"நான் யார்ன்னு சொல்லியும் போலீஸ் என்ன அடிச்சாங்க" - வங்கதேச வீரர் பரபரப்புக் குற...
'அமெரிக்கா-ஈரான் இடையேயான அமைதி ஒப்பந்தம் எப்போது கையெழுத்தாகிறது?' - ட்ரம்ப் சொல்வது என்ன?
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போரை நிறுத்த தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
ஆனால் இன்னும் ஒப்பந்தம் கையெழுத்தாகாமல் இழுபறியாகவே இருக்கிறது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இன்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனத் தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப்பதிவில், "அமெரிக்கா-ஈரான் இடையேயான அமைதி ஒப்பந்தம் இன்று கையொப்பமாகும்.
ஒப்பந்தம் இறுதியானதும் ஹோர்முஸ் நீரிணை உடனே திறக்கப்படும். ஒப்பந்தம் கையெழுத்தாகும் பட்சத்தில் பிப். மாத இறுதியில் இருந்து நிலவும் மோதல் முடிவுக்கு வரும்.
ஈரானின் அணு ஆயுத திட்டத்துக்குத் தடை விதிக்கும் வகையில் ஒப்பந்தம் இருக்கும்.
அனைத்தும் சுமுகமாக முடிந்தால் ஈரானில் மீதமுள்ள அணு ஆயுதங்களையும் அமெரிக்கா அழிக்கும்.

முந்தைய ஒபாமா அரசாங்கத்தைப் போல ஈரானுக்கு நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களையோ அல்லது 1.7 பில்லியன் டாலர் ரொக்கப் பணத்தையோ இந்த முறை அமெரிக்கா வழங்காது.
இந்த ஒப்பந்தத்தில் எந்தவொரு பணப் பரிமாற்றமும் இருக்காது” என்று தெரிவித்திருக்கிறார்.
















