செய்திகள் :

சபரிமலை தங்கக் கொள்ளை: குற்றம்சாட்டப்பட்ட நிறுவனத்தின் வக்கீல் அரசு வழக்கறிஞரா? எதிர்ப்பால் ராஜிநாமா

post image

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் துவாரபாலகர்கள் சிலையில் 2019-ம் ஆண்டு தங்க முலாம் பூசியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டு குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே தடினமாக இருந்த தங்கப் பூச்சைத் திருடிவிட்டு மெல்லியதாக தங்கம் பூசி மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் சென்னையைச் சேர்ந்த 'ஸ்மார்ட் கிரியேஷன்ஸ்' நிறுவனத்தின் உரிமையாளரும் தலைமைச் செயல் அதிகாரியுமான பங்கஜ் பண்டாரி 9-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

'ஸ்மார்ட் கிரியேஷன்ஸ்' நிறுவனத்தில்தான் தங்கம் பிரிக்கப்பட்டதாக சிறப்பு புலனாய்வுக் குழு கண்டறிந்தது. இந்த வழக்கில் ஸ்மார்ட் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் வழக்கறிஞராக கே.பி.பிரதீப் செயல்பட்டார்.

தொடக்கக் காலத்தில், பங்கஜ் பண்டாரி மற்றும் அவரது நிறுவனத்திற்காக ஊடகங்களிடம் பேசியது வழக்கறிஞர் கே.பி.பிரதீப் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வி.டி.சதீசன் தலைமையிலான காங்கிரஸ் அரசு சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில் அரசு வழக்கறிஞராக கே.பி.பிரதீப்பை நியமித்தது. இதன் மூலம் அரசு தரப்பு தகவல்கள் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்குக் கைமாற வாய்ப்பு உள்ளதாக விமர்சனம் எழுந்தது.

கேரள முதல்வர் வி.டி.சதீசன்
கேரள முதல்வர் வி.டி.சதீசன்

தேவசம்போர்டு தொடர்பான வழக்குகளில் ஆஜராகி வந்த அனுபவத்தின் அடிப்படையில் அவருக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டது. ​இருப்பினும், குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக வாதாடிய ஒருவரை, அரசுத் தரப்பு வழக்கறிஞராக நியமிப்பது முறையானதுதானா என்ற கேள்வி எழுந்தது.

இதுபற்றி கருத்து தெரிவித்த தேவசம்போர்டு அமைச்சர் கே.முரளீதரன், "குற்றம் சாட்டப்பட்ட தரப்பின் பலவீனங்களை அறிந்த ஒரு நபர் அரசு வழக்கறிஞராக இருப்பது நல்லதுதான். அரசு வழக்கறிஞரை நியமிக்கும் அதிகாரம் முதலமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

அந்த அமைச்சரவைக் கூட்டத்தில் நான் பங்கேற்கவில்லை. இருப்பினும், அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுக்கு அமைச்சர்கள் கட்டுப்பட வேண்டும், அது கூட்டுப் பொறுப்பு. இந்தத் தங்கக் கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் எக்காரணம் கொண்டும் தப்பிக்க முடியாது" என்றார்.

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில்
சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில்

தேவசம்போர்டில் இதற்கு முன்பு 'மூத்த அரசு வழக்கறிஞர்' பதவி மட்டுமே இருந்தது. தற்போது மூன்று 'சிறப்பு அரசு வழக்கறிஞர்கள்' பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதேசமயம் தேவசம்போர்டு ​சிறப்பு அரசு வழக்கறிஞராக கே.பி.பிரதீப் நியமனம் செய்யப்பட்டது விவாதத்தை ஏற்படுத்தியது.

எதிர்க்கட்சியும் இந்த நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தது. அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டதை அடுத்து முதல்வர் பினராயி விஜயன் வழிகாட்டுதல்படி அரசு வழக்கறிஞர் பதவியை ராஜிநாமா செய்தார் கே.பி.பிரதீப்.

பதவி வழங்கப்பட்ட 24 மணி நேரத்துக்குள் அவர் அரசு வழக்கறிஞர் பதவியை ராஜிநாமா செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் பாணியில் ஆபீஸில் மதிய சாப்பாடு; பவானிசாகர் எம்எல்ஏ ரீல்ஸ்! எதிர்க்கட்சியினர் சொல்வதென்ன?

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதியின் த.வெ.க வேட்பாளராகப் போட்டியிட்டவர் தமிழ்ச்செல்வி. தனக்கு எதிராக களத்தில் நின்ற தி.மு.க கூட்டணியைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர், அ.தி.மு.க வேட்பாளர் ... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: கடன்கள், ஏறும் டீசல் விலை... 60 நாட்களுக்குப் பிறகு பாயக் காத்திருக்கும் படகுகள்

"ஆழ்கடல் மீன்பிடி தடைக்காலம் முடிஞ்சாச்சு. இனி எப்படியாவது கடலுக்குப் போய் நம்ம வண்டியை ஓட்டணும். ஆனா, முன்ன மாதிரி இப்ப நிம்மதியா தொழில் பண்ண முடியலை" என்று பெருமூச்சுடன் கூறுகிறார் புதுக்கோட்டை மாவட... மேலும் பார்க்க

"தன் மகனை அரசியலுக்குள் கொண்டுவர எடப்பாடி பழனிசாமி டிராமா செய்கிறார்" - சி.வி.சண்முகம் தாக்கு

அதிமுக எம்.எல்.ஏ சி.வி.சண்முகம் திண்டிவனத்தில் இன்று (ஜூன்.14) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். ''அதிமுகவின் நிலைமை எப்படி இருக்கிறது என்பதைப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். நடந்து முடிந்த... மேலும் பார்க்க

"கனத்த இதயத்துடன் என்னை விடுவித்துக் கொள்கிறேன்"- அதிமுகவில் இருந்து விலகிய கௌதமி

நடிகை கெளதமி அதிமுகவில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "கழக அடிப்படை உறுப்பினர் மற்றும் கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவி... மேலும் பார்க்க

'அமெரிக்கா-ஈரான் இடையேயான அமைதி ஒப்பந்தம் எப்போது கையெழுத்தாகிறது?' - ட்ரம்ப் சொல்வது என்ன?

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போரை நிறுத்த தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால் இன்னும் ஒப்பந்தம் கையெழுத்தாகாமல் இழுபறியாகவே இருக்கிறது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இன்று அமைதி... மேலும் பார்க்க

``பாஜகவுக்கு ஆதரவாக ராகுல் காந்தி; மோடியைத்தான் கட்டிப்பிடிப்பார்" - பினராயி விஜயன் விமர்சனம்

ஜூன் 8 - அன்று 'இந்தியா' (INDIA) கூட்டணியின் தலைவர்கள் சந்தித்து தங்கள் கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என முடிவெடுத்தனர். 'இந்தியா' கூட்டணிக் கூட்டத்திற்குச் சில நாட்களுக்கு முன்பே, சிபிஐ(எம்)-ன் பொது... மேலும் பார்க்க