செய்திகள் :

காட்டில் கறிவிருந்துடன் பிறந்தநாள் கொண்டாட்டம்; ரௌடிகளை ட்ரோன் மூலம் வளைத்துக் கைதுசெய்த போலீஸ்!

post image

குற்றங்களை முன்கூட்டியே தடுக்கும் வகையில் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் சரித்திர பதிவேடு குற்றவாளிகளுக்கு எதிரான தீவிர சோதனை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக கன்னியாகுமரி உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் சரித்திர பதிவேடு குற்றவாளிகளுக்கு எதிரான சோதனைகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் தேடப்பட்டு வந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகளான நங்கூரன்பிலாவிளையைச் சேர்ந்த சந்திரன் என்பவரது மகன் லிங்க ராஜா என்ற காட்டு ராஜா மற்றும் பனக்கோட்டான்விளை சுயம்புலிங்கம் என்பவரது மகன் வசந்த் ஆகியோர் காட்டுக்குள் கறி விருந்தில் ஈடுபடுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் எஸ்.பி டாக்டர் ஸ்டாலின்
கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் எஸ்.பி டாக்டர் ஸ்டாலின்

இதை அடுத்து காட்டுக்குள் ட்ரோன் மூலம் தேடுதல் வேட்டை நடத்தியது போலீஸ். அதில், சரித்திர பதிவேடு ரௌடிகள் உள்ளிட்ட சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் கறிவிருந்தில் ஈடுபடுவது தெரியவந்தது. மேலும், அவர்களின் கார்கள், பைக்குகள் ஆகியவையும் அங்கு நிறுத்தி வைத்திருந்தது தெரியவந்தது. ட்ரோன் மூலம் அவர்கள் இருப்பிடத்தை கண்டறிந்த போலீஸார் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் இருவர் மற்றும் அவர்கள் நண்பர்கள் 51 பேரையும் சுற்றிவளைத்தனர். அவர்கள் பயன்படுத்திய 15 பைக்குகள் ஒரு கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

கைதுசெய்யப்பட்ட ரவுடிகள்

ரௌடி ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு காட்டுக்குள் கறிவிருந்து நடத்தியது தெரியவந்துள்ளது. சரித்திர பதிவேடு குற்றவாளிகளான லிங்க ராஜா மற்றும் வசந்த் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களுக்கும் கறி விருந்தில் கலந்துகொண்ட அவர்களது நண்பர்களுக்கும் உள்ள தொடர்புகள் குறித்தும், அவர்கள் குற்ற சம்பவங்களில் தொடர்பு உடையவர்களா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்டேஷனில் குற்றங்கள் குறைய ஆடு பலி; சுவற்றில் தெளிக்கப்பட்ட ரத்தம் - சர்ச்சையில் சேலம் போலீஸ்!

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகில் இயங்கி வருகிறது தீவட்டிப்பட்டி காவல் நிலையம். ஆய்வாளர் இல்லாத நிலையில், இரண்டு உதவி ஆய்வாளர்கள் தலைமையில் இந்த காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. ஆடு ஒன்றை பலியிட்டு அதன... மேலும் பார்க்க

பாஸ்போர்ட் இல்லாத நாக்பூர் மாணவனுக்கு அபுதாபியில் தேர்வு மையம் - தொடரும் நீட் தேர்வு குளறுபடி!

மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு இந்த ஆண்டு மே மாத தொடக்கத்தில் நடந்தது. இதில் தேர்வுக்கு முன்பு வினாத்தாள் கசிந்ததால் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மறுதேர்வு நாளை நடத்தப்படுகிறது. இத்தேர்வ... மேலும் பார்க்க

`நான் தற்கொலை செய்யாமல் இருந்ததற்கு காரணம் அவள் மட்டும் தான்!' - ஸ்ரீசாந்த் பகிரும் காதல்

இரண்டு உலகக் கோப்பைகளை வென்ற அணியில் இடம்பிடித்த வீரர் ஸ்ரீசாந்த், அணியின் வேகப்பந்து வீச்சு துறையில் நட்சத்திரமாக வலம் வந்தவர். ஆனால், ஒரே ஒரு குற்றச்சாட்டு அவரது கிரிக்கெட் வாழ்வையே புரட்டிப் போட்டத... மேலும் பார்க்க

Orry Income: ஒரு ரீல்ஸில் ரூ.76 லட்சம் சம்பாதித்த இன்ஃப்ளூயன்சர்! பார்ட்டிக்கு போனால் ரூ.25 லட்சம்?

இன்ஸ்டாகிராமில் பாலிவுட் பிரபலங்களுடன் தொடர்ந்து காணப்படுபவர் ஓரி (Orry). இவருக்கு என்று எந்தவொரு குறிப்பிட்ட வேலையோ அல்லது தொழிலோ கிடையாது. எனினும், ஒரு பிராண்டின் விளம்பரத்திற்காக இன்ஸ்டாகிராமில் வெ... மேலும் பார்க்க

‘எனக்கு என்ன பிடிக்கும்னு யோசித்ததே இல்லை!’ - தாய்லாந்தில் தன்னைத் தேடிய இந்திய பெண்ணின் கதை

ஒரு பெண்ணின் உலகம் எதுவரை? வீட்டின் நான்கு சுவர்களுக்குள் அடங்கிவிடும் பொறுப்புகள்தானா அல்லது கண்டங்கள் கடந்து விரியும் எல்லையற்ற வானமா? இந்தக் கேள்விக்குத் தன் ஒற்றை நாள் பயணத்தின் மூலம் பதில் சொல்லி... மேலும் பார்க்க