செய்திகள் :

கோர்ட்டில் விவாகரத்து ஆவணங்களைக் கிழித்துவிட்டு கட்டிப்பிடித்த தம்பதி; வைரல் படத்தின் பின்னணி என்ன?

post image

டெல்லியைச் சேர்ந்த ஒரு தம்பதி பல ஆண்டுகளாக விவாகரத்து கோரி கோர்ட்டிற்கு அலைந்து கொண்டிருந்தனர். ஷிகா என்ற அப்பெண் செளரப் என்பவரை 2020ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணமான சில மாதங்களில் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.

ஷிகா தனது கணவரிடமிருந்து விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இவ்வழக்கு விசாரணைக்காக இருவரும் பல ஆண்டுகளாக கோர்ட்டிற்கு அலைந்தனர். இதனால் ஷிகாவிற்கு மனஅழுத்தம், உடல் நலப்பிரச்னை மற்றும் பணப்பிரச்னை ஏற்பட்டது.

ஆரம்பத்தில் ஷிகாவிற்கு அவரது தந்தை முழு ஆதரவு கொடுத்துக்கொண்டிருந்தார். ஆனால் அவரிடம் இருந்த சேமிப்பும் குறைந்து கொண்டே வந்தது. மகளின் எதிர்காலத்தை நினைத்து நினைத்து கவலைப்பட்டுக்கொண்டிருந்த ஷிகாவின் தந்தைக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

பல பிரச்னைகளால் அவரை ஷிகாவின் குடும்பத்தினர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து செளரப்பிற்கு தெரிய வந்தது. உடனே அவர் ஓடி வந்து ஷிகாவின் தந்தையை குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை கொடுத்தார்.

இதில் ஷிகாவின் தந்தை குணமடைந்து வீடு திரும்பினார். ஆனால் ஷிகாவின் தந்தை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய அடுத்த நாளே ஷிகாவின் விவாகரத்து வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

இதில் இரண்டு பேரும் ஆஜரானார்கள். வழக்கறிஞர்கள் தங்களது தரப்பு வாதத்தை எடுத்து வைத்தனர். அந்நேரம் செளரப்பிடம் இன்னும் விவாகரத்து வேண்டும் என்ற கோரிக்கையில் உறுதியாக இருக்கிறீர்களா என்று நீதிபதி கேட்டார். உடனே செளரப் தனக்கு எதிர்திசையில் நின்று கொண்டிருந்த ஷிகாவைப் பார்த்து லேசாகச் சிரித்தார். அந்தச் சிரிப்பு இத்தனை ஆண்டுகளாக செளரப் மீது இருந்த வெறுப்பைக் கரைய வைத்தது.

ஷிகா தன்னிடம் இருந்த விவாகரத்து ஆவணங்களை கோர்ட் அறைக்குள் கிழித்துப்போட்டார். அவர் நேராக தனது கணவரிடம் ஓடிச்சென்று அவரைக் கட்டிப்பிடித்துக்கொண்டார். இருவரும் ஆனந்தக்கண்ணீர் வடித்தனர். இதனால் கோர்ட்டில் ஒரே அமைதி நிலவியது.

இருவரும் திடீரென ஒன்று சேர்ந்தது கோர்ட்டில் உணர்ச்சிப்பூர்வமான ஒன்றாக அமைந்தது. இருவரும் ஒருவருக்கொருவர் தங்கள் மீதுதான் தவறு இருப்பதாகச் சொல்லிக்கொண்டனர்.

பீகார்: 17 வயது சிறுவனை திருமணம் செய்த 22 வயது பெண்; பஞ்சாயத்திற்கு வந்த விவகாரம்; என்ன நடந்தது?

பீகார் மாநிலம் மதுபுரா மாவட்டத்தில் இருக்கும் கிராமத்தில் வசிப்பவர் பூஜாகுமாரி(22). இவருக்குப் பக்கத்து வீட்டில் வசிக்கும் பித்து குமார்(17) என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் வீட்டிற்க... மேலும் பார்க்க

செயற்கை கருத்தரிப்பு மைய குளறுபடியால் மாறிய கரு? "பிறந்தது எங்கள் குழந்தைகள் அல்ல" - தம்பதி புகார்

டெல்லி அருகில் உள்ள குருகிராமைச் சேர்ந்த தம்பதியான ராகுல் மற்றும் மீனு தம்பதி செயற்கை முறையில் (Vitro Fertilisation) குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்தனர். இதற்காக டெல்லியில் உள்ள டாக்டர் கைலாஷ் கருத்... மேலும் பார்க்க

விஜய் : எம்.ஜி.ஆர் பாணியில் `வாள்' காணிக்கை - கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் தரிசனம்!

டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் முடித்த கையோடு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று லேண்ட் ஆனது மங்களூரில். அங்கே புகழ்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தார். கூடவே, மூகாம்பி... மேலும் பார்க்க

`ஆண் சடலங்களின் அந்தரங்க உறுப்பை ஒப்பிட்டு பேசுவோம்' - காமெடி ஷோவில் பெண் டாக்டர் சர்ச்சை கருத்து

மும்பையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கே.இ.எம்.மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் படித்தவர் டாக்டர் சாஜல் பவார். இவர் மருத்துவமனையின் பிரேத பரிசோதனை தொடர்பான பயிற்சியின் போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை... மேலும் பார்க்க

திறந்துக் கிடந்த வீட்டின் கேட்; சாலைக்குத் தவழ்ந்து வந்த குழந்தை; சாமர்த்தியமாகச் செயல்பட்ட டிரைவர்!

கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டம் கொண்டோட்டியிலிருந்து வலியபறம்பு செல்லும் 'சபா மர்வா' என்ற தனியார் பேருந்து பயணிகளுடன் சென்றுகொண்டிருந்தது. பேருந்து கிணறுபடி என்ற பகுதியில் வளைவான சாலையில் பேருந்து சென... மேலும் பார்க்க

இடி தாக்கி இறந்த காளை; ஏர்கலப்பையில் மனைவியைப் பூட்டி உழவடித்த விவசாயி - முதல்வரை உலுக்கிய சம்பவம்!

இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில்தான் அதிக அளவு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் நடக்கின்றன. சமீபத்தில் மகாராஷ்டிரா அரசு விவசாயிகளின் வங்கிக்கடனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இரண்டு லட்சம் ர... மேலும் பார்க்க