FIFA: 36 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையில் வெற்றி; ஹைட்டியை ஸ்காட்லாந்து வீழ...
பீகார்: 17 வயது சிறுவனை திருமணம் செய்த 22 வயது பெண்; பஞ்சாயத்திற்கு வந்த விவகாரம்; என்ன நடந்தது?
பீகார் மாநிலம் மதுபுரா மாவட்டத்தில் இருக்கும் கிராமத்தில் வசிப்பவர் பூஜாகுமாரி(22). இவருக்குப் பக்கத்து வீட்டில் வசிக்கும் பித்து குமார்(17) என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது.
இதையடுத்து இருவரும் வீட்டிற்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். இதனால் இரு குடும்பத்திலும் சிக்கல் ஏற்பட்டது. இது குறித்த பிரச்னை பஞ்சாயத்திற்குச் சென்றது. பஞ்சாயத்தில் இது குறித்து விசாரித்து தம்பதியைப் பிரித்துவிட முடிவு செய்தனர்.
அதோடு விசாரணையில் பையன் வீட்டினர் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் செலுத்தவேண்டும் என்றும், அந்தப் பணம் பெண் வீட்டிற்குக் கொடுக்கப்படவேண்டும் என்றும் தீர்ப்பளித்தனர். பஞ்சாயத்திலேயே பூஜாவை அவரது பெற்றோர் கட்டாயப்படுத்தி தங்களது வீட்டிற்கு இழுத்துச்சென்றனர்.
வீட்டிற்கு வந்த பிறகு அப்பெண்ணை பூஜாவின் பெற்றோர் அடித்து உதைத்தனர். பூஜாவின் தலைமுடியைப் பிடித்து இழுத்து கீழே தள்ளினர். அவர்கள் பூஜாவை வீட்டிற்கு வெளியில் போட்டு அடித்து உதைத்தனர்.
பூஜாவின் கழுத்தில் அவரது தந்தை மிதித்துக்கொண்டிருந்தார். பட்டப்பகலில் நடுத்தெருவில் நடந்த இச்சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இது தொடர்பான வீடியோ சமூக ஊடகத்தில் பரவியது. உடனே இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து அப்பெண்ணின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அப்பெண்ணைத் தங்களது கட்டுப்பாட்டில் எடுத்தனர். அப்பெண் முறைப்படி எழுத்துப்பூர்வமாகப் புகார் செய்துள்ளார்.



















