்த நிகழ்வில் இயக்குநர் வெங்கட் பிரபுவும் கலந்துகொண்டார். இதன் பிறகு தயாரிப்பாளர் டி. சிவாவும், வெங்கட் பிரபுவும் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.

Venkat Prabhu - CM Vijay
Venkat Prabhu - CM Vijay

இயக்குநர் வெங்கட் பிரபு, "விஜய் சார்கிட்ட நான் அந்த ஃப்ரேமைக் கொண்டு போய் கொடுத்தேன். அவர் அதைப் பிரிச்சுப் பார்த்த அடுத்த நொடியே சிரிக்க ஆரம்பிச்சிட்டாரு.

சிரிச்சுட்டே, 'உன்னால மட்டும்தான்டா இதையெல்லாம் ஃப்ரேம் பண்ணி எடுத்துட்டு வரணும்னு தோணும்'னு சொன்னாரு. அதை ரொம்பவே என்ஜாய் பண்ணிப் பார்த்தாரு. நிஜமாவே அதைப் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷப்பட்டாரு.

ஒரு விஷயத்தை உண்மையா மேனிஃபெஸ்ட் பண்ணினால், அது கண்டிப்பா நடக்கும் என்பதற்கு இதுவே ஒரு சாட்சி.

நாம ஒரு விஷயத்தை முழுசா நம்பி, அது நடக்கணும்னு உண்மையா நினைச்சோம்னா இந்த யுனிவர்ஸ் அதை நடத்திக் காட்டிடும். அவர் உண்மையாவே 'Greatest of all time' தான்!" எனக் கூறியிருக்கிறார்.

தயாரிப்பாளர் டி. சிவா பேசுகையில், "நம்முடைய அன்பிற்குரிய தளபதி, மாண்புமிகு முதல்வர் விஜய் சாருக்கு என் நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். கடந்த 2017-ஆம் வருஷம் நான் அவரை நேர்ல போய் சந்திச்சேன்.

அப்போ ஒரு மக்கள் வெள்ளத்துக்கு நடுவுல அவர் மிதந்து வர்ற மாதிரி ஒரு அழகான ஹேண்ட் பெயிண்டிங் பண்ணி, அதுக்குக் கீழே 'ஆட்சிப்பீடம்' என டைட்டில் வச்சு அவருக்கு அன்பளிப்பா கொடுத்தேன்.

அதைப் பார்த்தவுடனே, 'இது என்ன'னு கேட்டாரு. அதுக்கு நான், 'நீங்க மக்கள் வெள்ளத்துல மிதந்து வந்து இந்த ஆட்சிப்பீடத்துல உட்காரணும் சார், அதான் என்னோட ஆசை'னு சொன்னேன்.

அதை கேட்டுட்டு சும்மா சிரிச்சவர், 'நேரம் வரும்போது சொல்றேன்'னு சொன்னார். அவர் சொன்ன அந்த நேரம் வர்றதுக்குக் கரெக்ட்டா ஒரு ஆறு வருஷம் ஆகியிருக்கும்.

இப்போ அவரை ஒரு முதல்வரா நேர்ல சந்திச்சுப் பேசும்போது, இந்த பழைய சம்பவத்தை அவரே ஞாபகம் வச்சு என்கிட்ட பகிர்ந்துக்கிட்டாரு. அதைக் கேட்கும்போது மனசுக்கு அவ்வளவு பெருமையா இருந்தது.

T Siva - Vijay
T Siva - Vijay

ஏன்னா, இது தமிழக அரசியல் வரலாற்றையே புரட்டிப்போட்ட ஒரு மாபெரும் தருணம். அவருடைய இந்த பிறந்தநாளை, தமிழகத்தோட ஒரு புதிய மறுமலர்ச்சிக்கான நாளாத்தான் நான் பார்க்கிறேன்.

நான் 2017-ல இருந்தே அவர்கிட்ட 'அரசியலுக்கு வாங்க'ன்னு தொடர்ந்து கேட்டுட்டு இருந்தேன்னா, அது எனக்கான சுயநலத்திலோ இல்ல ஏதோ ஒரு எதிர்பார்ப்புலயோ கேட்டது கிடையாது.

இந்த நாட்டுக்கு ஒரு நல்லது நடக்கணும், நல்லவர்கள் அரசியலுக்கு வரணும், எந்தவித சுயநலமும் இல்லாத ஒரு நல்லாட்சி அமையணும்ன்ற ஆசையில மட்டும்தான் கேட்டேன். அதை இன்னைக்கு நிஜமா பார்க்கும்போது பெருமிதமா இருக்கு." எனப் பேசியிருக்கிறார்.

Con City: "'நான் சொன்ன கட்சிக்கு ஓட்டு போடல; அதான் கரண்ட் ப்யூஸை எடுத்தேன்'னு..." - விடிவி கணேஷ்

அர்ஜுன் தாஸ் நடித்திருக்கும் 'கான் சிட்டி' திரைப்படம் இம்மாதம் 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி, விடிவி கணேஷ் எனப் பலரும் நடித்திருக்கும் இப்படத்தை அறிமுக இய... மேலும் பார்க்க

'மணிரத்னம், கமல்ஹாசன் இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகளாக சித்தரித்தது தான்.!'- லெனின் பாரதி பேசியதென்ன?

மீரா கதிரவனின் இயக்கத்தில், கஸ்தூரி ராஜா, ஈசா, மாளவிகா மனோஜ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'ஹபீபி'. இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். இஸ்லாமியர்களின் வாழ்வியலை மையமாக... மேலும் பார்க்க

ஹபீபி: 'கேரக்டராகவே வாழ்ந்திருக்கும் என் அப்பாவை நினைத்து பெருமைப்படுகிறேன்'- தனுஷ் பாராட்டு

நடிகர் தனுஷ் தனது தந்தை கஸ்தூரி ராஜா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த 'ஹபீபி' படத்தைப் பாராட்டி இருக்கிறார். மீரா கதிரவனின் இயக்கத்தில், கஸ்தூரி ராஜா, ஈசா, மாளவிகா மனோஜ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகிய... மேலும் பார்க்க

நூறு சாமி விமர்சனம்: அம்மா, சாமியல்ல மனுஷி! நெகிழ வைக்கிறதா மறுமணம் குறித்த எமோஷனல் டிராமா?

கள்ளக்குறிச்சியில் வசித்து வரும் செல்வி (ஸ்வாசிகா), கணவன் இறந்த பிறகு தனது இரு மகன்களையும் அக்கறையாக வளர்த்து ஆளாக்குகிறார். பாஸ்கர் (அஜய் திஷான்) மற்றும் விவேக் (சக்தி) வளர்ந்து விவரம் அறிந்த வயதில்,... மேலும் பார்க்க

OM: `உண்மை சம்பவங்கள்... தனுஷ் கேரக்டர் பெயர் அண்ணாமலை?' - ராஜ்குமார் பெரியசாமி கூறியதென்ன?

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், தனுஷ், சாய் பல்லவி, மம்மூட்டி, ஸ்ரீலீலா நடிப்பில் வெளியாக உள்ள படம் 'ஓம்'. சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தின் டைட்டில் அறிவிப்பு விழா நேற்று ... மேலும் பார்க்க