செய்திகள் :

சுட்டிக் காட்டிய ஜூ.வி... ஆக்சனில் இறங்கிய அமைச்சர்... வைகை அணை தூர்வாருவது குறித்து ஆய்வு

post image

மதுரை, தேனி, திண்டுக்கல், இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கு முக்கிய குடிநீர் ஆதரமாக இருப்பது வைகை அணை.

அதோடு வைகை அணையிலிருந்து வரும் நீரை வைத்தே இந்த மாவட்டங்களிலெல்லாம் விவசாயம் நடைப்பெற்று வருகிறது. சுமார் 68 ஆண்டுகளுக்குப் பிறகு வைகை அணையின் நீர் மட்டம் 20 அடிக்கும் கீழ் சென்றது, இதனால் மதுரை, தேனி மாவட்டங்களில் தண்ணீருக்காக எடுக்கும் நீரின் அளவு குறைந்து, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இது குறித்து 14/06/2026 தேதியிட்ட ‘ஜுனியர் விகடன்’ இதழில் கட்டுரை வெளியிட்டு இருந்தோம். அதில் வைகை அணையில் 20 அடிக்கு வண்டல் மண் மற்றும் மணல் இருக்கிறது.

இதனால் அணையின் அடி மட்டம் சேரும், சகதியாக இருக்கிறது. இந்தக் காரணங்களால் நீர் கலங்கலாக இருப்பதோடு நீரைத் தேக்கி வைப்பதிலும் சிக்கல் இருக்கிறது; வைகை அணையைத் தூர்வார வேண்டும் என விவசாயிகள், சமூக ஆர்வலர்களின் பேட்டிகளுடன் கட்டுரை வெளியிட்டு  இருந்தோம்.

ஜூ.வி. இதழ் வெளியான நான்காவது நாளான நேற்று வைகை அணைய தூர்வாருவது குறித்து தேனி மாவட்ட ஆட்சியர் வைத்திநாதனுடன் நேரில் சென்று ஆய்வு செய்திருக்கிறார் மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர், நிர்மல்குமார்.

வைகை அணை
வைகை அணை

ஆய்வு செய்து விட்டு பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், ”வைகை அணையில் தூர்வாரும் பணிகள் குறித்து தற்போது வரை ஆய்வு நடத்திக் கொண்டு வருகிறோம்.

இதற்காக மத்திய அரசிடம் ஒப்புதலைக் கேட்டு சில நாள்களுக்கு முன்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது ஒப்புதல் கிடைத்தவுடன்  தூர்வாரும் பணிகள் துவங்கப்படும்.

மூன்று கட்டங்களாகத் தூர்வாரும் பணிகள் மேற்கொண்டால் கூட முடிவு பெற 9 வருடம் ஆகும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதற்கு முன்பாகப் பணிகளை முடிப்பதற்குத் திட்டமிடக் கூறியிருக்கிறோம். வைகை அணையில் மணல் மேடுகளால் 20% நீர் தேக்க முடியாத சூழல் தற்போது உள்ளது. அதை நிவர்த்தி செய்யும் பணிகளில் மேற்கொள்ள உள்ளோம்.

70 ஆண்டுகளாக வைகை அணையில் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ளப்படவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது. விவசாயிகள் அல்லாத தனிநபர்கள் வண்டல் மண் எடுப்பது குறித்து அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். அது குறித்து தகவல் கிடைத்தால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

அமைச்சர் ஆய்வு
அமைச்சர் ஆய்வு

மேகமலை வனப்பகுதிகளில் பல நூறு ஆண்டுகளாக வசித்து வரும் மலைவாழ் மக்களை வனத்துறை வெளியேற்றுவது குறித்த கேள்விக்கு, ‘'இயற்கை வளங்களைத் தொந்தரவு செய்யாமல் மலைவாழ் மக்களள் அவர்கள் இருக்கும் இடத்தில் வசிக்கலாம். அதே போல் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதிலும்  ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் '' எனத் தெரிவித்துள்ளார்.

'அமெரிக்கா-ஈரான் இடையேயான அமைதி ஒப்பந்தம் எப்போது கையெழுத்தாகிறது?' - ட்ரம்ப் சொல்வது என்ன?

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போரை நிறுத்த தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால் இன்னும் ஒப்பந்தம் கையெழுத்தாகாமல் இழுபறியாகவே இருக்கிறது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இன்று அமைதி... மேலும் பார்க்க

``பாஜகவுக்கு ஆதரவாக ராகுல் காந்தி; மோடியைத்தான் கட்டிப்பிடிப்பார்" - பினராயி விஜயன் விமர்சனம்

ஜூன் 8 - அன்று 'இந்தியா' (INDIA) கூட்டணியின் தலைவர்கள் சந்தித்து தங்கள் கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என முடிவெடுத்தனர். 'இந்தியா' கூட்டணிக் கூட்டத்திற்குச் சில நாட்களுக்கு முன்பே, சிபிஐ(எம்)-ன் பொது... மேலும் பார்க்க

அதிமுக - தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறது ஜிகே வாசன் தமிழ் மாநில காங்கிரஸ் ?

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் ஜிகே வாசன் தலைமையில் இன்று சென்னையில் நடைபெறுகிறது. கடந்த 2019ம் ஆண்டு முதல் அதிமுக - தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது. ... மேலும் பார்க்க

"அண்ணாமலைக்கும், ஆட்டு மந்தை போல் பின்னால் போனவர்களுக்கும் பாஜக-வின் கொள்கை புரியவில்லை" - இப்ராஹிம்

"பள்ளிகளில் இந்து மத அடையாளங்களுக்கு அனுமதி மறுக்கப்படும் சூழலில், இஸ்லாமிய நம்பிக்கையான புர்காவிற்கு மட்டும் எப்படி அனுமதி வழங்கப்படுகிறது?" என்று கேள்வி எழுப்பியுள்ளார் பாஜக சிறுபான்மை அணியின் தேசிய... மேலும் பார்க்க

அதிமுக-வில் மிதுனுக்கு முக்கிய பொறுப்பு? நிர்வாகிகள் வலியுறுத்தல்; கவனம் பெற்ற கே.பி முனுசாமி பேச்சு

தேர்தல் தோல்விக்கு பின்னர், கட்சியின் நிர்வாகிகளை மாவட்ட வாரியாக சந்திக்க அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு இன்று காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளை சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவல... மேலும் பார்க்க

'ஆபரேஷன் இரட்டை இலை' - மதுராந்தகத்தில் ர.ர-க்களின் பிரமாண்ட இணைப்பு விழா; தவெக போடும் ஸ்கெட்ச்!

அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் சிலர் இன்று பனையூரில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்திருந்தனர். கடந்த வாரம்தான் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, எம்.சி.சம்... மேலும் பார்க்க