செய்திகள் :

`நான் தற்கொலை செய்யாமல் இருந்ததற்கு காரணம் அவள் மட்டும் தான்!' - ஸ்ரீசாந்த் பகிரும் காதல்

post image

இரண்டு உலகக் கோப்பைகளை வென்ற அணியில் இடம்பிடித்த வீரர் ஸ்ரீசாந்த், அணியின் வேகப்பந்து வீச்சு துறையில் நட்சத்திரமாக வலம் வந்தவர். ஆனால், ஒரே ஒரு குற்றச்சாட்டு அவரது கிரிக்கெட் வாழ்வையே புரட்டிப் போட்டது. இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், 2013-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஸ்பாட் ஃபிக்சிங் புகாரில் சிக்கி, திகார் சிறையில் கழித்த அந்த இருண்ட நாட்கள் குறித்தும், அதிலிருந்து தன்னை மீட்டெடுத்த காதல் குறித்தும் சமீபத்திய பேட்டி ஒன்றில் உருக்கமாகப் பகிர்ந்துள்ளார்.

திகார் சிறையும்... தற்கொலை எண்ணமும்!

2013 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடியபோது, ஸ்ரீசாந்த் ஸ்பாட் ஃபிக்சிங் புகாரில் கைது செய்யப்பட்டார். இது இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய ஸ்ரீசாந்த், "டெல்லி போலீஸ் காவலில் 12 நாட்களும், திகார் சிறையில் 27 நாட்களும் இருந்தேன். அந்த அனுபவம் என்னை முற்றிலும் மாற்றிவிட்டது. சாதாரண வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் பிரச்னைகள் எல்லாம் ஒன்றுமே இல்லை என்பதை அங்குதான் உணர்ந்தேன். ஒரு விசாரணைக்காகப் பல ஆண்டுகள் ஆகும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அந்தச் சூழல் என்னை மேலும் வலிமையாக்கியது" என்றார்.

ஸ்ரீசாந்த்

தொடர்ந்து பேசிய அவர், "அந்த நாட்களில் என் அம்மா, அப்பா மற்றும் என் அக்கா மகளைப் பற்றித்தான் சிந்தித்துக்கொண்டிருந்தேன். புகார்கள் எழுந்தபோது, அவர்களைப் பள்ளிக்குக்கூட அனுப்ப வேண்டாம் என்று கூறிவிட்டேன். சுமார் ஒரு மாத காலம், ஒட்டுமொத்த தேசத்தின் கவனமும் என் மீது மட்டுமே இருந்தது. அந்த அழுத்தமான சூழலில், நான் தற்கொலை செய்துகொள்ளாமல் இருந்ததற்கு முக்கியக் காரணம் என் மனைவி புவனேஸ்வரிதான்" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

காதல் தந்த நம்பிக்கை!

ஸ்ரீசாந்த் தனது மனைவி புவனேஸ்வரியுடனான காதல் கதையையும் அந்தப் பேட்டியில் பகிர்ந்துகொண்டார். ஜெய்ப்பூரைச் சேர்ந்த சேகாவத் அரச குடும்பத்தைச் சேர்ந்தவரான புவனேஸ்வரியை, 2007-ம் ஆண்டு ஒரு பள்ளி விழாவில் விருந்தினராகச் சென்றபோது முதன்முதலில் சந்தித்துள்ளார். அப்போது புவனேஸ்வரி 10-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார். "முதல் சந்திப்பு பள்ளியில், அடுத்த நாள் மைதானத்தில் இரண்டாவது சந்திப்பு, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நீச்சல் குளம் அருகே மூன்றாவது சந்திப்பு, பின்னர் இந்தூரில் நான்காவது சந்திப்பு. ஐந்தாவது சந்திப்பில், நான் ஜாமீனில் வெளியே வந்தபோது, எங்களுக்குத் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது" என்று ஸ்ரீசாந்த் நினைவுகூர்ந்தார்.

"2011 உலகக் கோப்பையை வென்றால், உன்னைத் திருமணம் செய்துகொள்வேன் என்று 2010-லேயே அவரிடம் வாக்குறுதி அளித்திருந்தேன். என் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டபோது, வழக்கறிஞர்களுடன் பேசுவதில் அவர்தான் முக்கியப் பங்காற்றினார். ஒட்டுமொத்த நாடும் என்னை ஒரு வில்லனைப் போலப் பார்த்தபோது, அவரும் அவரது குடும்பத்தினரும் எனக்குப் பாறை போல உறுதுணையாக நின்றார்கள். அவர் என் வாழ்க்கையில் இருந்ததால்தான், எனக்கு ஜாமீன் கிடைத்தது" என்று உருக்கமாகத் தெரிவித்தார்.

இந்திய அணிக்காக 27 டெஸ்ட், 53 ஒருநாள் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்ரீசாந்த், 2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலகக் கோப்பை வென்ற அணிகளில் இடம்பெற்றவர். ஸ்பாட் ஃபிக்சிங் புகாரில் சிக்கிய ஸ்ரீசாந்த் மற்றும் மற்ற வீரர்கள் 2015-ம் ஆண்டு குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டனர். ஸ்ரீசாந்த் - புவனேஸ்வரி தம்பதியினர் 2013-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

Orry Income: ஒரு ரீல்ஸில் ரூ.76 லட்சம் சம்பாதித்த இன்ஃப்ளூயன்சர்! பார்ட்டிக்கு போனால் ரூ.25 லட்சம்?

இன்ஸ்டாகிராமில் பாலிவுட் பிரபலங்களுடன் தொடர்ந்து காணப்படுபவர் ஓரி (Orry). இவருக்கு என்று எந்தவொரு குறிப்பிட்ட வேலையோ அல்லது தொழிலோ கிடையாது. எனினும், ஒரு பிராண்டின் விளம்பரத்திற்காக இன்ஸ்டாகிராமில் வெ... மேலும் பார்க்க

‘எனக்கு என்ன பிடிக்கும்னு யோசித்ததே இல்லை!’ - தாய்லாந்தில் தன்னைத் தேடிய இந்திய பெண்ணின் கதை

ஒரு பெண்ணின் உலகம் எதுவரை? வீட்டின் நான்கு சுவர்களுக்குள் அடங்கிவிடும் பொறுப்புகள்தானா அல்லது கண்டங்கள் கடந்து விரியும் எல்லையற்ற வானமா? இந்தக் கேள்விக்குத் தன் ஒற்றை நாள் பயணத்தின் மூலம் பதில் சொல்லி... மேலும் பார்க்க

கோர்ட்டில் விவாகரத்து ஆவணங்களைக் கிழித்துவிட்டு கட்டிப்பிடித்த தம்பதி; வைரல் படத்தின் பின்னணி என்ன?

டெல்லியைச் சேர்ந்த ஒரு தம்பதி பல ஆண்டுகளாக விவாகரத்து கோரி கோர்ட்டிற்கு அலைந்து கொண்டிருந்தனர். ஷிகா என்ற அப்பெண் செளரப் என்பவரை 2020ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணமான சில மாதங்களில் க... மேலும் பார்க்க

பீகார்: 17 வயது சிறுவனை திருமணம் செய்த 22 வயது பெண்; பஞ்சாயத்திற்கு வந்த விவகாரம்; என்ன நடந்தது?

பீகார் மாநிலம் மதுபுரா மாவட்டத்தில் இருக்கும் கிராமத்தில் வசிப்பவர் பூஜாகுமாரி(22). இவருக்குப் பக்கத்து வீட்டில் வசிக்கும் பித்து குமார்(17) என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் வீட்டிற்க... மேலும் பார்க்க

செயற்கை கருத்தரிப்பு மைய குளறுபடியால் மாறிய கரு? "பிறந்தது எங்கள் குழந்தைகள் அல்ல" - தம்பதி புகார்

டெல்லி அருகில் உள்ள குருகிராமைச் சேர்ந்த தம்பதியான ராகுல் மற்றும் மீனு தம்பதி செயற்கை முறையில் (Vitro Fertilisation) குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்தனர். இதற்காக டெல்லியில் உள்ள டாக்டர் கைலாஷ் கருத்... மேலும் பார்க்க

விஜய் : எம்.ஜி.ஆர் பாணியில் `வாள்' காணிக்கை - கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் தரிசனம்!

டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் முடித்த கையோடு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று லேண்ட் ஆனது மங்களூரில். அங்கே புகழ்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தார். கூடவே, மூகாம்பி... மேலும் பார்க்க