செய்திகள் :

அதிமுக - தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறது ஜிகே வாசன் தமிழ் மாநில காங்கிரஸ் ?

post image

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் ஜிகே வாசன் தலைமையில் இன்று சென்னையில் நடைபெறுகிறது.

கடந்த 2019ம் ஆண்டு முதல் அதிமுக - தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது. 2024ம் ஆண்டு பாஜக கூட்டணியை விட்டு அதிமுக வெளியேறிய போது தமிழ் மாநில காங்கிரஸ் தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே நீடித்தது. கடந்த 2026ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கூட 5 இடங்கள் தமாகாவிற்கு ஒதுக்கப்பட்டு பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிட்டு ஒரு இடத்திலும் அக்கட்சி வெற்றிபெறவில்லை.

ஜி.கே.வாசன்
ஜி.கே.வாசன்

இந்நிலையில் இன்று சென்னையில் நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் அதிமுக - தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கட்சியின் நலன் கருதியும், அடுத்த கூட்டணி தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரத்தை ஜிகே வாசனுக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

வளமான தமிழகம் வலிமையான பாரதம் என்ற கோட்பாட்டுடன் மூப்பனார் தொடங்கிய தமிழ் மாநில காங்கிரஸை 2014ம் ஆண்டு மீண்டும் கட்டமைத்தார் ஜிகே வாசன். ஞானதேசிகன், பீட்டர் அல்போன்ஸ் என பல காங்கிரஸ் தலைவர்கள் அவர் பின்னால் அன்று சென்றாலும், நாளாக நாளாக ஒவ்வொருவராக வெளியேறினர்.

2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தாமரை சின்னத்தில் போட்டியிட முடிவெடுத்ததும் பல மாநில மாவட்ட நிர்வாகிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியில் இருந்து வெளியேறினர். கட்சியின் மாநில பொதுசெயலாளர் யுவராஜாவும் விரைவில் தவெகவில் இணைகிறார்.

இந்நிலையில் அதிமுக - தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜிகே வாசன் வெளியேறும் நிலையில், காங்கிரஸ் இல்லாத தற்போதைய திமுக தலைமையிலான கூட்டணியை நோக்கி ஜிகே வாசன் நகர்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

'அமெரிக்கா-ஈரான் இடையேயான அமைதி ஒப்பந்தம் எப்போது கையெழுத்தாகிறது?' - ட்ரம்ப் சொல்வது என்ன?

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போரை நிறுத்த தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால் இன்னும் ஒப்பந்தம் கையெழுத்தாகாமல் இழுபறியாகவே இருக்கிறது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இன்று அமைதி... மேலும் பார்க்க

``பாஜகவுக்கு ஆதரவாக ராகுல் காந்தி; மோடியைத்தான் கட்டிப்பிடிப்பார்" - பினராயி விஜயன் விமர்சனம்

ஜூன் 8 - அன்று 'இந்தியா' (INDIA) கூட்டணியின் தலைவர்கள் சந்தித்து தங்கள் கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என முடிவெடுத்தனர். 'இந்தியா' கூட்டணிக் கூட்டத்திற்குச் சில நாட்களுக்கு முன்பே, சிபிஐ(எம்)-ன் பொது... மேலும் பார்க்க

சுட்டிக் காட்டிய ஜூ.வி... ஆக்சனில் இறங்கிய அமைச்சர்... வைகை அணை தூர்வாருவது குறித்து ஆய்வு

மதுரை, தேனி, திண்டுக்கல், இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கு முக்கிய குடிநீர் ஆதரமாக இருப்பது வைகை அணை.அதோடு வைகை அணையிலிருந்து வரும் நீரை வைத்தே இந்த மாவட்டங்களிலெல்லாம் விவசாயம் நடைப்பெற்று வருக... மேலும் பார்க்க

"அண்ணாமலைக்கும், ஆட்டு மந்தை போல் பின்னால் போனவர்களுக்கும் பாஜக-வின் கொள்கை புரியவில்லை" - இப்ராஹிம்

"பள்ளிகளில் இந்து மத அடையாளங்களுக்கு அனுமதி மறுக்கப்படும் சூழலில், இஸ்லாமிய நம்பிக்கையான புர்காவிற்கு மட்டும் எப்படி அனுமதி வழங்கப்படுகிறது?" என்று கேள்வி எழுப்பியுள்ளார் பாஜக சிறுபான்மை அணியின் தேசிய... மேலும் பார்க்க

அதிமுக-வில் மிதுனுக்கு முக்கிய பொறுப்பு? நிர்வாகிகள் வலியுறுத்தல்; கவனம் பெற்ற கே.பி முனுசாமி பேச்சு

தேர்தல் தோல்விக்கு பின்னர், கட்சியின் நிர்வாகிகளை மாவட்ட வாரியாக சந்திக்க அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு இன்று காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளை சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவல... மேலும் பார்க்க

'ஆபரேஷன் இரட்டை இலை' - மதுராந்தகத்தில் ர.ர-க்களின் பிரமாண்ட இணைப்பு விழா; தவெக போடும் ஸ்கெட்ச்!

அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் சிலர் இன்று பனையூரில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்திருந்தனர். கடந்த வாரம்தான் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, எம்.சி.சம்... மேலும் பார்க்க